கணக்கு ராவுத்தர்....!
விகாசம் சிறுகதை எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய முக்கியமான சிறுகதை . ஜே. ஜே. சில குறிப்புகள், ஒரு புளியமரத்தின் கதை, குழந்தைகள், ஆண்கள், பெண்கள் போன்ற நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பிரசாதம் மிக முக்கியமான சிறுகதை. மேலும் விகாசம் என்ற இந்த சிறுகதை எழுத்தாளர் எஸ். ரா தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழ் இலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இந்த தொகுப்பை வாசிப்பது அவசியம். விகாசம் சிறுகதை முதலாளிக்கும் வேலை பார்க்கும் தொழிலாளிக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி பேசுகிறது. துணி வியாபாரம் செய்யும் கடை முதலாளி கண்பார்வை குறைபாடு கொண்ட விற்பனையாளர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், மன நெருக்கடிகள், சண்டை பிரிவு பற்றி பேசுகிறது. திறமையான பணியாளர் இருந்தாலும் முதலாளி என்பவர் மாறப் போவதில்லை. வேலை பார்க்கும் மனிதர்கள் சக மனிதர்களாக மதிக்கப் படுகிறார்களா அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கிறதா என்ற கேள்வி பல ஆண்டுகளாக இலக்கியம் பேசி வந்த முக்கிய விஷயம் தான். சிறப்பு என்னவென்றால் ராவுத்தர் எனும் க...