Posts

Showing posts from July, 2025

அவள் பெயர் மேபல்!

Image
சிறுகதை: மேபல்  எழுத்தாளர் : தஞ்சை பிரகாஷ்  மேபல் சிறுகதை வாசித்து பல நாட்கள் அந்த தாக்கத்தில் இருந்தேன். சில கதைகள் நம்மையும் மீறி ஏதாவது அதை பற்றி உளற வைத்து விடும். திடீரென்று உறக்கம் கலைந்த ஒரு நடு இரவில் அந்த கதை மனதில் ஊசலாட தொடங்கியது. எதிர்கால வாழ்வு குறித்த நிச்சயமற்ற தன்மையால் மனம் தத்தளித்தபடியிருந்தது. மேபலை நினைத்துக் கொண்டேன். அவளை போலவே மனம் விட்டு பேச ஒரு மகளோ தோழியோ இருந்தால் போதும் மூர்க் கமான இந்த வாழ்வை எளிதாக கடந்து செல்லலாம். குடும்பத்திற்காக தன்னை கரைத்துக் கொண்டவர்கள் என்றும் மறக்கடிக்க படாதவர்கள். எல்லா குடும்பத்திலும் யாரோ ஒருவர் மட்டுமே அந்த குடும்பத்தின் ஒரே சந்தோசமாக இருப்பார் . மேலும் அவர்தான் அந்த குடும்பத்தின் அனைவரையும் இணைக்கும் புள்ளியாகவும் இருப்பார்கள். எல்லா குடும்பத்திலும் அனைவரும் யாரோ ஒருவருக்கு உண்மையாக இருப்பார்கள். மேபல் அப்படியான ஒரு பெண். அவள் தந்தை குடித்து விட்டு தினமும் அடிக்கும் போதும் அவளை திட்டி உதாசீன படுத்தும் போதும் கூட மேபல் தான் தந்தையை வெறுக்கவேயில்லை. பெண்கள் மட்டுமே ஏன் தன்னை துன்புறுத்துபவனிடம் கூட எப்பட...

அப்பா அந்தோனியாவும் மகன் ப்ருனோவும்....!

Image
Bi cycle theif திரைப்படம் பற்றிய எஸ். ரா வின் உரையை கேட்டறிந்தேன். எப்படி ஒரு திரைப்படம் பற்றி ஒரு மனிதரால் இவ்வளவு அழகான சுவாரஸ்யமாக பேச முடிகிறது என்று வியப்பாக இருந்தது. யூடுபில் சப் டைட்டில் உதவியுடன் பார்த்தேன். உண்மையில் சப் டைட்டில் தேவை படவே இல்லை. ஒவ்வொரு காட்சி அமைப்பும் கலை பூர்வமாக மிக யதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்தது. தொலைந்து போன சைக்கிளை நாமும் அந்தோணியுடன் தேட ஆரம்பிக்கி றோம்.   கதை நிகழும் களம். அழகான நகரத்தின் காட்சிகள். அந்தோணியும் அவன் மகனும் நடந்து செல்லும் பாலம் பார்ப்பதற்கு இனிமையான காட்சியாக இருந்தது.  அந்தோணியும் மகன் ப்ருனோவும் உணவு விடுதியில் சாப்பிடும் காட்சி மிக அழகானது. Bruno பக்கத்து மேசையில் அவனைப் போல சாப்பிடும் இன்னொரு சிறுவனை போல சான்விச்சினை கடித்து சாப்பிடுகிறான். அங்கு இசை யமைக்கும் இசை கலைஞரை பார்த்து ரசித்து சிரிக்கிறான். நெருக்கடிகளுக்கிடையில் மனிதன் அடையும் சின்ன சின்ன கொண்டாட்டங்கள் மிக அழகானது என்று புரிந்து கொள்ள முடிந்தது. அந்தோணியா சைக்கிள் திருட போன துயரத்தில் மகனின் சந்தோசத்தை ஏன் தொலைக்க வேண்டும் என்று உணவு விட...