Posts

Showing posts from April, 2022

நிமித்தம் நாவல் பற்றிய பார்வை

  நிமித்தம் நாவல் பற்றிய பார்வை   கிராமத்தின் வாழ்வியலைப் பற்றி பேசுவதும் எழுதுவதுமே உற்சாகம் தருவதாகயிருக்கிறது . நகர வாழ்கைக்கு பொருந்திப் போய்விட்ட பலருக்கும் கடந்துபோன கிராம வாழ்வென்ற ஒன்று இருக்கிறது. கடந்து செல்லும் மேகங்களைப் போல கண்முன்னே வாழ்வு கடந்து போய்விடுவது துயரமாகத்தானிருக்கிறது. Life of Pi என்கிற திரைப்படத்தில் பையினுடைய குடும்பம் புலம்பெயர்ந்து செல்கிறார்கள். கப்பற்பயணத்தின் போது பை கடந்து வந்த பாதையினை திரும்பிப் பார்க்கும் காட்சி மனதினை நெகிழச் செய்வதாக எடுக்கப்பட்டிருக்கும். எஸ். ராவின் புத்தகத்தினுள் கணக்கிலடங்காத மனிதர்களும் ஊர்களும் கிராமங்களும் புதையுண்டு கிடக்கின்றன. பழைய டிரங்க்ப் பெட்டியினை து◌ாசி தட்டி பொருட்களை ஆராய்வதைப் போல அவருடைய கதைகள் மனித வாழ்வியலை ஆராய்கின்றன. அதன் சுவடுகளே எஸ். ராவின் புத்தகங்கள் உறுபசி, யாமம், உபபாண்டவம், நிமித்தம் , இடக்கைப் போன்ற புத்தகங்கள் மிக முக்கியமானவை. நிமித்தம் நாவலைப் பற்றி பேசுவதும், எழுதுவதும் பிரிந்து போன நண்பனைப் பற்றி வேதனையுறுவதற்கு சமமானது. காது கேளாதவனுடைய வாழ்வு புறம் சார்ந்த மனி...