Posts

Showing posts from May, 2023

ஜனநாயகமும் யாத்திசையும்

  அதிகாரத்தை கைப்பற்ற இந்த பூமியில் தான் எத்தனை போர்கள், யுத்தங்கள். ஆட்சியில் இருக்கும் அரசர்கள் தங்களது வீரத்தை நிலை நாட்டவும் அதிகாரத்தை தக்க வைக்கவும் எத்தனை உயிர்கள் பலியிடப் பட் டிருக்கிறது.  மனிதர்கள் வேட்டை யாடி சமூகமாக இருந்து தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொண்டு இனமாக உருமாற்றம் அடைந்து வாழ ஆரம்பித்த பொழுது தான் அதற்கு கென்று ஒரு வாழ்வியல், தலைவன், ஆட்சி அதிகாரம், கட்டுப்பாடுகள் விதிமுறைகள் என்று உருவாகி இருக்க வேண்டும். காட்டில் வாழும் விலங்குகள் அனைத்திற்கும் பசிதான் ஒரே இலக்கு. அதை போக்க போராடி வேட்டை யாடி இன்னொரு உயிரை இறையாக்கு கின்றன. மனிதர்கள் இயற்கையிலிருந்து உருமாற்றம் அடைந்து தாங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக் கொண்டதன் விளைவு அரசாட்சி முறை போர்கள். அரசாட்சி முடிந்து இன்றைக்கு ஜனநாயகம் நடைமுறைபடுத்தப் பட்டு விட்டாலும், மத அரசியல்,  அணு ஆயுத போர்கள்,  நிலப் பிரச்சனைகள் பழிவாங்குவதற்கு என்று இன்னும் போர்கள் நடந்து கொண்டே இருக்கிறது. உக்ரயின் ரஷ்ய இடையிலான சண்டை இதற்கு உதாரணம். இத்தனை அப்பாவி உயிர்களை கொன்று அதிகாரம் எனும் கருத்தியல் அடிப்ப...

எழுதி மகிழ்ந்த நாட்கள்

கல்லூரி படிக்கும் போது சிறுகதை போட்டிகளில் கலந்து கொள்வது நண்பர்களுடன் சேர்ந்து இலக்கியக் கூட்டம் நடத்துவது, இலக்கியம் சார்ந்து சிந்திப்பது என்று ஆரம்ப நிலை வாசகனாக இருந்தேன். அதன் அடிப்படையில் எழுத வேண்டும் என்ற பேராசையில் தான் இந்த புத்தகங்களை எழுதினேன். மூன்றாண்டுகள் எழுதியதை லேப்டாப்பில் தட்டச்சு செய்துதான் நானே புத்தகங்களை உருவாக்கினேன் . சில நாட்கள் லேப்டாப் பழுதடைந்த போது மொபைல் போனில் நோட்பேடில் டைப் செய்தேன். எப்படியாவது எழுத வேண்டும் புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. கரோனா பொது முடக்கம், உடலில் கட்டி வந்து மனைர் சர்ஜரி என்று மனதளவில் சோர்ந்து போய் இருந்த நாட்களில் எழுதுவதுதான் என்னை நானே மீட்டேடுத்துக் கொள்ள உதவியாக இருந்தது. எழுத விரும்புகிறவனாக இது என்னுடைய முதல் முயற்சிதான். நண்பர்கள் வாசித்து விட்டு விமர்சனங்கள், குறிப்புகளை புத்தகம் பற்றிய கருத்துக்களை வாட்ஸாப்ப், மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக தெரிய படுத்தினால் அடுத்து நான் எழுதுவதற்கு நிறைய கற்றுக்கொள்ள முடியும். எதாவது ஒரு வகையில் இந்த புத்தகம் உங்களுக்கு உதவியாகவும் உற்சாகபடுத்தினால் அதுவே எனக்க...

மருத்துவ வீரன்

  காலம்தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இயற்கையை பொறுத்த வரை காலம் வாழ்க்கை, மனிதர்கள் அனைவரும் கற்பனைகள் தான். இயற்கை எனும் மாய கண்ணாடியில் விழும் பிம்பங்கள்தான் மனிதர்கள். இதில் கடவுள் மனிதர்கள் உருவாக்கிய அழகான நல்ல கற்பனை. பிறப்பு மற்றும் மரணம் இயற்கையால் நிகழ்கிறது. சில மனிதர்கள் அந்த இயற்கையை வென்று விடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஹர்சவர்தன் என்ற டாக்டர் தனக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கி இருப்பது தெரிந்து தனது மனைவிக்கு விவாகரத்து கொடுத்து அவரது எதிர் கால வாழ்விற்கு அனைத்து ஏற்பாடு களையும் செய்த பின்னர் தைரியமாக தனது மரணத்தை எதிர்கொண்டார். பணி காரணமாக ஆஸ்திரேலியா சென்ற அவர் உடற்பயிற்சி செய்த போது ரத்த வாந்தி எடுத்தார். பரிசோதனை செய்து பார்த்ததில் புற்றுநோய் இருப்பது தெரிந்துகொண்டார். 2 ஆண்டுகளில் மரணம் நிச்சயம் என்பதை மருத்துவராக தெரிந்து கொண்டாலும் குடும்பம் உறவுகள் மனைவியிடம் ஆறுதல் சொல்லி உற்சாக படுத்தியுள்ளார். மேலும் மூன்றரை லட்சம் கொடுத்து தனக்கான சவ பெட்டியை அழகாக வடிவமைத்து மரணத்தை தைரியமாக எதிர் கொண்டுள்ளார். வாழவே ஆயிரம் பிரச்னை எதிர்கால பயம், மன க் கவலை...

அன்னாவெனும் பெரும் நினைவு

 அன்னா கரினீனா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? இந்த கேள்வி டால்ஸ்டாய் எழுதிய இந்த நாவலை வாசிக்கும் போது கண்டிப்பாக எழும்? இதனால் டால்ஸ்டாய் மீது கோபம் கூட வருகிறது. அன்னா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? திருமண ஆன பெண் தனது கணவரிடம் இருந்து காதல் அன்பு கிடைக்கவில்லை என்று திருமணத்திற்கு பிறகு தன்னை காதலிக்கும் இன்னொருவருவரை ஏற்றுக் கொண்டு வாழ்வது அவள் செய்த தவறா? உண்மையில் அன்னாவை கொன்றது கரீனினா அல்லது விரான்சிகியா? இல்லை அன்னாவெ முட்டாள்தனமாக முடிவெடுத்துக் கொண்டுவிட்டாளா? இல்லை டால்ஸ்டாயின் தனிப்பட்ட நிலைப்பாடா அனைத்திற்கும் மேலாக இந்த சமூகமா யார் அவளை கொன்றார்கள்? சரி தவறு போன்ற நிர்ணயங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையை வரையறை செய்யும் அதிகாரம் மதத்திற்கு எவ்வாறு வழங்கப்பட்டது. யார் அந்த மதிப்பீடுகளை உருவாக்கியது. மனிதர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், சுய தேர்வுகளை கட்டுப்படுத்தும் மதம், அரசியல் சட்டங்கள் ஏன் உருவாக்கப் பட்டிருக்கின்றன. சமூகத்தில் ஒரு பெண் செய்தது சரியா? தவறா என்று நீங்கள் தீர்மானிக்காதீர்கள் அதை அவளிடமே விட்டு விடுங்கள். என்று டால்ஸ்டோய் நாவலின் வழியாக சுட்டிகாட்டுகிறார்....