ஜே. கேயின் சிங்க பெண்...!
சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பெண்ணின் குரலை பேசுகிறது . ஆனால் அந்த பெண்ணின் குரல் வழியாக ஜெய காந்தன் பேசுகிறார். நாவலை காலேஜ் படிக்கும் போது முதன் முறையாக வாசித்தேன். அதன் பின்னர் 9 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் வாசிக்கிறேன். ஆச்சர்யம் என்ன வேனில் அதன் மாறாத மொழியும் சிந்தனையும். ஒரு முழு நாவலையும் தனி மனித சிந்தனையோடு இயல்பாக யதார்த்தப் பார்வையோடு சொன்னது சிறப்பம்சம். ஜெ.கே இந்த நாவலை எழுதிய கால கட்டத்தையும் இன்றைய கால கட்டத்தையும் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. குறிப்பாக அன்றைய பெண்களின் சிந்தனை, வாழ்வியல் மற்றும் சமூக நிலை. இன்றைய பெண்களின் சமூக நிலை என்று வேறுபடுத்தி பார்த்து சிந்திக்க முடிகிறது. இன்றைக்கு அரசியலில் இட ஒதுக்கீடு, சொத்துரிமை, பெண் சுதந்திரம், பெண்களின் பாதுகாப்பு என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அந்த சிந்தனையின் விளைவாக பெண்கள் வாழ்வில் எதாவது முன்னேற்றம் நடந்துள்ளதா? பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டுள்ளதா? ஆண் - பெண் சமத்துவம் நடைமுறைப் படுத்தபட்டுள்ளதா? என்றும் நாம் பல வகையில் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த நாவல் நாம் தெரிந்து கொள்ளாத பெண்ணின் கதைய...