நகரம் அல்லது நரகம்...!
1. நகரம் - சுஜாதா எல்லா மனிதர்களும் எளிதாக மருத்துமனையில் சிகிச்சை எடுப்பது எளிதானதில்லை. அதுவும் பண வசதி இல்லாதவர்கள் மகளுக்கோ அம்மாவிற்கோ உடல் சரியில்லை என்றால் மருத்துவமனை சாதாரண மக்களுக்கு எந்த வகையில் செயல்படுகிறது என்பதை மிக யதார்த்தமாக சுஜாதா இந்த கதையில் எழுதியுள்ளார். நமது உறவினர்களுக்கோ அல்லது நமக்கோ கூட உடல்நிலை சரியில்லை என்றால் நாம் மருத்துவமனை செல்கிறோம். மருத்துவ பரிசோதனை முடிந்து அட்மிட் ஆவதே பெரிய மலைப்பாக இருக்கிறது . OP சீட், ஸ்கேன், அட்மிசன் note என்று ஒவ்வொரு பிரிவாக அலைய வேண்டும். அப்படி அலையும் போது கவனக் குறைவாக எதையாவது தொலைத்துவிட்டால் மறுபடியும் முதலில் இருந்து அலைய வேண்டும். இந்த கதையில் வரும் வள்ளியம்மாள் உலகம் தெரியாத பேதையாக இருக்கிறாள். மருத்துவமனையில் பயன்படுத்துகிற வார்த்தைகள் அவளுக்கு புரியவில்லை. மகளை எப்படியவது காப்பாற்றிவிட வேண்டும் என அவள் நினைக்கும் மனதையும் பாசத்தையும் சுஜாதா சொல்லாமலேயே புரியவைத்து விடுகிறார். மருத்துவமனை இடங்கள் அவளுக்கு புரியாமல் வழி தவறி பதறி அலைகிறாள். வழி தெரியாமல் நிற்கும் குழந்தையை போல அவள் உடைந்து அழும்...