ஆறுதல் கடிதங்கள்....!
வாழ்க்கை யாவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதிலும் யாரும் யாருடனும் கடைசி வரை இருக்கப்போவதில்லை. இளமை முடிந்து முதிய வயதில் தனிமையில் மனிதர்கள் அனுபவிக்கும் துயரம் மிக கொடுமையானது. இளம் வயதில் மனம் போன போக்கில் சுற்றி அலைந்த கால்கள் இறுதியில் செயல் பட முடியாமல் போன துயரம் யாருக்கும் நடக்கக் கூடாது என்று நாமும் நினைக்கிறோம். கடவுளை வேண்டிக்கொள்கிறோம். வாழ்வின் மிகப்பெரும் துயரங்களில் தனித்து விடப்படுதலும், பிரிவும் தான். அதுவும் பிரிவை விட மனிதனை நிலை குலையச் செய்வது எதுவும் இல்லை. உயிருக்கு உயிரான காதலை, குடும்பத்தை, நண்பர்களை, முகம் தெரியாத எத்தனையோ நல்ல அன்பான உறவுகளை நாம் பிரிந்து விட்டிருக்கிறோம். அதுவும் சிறு வயதில் உடன் வாழ்ந்த நண்பர்கள், சொந்த ஊரை பிரிவது மறக்க முடியாத நினைவாக மாறி விடும். அனைத்து ஆட்டங்களும் அடங்கிய பின்னர் முதிய வயதில் படுத்த படுக்கையாகி விட்ட பின்னர் நினைவு களைத் தவிர வேறெதுவும் மிஞ்ச போவதில்லை. தீலிப் குமார் எழுதிய கடிதங்கள் சிறுகதை முதிய வயதில் அடையும் மன நெருக்கடிகள் பற்றி எழுதப் பட்டுள்ளது. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்...