செகண்ட் ஷோ நினைவுகள்
சினிமா பற்றி எழுத்தாளர் எஸ். ரா ஆற்றி வரும் உரை தனி சிறப்பானது. Bycycle theif, Psycho, cinema paradiso போன்ற திரைப்படங்கள் பற்றி அவர் பேசிய விதம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. அதுவும் cinema paradiso மனதின் பல நினைவுகளை கிளறி விடுகிறது. என்றோ பிரிந்து போன நண்பனை பார்த்த சந்தோஷமும் துக்கமும் ஏற்படுகிறது. எனக்கு சொந்த ஊர் கழுகுமலை. அங்கே ஒரு டூரிங் டாக்கிஸ் இன்றும் அப்படியே இடிந்து போன தியேட்டராக அதே நினைவுகளை சுமந்தபடி உள்ளது. நண்பர்களோடு திரைப்படம் பார்த்த நாட்களை அப்பாவோடு செகண்ட் ஷோ பார்த்த நினைவுகளை மறக்க முடியாது. நல்ல அனுபவத்தை தந்த உங்களுக்கு மறக்க முடியாத அன்பும் நன்றிகளும்! சினிமா என்றாலே படத்தை விட தியேட்டர்தான் எல்லோருக்கும் முதலில் நினைவு வரும். அதில் நடித்த நடிகர்கள், பாடல், சண்டை க் காட்சி என்று ஒரு படத்தை பார்த்துவிட்டு ஆண்டுகணக்கில் பேசிக் கொண்டே இருப்பவர்கள் தான் அதிகம். அதைவிட நம் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் எந்த தியேட்டரில் படம் பார்த்தோம் என்பது தான். பழைய 90's கால தியேட்டர்கள் மிக அழகானவையாக யிருந்தன. மர பெஞ்ச், தரை டிக்கெட், மண்ணை அள்ளி கூட்டி ...