ரோஹித்தின் சூப்பர் எட்டு...!

Thu, 13 june 2024,

USA உடனான இந்த ஆட்டத்தில் திருப்புமுனையாக சூர்யாகுமார் யாதவ் கேட்ச் USA அணியினர் தவற விட்டது தான் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஒரு வேளை அவர் அவுட் ஆகி இருந்தால் ஆட்டத்தி பிரஷர் கூடி மேலும் விக்கெட்டுகள் விழ வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பிந்தைய ஆட்டத்தில் பாக்கிஸ்தான் அப்படித்தான் தோற்றது. கோஹ்லி அவுட் ஆனதும் ரோஹித்தும் ஏமாற்றமளித்தார். அதாவது ஒரே மாதிரியான ஷாட் அதிகம் அடிப்பது ஆபத்தானது. என்னை பொறுத்தவரை பந்து சுழன்று வருகிற திசைக்கு ஏற்ப நாம் அடிக்கும் ஷாட் அமைந்தால் பந்து பெரும்பாலும் கேட்ச் போகாது. அதே சமயம் ரோஹித் அந்த பந்தை தூக்கி அடிக்கும் நிர்பந்தமும் இந்திய அணிக்கு இல்லை. குறைவான இலக்குத்தான். பின்னர் ஏன் ரோஹித் அடித்து ஆடினார் என்பது புரியவில்லை. ரோஹித் பிடிவாதமாக சில நேரங்களில் அடித்து ஆட முயல்கிறார். அது பெரும்பாலும் அவர் அவுட் ஆகி வெளியே செல்லத்தான் உதவுகிறது. இந்த தொடரை பொறுத்த வரை ரோஹித் அல்லது கோலி சிறப்பாக பேட்டிங் செய்வதை வைத்தே இருக்கிறது. மேலும் அமெரிக்க மைதானம்ஏற்கனவே சொன்னது போல புதிய கிரௌண்ட். சேசிங் ( chasing) செய்வது கொஞ்சம் கடினம். இந்தியா டாஸ் ஜெயித்தது கொஞ்சம் பக்க பலமாக இருந்தது. 
வெற்றி பெற்றாலும் நான் இந்தியா அணியின் குறைபாடுகளை சொல்லியாக வேண்டும். முதலில் கோஹ்லியை விட்டு விட்டு ரிஷப் பண்டை இறக்க வேண்டும். கோஹ்லி இரண்டாவது இறங்கினால் போதும். ஆனால் இந்த யோசனை அடுத்த ஆட்டத்தில் கை கொடுக்குமா என்று யோசிக்க வேண்டும்.?

ரோஹித் power play முடியும் வரை பொறுமையாக ஆடி விட்டு அப்புறம் அடித்து ஆட முயல வேண்டும். பிற நாடுகளில் உள்ள மைதானத்தின் தன்மையோடு அமெரிக்க ஆடுதளங்களில் முதல் ஆறு முதல் எட்டு ஓவர்கள் விக்கெட் எதுவும் விழாமல் பின்னர் அடித்து விளையாட வேண்டும். சிக்ஸர்ஸ் அடிப்பதை போல் பவுண்டரி அதிகம் அடிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு ஒரு ரன் ஓடி அதிகம் எடுக்க வேண்டும். பந்தை வீணடிக்க கூடாது . குறிப்பாக திறமையாக சிங்கள் ஆடி விக்கெட் தக்க வைக்கும் ஒருவர் மற்றும் அடித்து ஆட கூடிய ஒருவர் இவர்கள் இணையோடு ஆடினால் நன்றாக இருக்கும்.

நிறைய வேலை டென்ஷன் என்று ஓடிக் கொண்டிருக்கும் போது கிரிக்கெட் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. 
சூப்பர் 8 சுற்றில் நுழைந்து விட்டோம். இனி வரும் ஆட்டங்களில் கோஹ்லி டூபே ரோஹித் போன்ற பேட்ஸ்மேன்கள் கவனமாக மைதானத்தின் தன்மைகெற்ப விளையாட வேண்டும். ஆட்டத்தின் இடையிடையே அமெரிக்க நகரங்களை காட்சி படுத்துகிறார்கள். பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கிறது. 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )