ஜனநாயகமும் யாத்திசையும்
அதிகாரத்தை கைப்பற்ற இந்த பூமியில் தான் எத்தனை போர்கள், யுத்தங்கள். ஆட்சியில் இருக்கும் அரசர்கள் தங்களது வீரத்தை நிலை நாட்டவும் அதிகாரத்தை தக்க வைக்கவும் எத்தனை உயிர்கள் பலியிடப் பட் டிருக்கிறது. மனிதர்கள் வேட்டை யாடி சமூகமாக இருந்து தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொண்டு இனமாக உருமாற்றம் அடைந்து வாழ ஆரம்பித்த பொழுது தான் அதற்கு கென்று ஒரு வாழ்வியல், தலைவன், ஆட்சி அதிகாரம், கட்டுப்பாடுகள் விதிமுறைகள் என்று உருவாகி இருக்க வேண்டும். காட்டில் வாழும் விலங்குகள் அனைத்திற்கும் பசிதான் ஒரே இலக்கு. அதை போக்க போராடி வேட்டை யாடி இன்னொரு உயிரை இறையாக்கு கின்றன. மனிதர்கள் இயற்கையிலிருந்து உருமாற்றம் அடைந்து தாங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக் கொண்டதன் விளைவு அரசாட்சி முறை போர்கள்.
அரசாட்சி முடிந்து இன்றைக்கு ஜனநாயகம் நடைமுறைபடுத்தப் பட்டு விட்டாலும், மத அரசியல், அணு ஆயுத போர்கள், நிலப் பிரச்சனைகள் பழிவாங்குவதற்கு என்று இன்னும் போர்கள் நடந்து கொண்டே இருக்கிறது. உக்ரயின் ரஷ்ய இடையிலான சண்டை இதற்கு உதாரணம்.இத்தனை அப்பாவி உயிர்களை கொன்று அதிகாரம் எனும் கருத்தியல் அடிப்படையில் நடக்கும் இந்த அதிகார போர்முறைகள் ஏன் இன்னும் கைவிடப் படவில்லை. தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்து அறிவியல் மனித வாழ்க்கை இயற்கையின் உச்சத்தை அடைந்த விட்ட போது ஜனநாயகம் தன்னை வளர்த்து கொள்ளமால் இன்னும் மறைமுகமாக மத, அதிகார, இன வன்முறைகளுக்கு எதிரான பழிவாங்கும் முயற்சி போன்ற கருத்தியளுக்காக போர்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. அதன் நவீன வடிவமே அணு ஆயுதம். இதான் பழைய வடிவமே போர் முறைகள்.
யாத்திசை திரைப்படம் பார்த்த விட்டு முதலில் தோன்றியது என்று தணியும் இந்த மனிதர்களின் அதிகார வெறி. என்று.
7ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய அரச ஆட்சியின் கெடுபிடியினையும் எயினர்கள், வேளிர் மரபை சேர்ந்த மக்கள் அவர்களுக்கான ஆட்சி முறை என்று வரலாற்று நினைவுகளை இந்த படம் பதிவு செய்திருக்கிறது. எயின மரபினரின் மொழி, கடந்த கால வாழ்க்கை, வாழ்வியல் முறைகள் அவர்களுடைய பழிவாங்கும் உணர்ச்சிகள் என்று திரைப்படம் மிக நுட்பமாக உருவாக்க பட்டிருக்கிறது.
பாண்டிய நாட்டு அரண்மனைகள், எயினர்கள் காடு கடந்து படையெடுக்கும் காட்சிகள் அவர்கள் பேசிக் கொள்ளும் நிஜமான பழங்கால மொழி மிக அழகாக ரசிக்கும் படியாக எடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தேவரெடியார்களின் நடனம் இசை அதற்கான காட்சி அமைப்புகள் கலைத் தன்மையுடன் இருந்தது.
சண்டை காட்சிகள் தத்ரூபமாக உருவாக்கபட்ட விதம் படம் பார்க்கும் போது சிலிர்த்துப்பையும் வீரர்களின் குரூர மனப்பாங்கையும் வெளிபடுத்துகிறது.
ஆனாலும் வழக்கம் போலவே வெறும் அரசர்கள் மற்றும் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் சண்டைகள் என்று மட்டுமே கதை நகர்கிறது. அந்த காலத்து மக்கள் அவர்கள் வாழ்வு, தொழில், பண்பாட்டு கலாச்சார முறைகள் மொழி, நம்பிக்கைகள் என்று எதுவும் காட்டப் படவில்லை. அதை பதிவு செய்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
குறிப்பாக வித்தியாசமான அனுபவமாக சண்டை காட்சிகள் படத்தின் வசனம் மற்றும் மொழி ரசிக்கும் படியான காட்சிகள் நல்ல திரை அனுப்பவத்தை தருகின்றன.
கொதீயும் அவனுடைய எயின இனத்தினரும் பாண்டிய நாட்டை முற்றுகை இடுவதற்கு முன்னர் ஒரு மனிதனை பலியிடும் காட்சி முக்கியமான வரலாற்று பதிவு. உலகம் முழுவதும் இப்படியான மனித உயிர்களை போர் செய்வதற்கு முன்னர் பலியிடும் நம்பிக்கை எப்படி வந்தது எது எந்த மாதிரியான நம்பிக்கை மனிதர்களுக்கு இடையிலான சண்டையில் மனிதனே பலியிடப் படுகிறான் கொல்லப் படுகிறான். காப்பாற்றப் படுகிறான். அனைத்து சுகங்களையும் வெற்றியின் வழியாக அனுபவிக்கிறான். அனைத்திற்கும் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்லது பழிவாங்குவது ஒன்றே காரணமாக இருக்கிறது. பாண்டிய ஆட்சியை பற்றிய படம் உருவாக்கப் படிருப்பது முக்கியமான வித்தியசமான புதிய முயற்சி.
இதுவரை சேர சோழ பாண்டியர்களை பற்றிய நிறைய கதைகள் வந்துள்ளன. குறிப்பாக சோழர்கள் பற்றிய கதைகள் திரைப்படமாக வந்துள்ளது. ஆனால் பாண்டியர்கள், எயினர்கள் மற்றும் வெளிர்கள், பல்லவர்கள் போன்றவர்களின் பற்றிய வரலாற்றினை பற்றி அதிகம் பேச பட வில்லை. யாத்திசை படம் இதற்கு மாற்று முயற்சியாக பாண்டிய எயின மரபினை வரலாற்றினை தழுவி உருவாக்கப்பட்டிருப்பது சினிமாவிற்கு நல்ல வளர்ச்சி தரும்.
உண்மையில் போர், யுத்தக் காட்சிகள், ராணுவம் போன்றவைகள் ஏதற்கு அரசாங்கத்திற்கு தேவை. ஜனநாயக அரசியலின் நோக்கம் சாதாரண மக்களின் வாழ்வதாரத்திற்கு மட்டுமே உள்ளதென்றால் எதற்கு இத்தனை ஆயுதங்கள், போர் முறைகள், ராணுவம். நாட்டின் வளத்தை பாதுகாக்க எல்லையை பாதுகாக்க தீவிரவாதம் அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்க என்பது ஏற்றுக் கொள்ள முடிகிறது என்றாலும் அப்பாவி மக்கள் பலியாவது என்பது நாம் ஏற்றுக்க் கொள்ள முடியாத விஷயம்.
யாத்திசை வித்தியாசமான அதே சமயம் ஆழமான கேள்விகளை சிந்தனையை தூண்டும் விதமாக திரைப்படமாக எடுக்கப் பற்றிருப்பது நல்ல முயற்சி.
Comments
Post a Comment