சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )
கோடிலிங்கத்தின் பிரமாண்டமான சிலையின் மீது நின்று கொண்டிருந்தோம். மனம் அனைத்து கழிவுகளையும் துறந்து மேலெழும்பி நிற்கும் தூய நிலையது. மனிதனை அவனது அத்தனை கசப்புகளையும் வேதனைகளிலிருந்தும் எதோவொரு நம்பிக்கையே மீட்டேடுக்கிறது. இந்த கோவில் ஆசியாவிலேயே மிகப் பெரிய 72 அடி நீளமுள்ள சிவலிங்கம் உருவிலான கோவில். சுருளி அருவியில் குளித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு பூஜைக்கான பொருட்களை வாங்கிவிட்டு நடந்தோம். கொஞ்சம் உயர்ந்த மேட்டில் இடதுபுறம் முழுவதும் திராட்சைத் தோட்டம் கொண்ட ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். சுற்றிலும் தென்னந்தோப்பும் உயர்ந்து வளர்ந்த மரங்களும் கொண்ட மலைப்பாதை ஏறிச் சென்றது. வேளாண் பயற்சி முகாம் ஒன்றும் மௌன சித்தர் கோவில் மடமும் இருந்தன. திராட்சை பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அதில் முதல் கொத்து பழங்களை கடவுளுக்கு படையல் போடும்படியாக சின்ன டப்பாவில் போட்டு வெளியே காட்சிக்கு வைத்திருந்தனர். ஒரு பழத்தை எடுத்துத் தின்றேன். நல்ல புளிப்பும் இனிப்புமாக சுவை தலைக் கேறியது. கோடிலிங்கம் கோவில் சுருளியருவிக் கரையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அந்த க...