சாதித்த கேப்டன் அவர்கள்...!
வைதேகி காத்திருந்தாள் வெள்ளச்சாமி கதாபாத்திரத்தை யாராலும் மறக்கவே முடியாது. விஜயகாந்த் சார் நடித்த படங்களில் சின்ன கவுண்டர், ரமணா, வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், புலன் விசாரணை, எங்கள் அண்ணா, பெரியண்ணா, அம்மன் கோவில் கிழக்காலே போன்ற திரைப்படங்கள் மிக சிறப்பானவை. ரமணா படம்தான் எனக்கு மிக பிடித்த படம். ரமணா படத்தின் இறுதி காட்சியில் கேப்டன் அவர்கள் பேசிய கிளைமேக்ஸ் வசனம். பல்லாயிரம் கணக்கான மக்கள் முன்னால் சமூகத்தை பற்றியும் எதிர்கால இந்தியாவைப் பற்றியும் அவர் ஆற்றிய உரை என்றைக்கும் மறக்க முடியாது. இந்த இடத்தில் இருந்துதான் கேப்டன் அவர்களின் அரசியலை நாம் புரிந்து கொள்ள முடியும். ஊமை விழிகள் தொடங்கி புலன் விசாரணை, நரசிம்மா போன்ற சமூக படங்களில் போலீஸ் வேடங்களில் அவர் நடித்த பங்களிப்பு அவர் உண்மையாகவே சமூக அக்கறைகொண்ட மனிதனாக மாற உதவியது. கேப்டன் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கி என்ன சேவை செய்ய வேண்டும் என நினைத்தார்? அவர் லட்சியம் என்ன? அவர் வாழ்க்கை மூலம் நாம் என்ன புரிந்து கொள்ள முடியும் என்று யோசிக்க வேண்டும். திரைப்படங்களில் எந்த காட்சியில் வசனம் பேசினாலும் ம...