எயிடொஸ் எனும் வார்த்தை......!
பேராசிரியர் ந. முத்து மோகன் எழுதிய ஐரோப்பிய தத்துவங்கள் என்ற புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். பிளாட்டோ பற்றி முதலில் விளக்குகிறார் . அவருடைய தத்துவம் என்னவெனில் உலகில் எந்த ஒரு பொருளின் அழகையும் ரசிக்கும் முன்னர் அந்த அழகு என்பது இதுதான் அல்லது இப்படிபட்டது தான் என்று கருத்து அனைவருக்கும் இருக்கும். இந்த கருத்து என்பது ஒரு கற்பனை தான் கருத்து முதல் வாதமே பொருள் முதவாதம் உருவாவதற்கு முன்னர் தோன்றியது என்பது பிளாட்டோவின் கருத்து. ஒரு வேளை இது மரபார்ந்த நம்பிக்கை தொன்று தொட்டு இன்னும் பின்பற்ற படுவதின் மூலம் நிகழ வாய்ப்பு இருக்கிறது. பொருள்முதல்வாதம் என்றால் புலன்ங்களால் இந்த உலகை அறிந்து புரிந்து கொள்ளும் அறிவு. அதாவது பொருள் என்றால் நடைமுறை விஷயங்களையும் வாழ்வின் ஆதாரங்களையும் அனுபவத்தின் வழியாக மட்டுமே நேரிடையாக அறிந்து கொள்வது. கருத்துமுதல்வாதம் என்பது உலக இயக்கங்கள் அனைத்திற்கும் கடவுள் அல்லது பிரபஞ்ச இயக்க ஆதார சக்தி Superior power உள்ளது என்றும் அதன் அடிப்படையில் புரிந்து கொள்வது. அதாவது கடவுளை புலன்ங்களால் உணர முடியாது. ஒரு கற்பனை புரிதல் மட்டுமே அங்கே நிகழ்கிறது. ...