Posts

Showing posts from August, 2024

கூழாங்கல் - பெண்கள்...!

Image
இந்திய சினிமாவில் சத்யஜித்ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி திரைப்படத்தைப் போலவே வினோத் இயக்கிய கூழாங்கல் திரைப்படம். ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் ஓடக் கூடிய யதார்த்தவாத திரைப்படம். இந்தத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருதினை பெற்றுள்ளது. தமிழ் சினிமா பெரும்பாலும் கமர்சியல், வணிக பிடியில் சிக்கியுள்ள சூழலில் கூழாங்கல் போன்ற யதார்த்தவாத திரைப்படங்கள் புதிய வரவேற்பை பெறக் கூடியது . சினிமாவில் மாற்று முயற்சியாக புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நிஜத்தை அப்படியே படம் பிடிப்பது ஒரு முறை என்றாலும் கொஞ்சம் அழகியல் நோக்கோடு கலைத் தன்மையோடு புனைவோடு எடுக்கப்பட்ட படங்களும் முக்கியம்தான். ஆனால் கூழாங்கல் இது வரை தமிழ் சினிமாவின் மொழியை உடைத்து புதிய பாணியில் உருவாக்கப் பட்டிருப்பது அதன் சிறப்பம்சம்.  பெண்களின் வாழ்க்கை கூழாங்கற்களைப் போலவேயிருக்கிறது.  ஒவ்வொரு பெண்ணும் ஒரு வகையில் கூழாங்கல்தான். கொஞ்சம் தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்தி பார்த்தால் கூழாங்கற்களின் அழகு மிக மினு மினுப்பூட்டக்கூடியது.  ஆனால் அதை வாயில் போட்டு சுவைப்பதால் ஒரு பயனும் இல்லை. அதை உடைத்துப் ...

பசியெனும் கடவுள்....!

Image
ஆடு ஜீவிதம் திரைப்படம் யாராலும் எளிதாக கடந்து போக முடியாத ஒன்று. வாழ்வின் இன்னொரு பக்கத்தை யாருக்கும் யாராலும் யாருக்காகவும் நடந்து விடக் கூடாது என்று நாம் பதைபதைப்போலவே படம் பார்க்கும் போது உணர முடிந்தது. ப்ரித்வி ராஜ் நடித்த விதம் மிக நுட்பமாக உணர்ச்சி பூர்வமாக இருந்தது.  குடும்பத்தை பிரிந்து வேலைக்காக வெளியூருக்கோ வெளி நாடுகளுக்கோ செல்லும் மனிதர்கள் அடையும் நெருக்கடியும் வேதனையையும் படம் மிக ஆழமாக நுட்பமாக காட்சிபடுத்தியுள்ளது.  கிராமத்தில் சிறு வயதில் துபாய் போய் ஒட்டகம் மேய்க்க போறியா என்று கேலியும் கிண்டலுமாக பேசிய வார்த்தைகளின் அர்த்தம் இன்று நாம் யாரும் சற்றும் நினைத்து பார்க்க முடியாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  புலம் பெயர் மனிதர்கள் அடையும் நெருக்கடிகளும் மொழி தெரியாமல் அவர்கள் அடையும் சங்கடமும் நாம் முக்கியமாக பேச வேண்டிய விஷயம். சொந்த நாட்டில் வாழ வழி இல்லாமல் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக ஏன் இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும்? வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஏன் இந்திய அரசின் எந்த பாதுகாப்பு குரலும் இல்லை என்பது ஏமாற்றத்தையே தருகிறது. படத்த...