Posts

Showing posts from June, 2024

ரோஹித்தின் சூப்பர் எட்டு...!

Image
Thu, 13 june 2024, USA உடனான இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக சூர்யாகுமார் யாதவ் கேட்ச் USA அணியினர் தவற விட்டது தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஒரு வேளை அவர் அவுட் ஆகி இருந்தால் ஆட்டத்தி பிரஷர் கூடி மேலும் விக்கெட்டுகள் விழ வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிந்தைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அப்படித்தான் தோற்றது. கோஹ்லி அவுட் ஆனதும் ரோஹித்தும் ஏமாற்றமளித்தார். அதாவது ஒரே மாதிரியான ஷாட் அதிகம் அடிப்பது ஆபத்தானது. என்னை பொறுத்தவரை பந்து சுழன்று வருகிற திசைக்கு ஏற்ப நாம் அடிக்கும் ஷாட் அமைந்தால் பந்து பெரும்பாலும் கேட்ச் போகாது. அதே சமயம் ரோஹித் அந்த பந்தை தூக்கி அடிக்கும் நிர்பந்தமும் இந்திய அணிக்கு இல்லை. குறைவான இலக்குத்தான். பின்னர் ஏன் ரோஹித் அடித்து ஆடினார் என்பது புரியவில்லை. ரோஹித் பிடிவாதமாக சில நேரங்களில் அடித்து ஆட முயல்கிறார். அது பெரும்பாலும் அவர் அவுட் ஆகி வெளியே செல்லத்தான் உதவுகிறது. இந்த தொடரை பொறுத்த வரை ரோஹித் அல்லது கோலி சிறப்பாக பேட்டிங் செய்வதை வைத்தே இருக்கிறது. மேலும் அமெரிக்க மைதானம்ஏற்கனவே சொன்னது போல புதிய கிரௌண்ட். சேசிங் ( chasing) செய்வது கொஞ்சம் கடினம். இந்தியா டாஸ் ஜ...

இந்தியா அடுத்து என்ன செய்ய வேண்டும்?

Image
10, ஜூன் 2024 அமெரிக்காவில் நடைபெறும் T20 உலககோப்பை போட்டியில் நேற்றைய ஆட்டம் பரபரப்பாக இருந்தது. ஆட்டம் ஆரம்பித்த உடனே மழை குறுகிட்டதால் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் உடனே மழை நின்று ஆட்டம் ஆரம்பித்தது. பொதுவாக அமெரிக்க ஆடுத்தளங்கள் பவுலிங் செய்வதற்கே சாதகமாக இருக்கிறது. பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது ஒரு நல்ல முயற்சி. ஏனென்றால் இரண்டாம் ஆட்டத்தின் போது மழை பெய்த காரணத்தால் மைதானம் ஈரப்பதம் காரணமாக பந்து நின்று வரும். எவ்வளவு அடித்தாலும் போகாது. ரிஷப் பண்ட் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் அடித்தாட முடியவில்லை. சூர்யா குமார் யாதவ், சிவம் டூபே, ஜடேஜா போன்ற வீரர்கள் சரியாக ரன் அடிக்க வில்லை. இதற்கு காரணம் மைதானத்தின் தன்மைதான் என்று கூறிவிட்டு போக முடியாது. பாக்கிஸ்தான் சிறப்பாக பந்து வீசினார்கள்.  சிவம் டூபே ஸ்பின்னர்ஸை நன்றாக அடித்து விளையாட கூடியவர். ஆனாலும் நேற்று அவர் விளையாடும் போது பயந்து மெத்தனமாக அவுட் ஆனார். அந்த பந்தை front footil தூக்கி அடித்து இருக்கலாம் அவருடைய மெத்தனம் தான் காரணம். சிவம் டூபே இன்னும் கவனமாக ஆர்வமாக விளையாட வேண்டும். அதே போன்ற...

ஆரஞ்சு நிற பெண் - குறுங்கதை

Image
மழை பொழிந்து விரித்த சாலை.  கையில் ரோஜாக்கள் நிறைந்த பூச்செண்டு வைத்துக்கொண்டு நின்றிருந்தேன்.  பேருந்து வந்து நின்றது. பனிக்கட்டிகள் உருள்வதைப் போல சிறுவர்கள் இறங்கினார்கள். இறகினை போல வந்து நின்றாள் வெண்ணிலா. மஞ்சள் டீ சர்ட்டும், நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தாள். லூஸ் ஹேரில் இருந்ததால் அடிக் கடி முடியினை கொதி விட்டுக்கொண்டாள்.  என்னைக் கடந்து சென்றாள். வழக்கம் போல கோபமான பார்வை.  நான் பின்தொடர்ந்தேன்.  இப்பொழுது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. நானும்  ரோஜா நிற பூச்செண்டும் நனைய ஆரம்பித்தோம்.  " excuse me, " என்று அவளை நோக்கி கூப்பிட்டேன்.  மின்னலைப் போல ஒரு கணம் திரும்பி விட்டு நடந்து சென்றாள். அவள் கோபம் அந்த மின்னலை விடவும் அதிகமானதாக இருந்தது.  மறுநாள் காபி ஷாப்பில் அவளை மறுபடியும் சந்தித்தேன். வெள்ளை புடவை முகத்தில் சந்தனம் பூசிஇருந்தாள். அதிகம் கூட்டமில்லை. ஸ்பீக்கரில் ரஹ்மான் பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. எப்படியும் கோவிலுக்கு சென்று வந்திருப்பாள் எனத் தோன்றியது.  நான் நகராமல் பார்த்து கொண்டு நின்றேன். அதுவே ச...

நான் எழுதிய புத்தகம்

Image
அந்த நாட்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எதுவும் சொல்வதற்கில்லைதான். நான் ஏன் சில புகைப் படங்களில் சிரிப்பதில்லை என்று பல நேரங்களில் தோன்றியிருக்கிறது. வார்த்தைகளே இல்லாத மனிதனுக்கு பேச எதுவும் இருப்பதில்லை. ஆனால் நினைவுகளும் நினைக்கப்படுதலும், நினைத்துக் கொண்டேயிருப்பதும்தான் இறுதியில் வாழ்கை தரப் போகிற இடம். நான் விரும்புவதெல்லாம் அப்பொழுது என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதை தெரிந்து கொள்ளத்தான் . நினைவுகள் நினைவுகளாகி போய்க் கொண்டேயிருக்கிறது. மௌனங்களின் நீள் நதியாக நான் மாறிவிட்டதை யாரிடம் சொல்லப் போகிறேன் என்கிற தேடலில் எழுதப்பட்ட கவிதைகள்தான் இவை. மனம் விட்டு பேச விரும்புகிற யாருமற்ற மனிதனின் சில குரல்களை யாரவது கேட்க விரும்பினால் அதற்க்காக எனது கவிதைகள் துணை செய்யும் என்று நம்புகிறேன். எழுத்தின் மீது தீராத காதலை ஏற்படுத்திய எனது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோருக்கு அன்பும் நன்றியும். என்றென்றும் என் நினைவில் வாழும் எழுத்தாளர் தஸ்தாயேவ்ஸ்கி அவர்களுக்கு இந்த முயற்சியை சமர்ப்பிக்கிறேன். என்னையும் எனது எழுதும் பணிக்கு ஊக்கப்படுத்திய குடு...

ஹாட்ஸ்பாட் பரிதாபங்கள்...!

Image
KJB Talkies, Seven Warrier films தயாரித்து விக்னேஷ் கார்த்தி இயக்கி வெளிவந்த திரைப்படம் Hotspot. ட்ரைலர் வெளிவந்த போதே அந்த படம் பெரும் சர்ச்சையோடு வெளிவந்தது. அந்த படத்தின் இயங்குனர் விக்னேஷ் கார்த்திக் திரைப்படம் வெளிவந்து முழுமையாக பார்த்துவிட்டு அதன் பிறகு எதுவென்றாலும் பேசிக்கொள்ளுங்கள் என்றும் படத்தணிக்கைக் குழு படைப்பு சுதந்திரத்தை தடை செய்கிறது என்ற குற்றச் சாட்டு நிலவியது எனவும் குறிப்பிட்டிருப்பார் . இதனால் A தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  படத்தில் பெண்கள் என்றால் திருமண வாழ்வில் அடங்கிதான் போக வேண்டுமா? ஆண் -பெண் கலாச்சார வாழ்வின் தொடர்ச்சியாக இன்றளவும் பெண்களின் திருமண வாழ்வு ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ளதாகவும் அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் சொல்லியிருப்பார். அதே சமயங்களில் பெண்களால் ஆண்களின் வாழ்க்கையும் சிக்கலாக மாறுகிறது. மூன்று பகுதியாக சொல்லப்படும் திரைக்கதையில் இரண்டாவது பகுதியிலும் பெண்ணியம் மற்றும் பெண் சுதந்திரம் தான் பிரதானமாக பேசப்படுகிறது. இது வரை பாலியல் தொழில் செய்யும் பெண்களின் வாழ்க்கை திரைப்படங்களில் பேசப்பட்டுள்ளது. ஆன...