நெருப்புப் பேனா - 5
பௌத்தம் கூறும் வாழ்வியல் நெறிகளை குறித்து அம்பேத்கர் எளிய மனிதர்களும் கடைபிடிக்கும் படி கீழ்கண்டவாறு கூறுகிறார்.
1. கொல்லமை
2. திருடாமை
3. பொய் சொல்லாமை
4. மற வழியில் நடக்காது தவிர்த்தல்
5. மது அருந்தாமை, சமய பிரசாகர்களுக்கு மேலும் சில கட்டுப்பாடுகள்
6. தேவைக்கு அதிகமாக உணவு உண்ணாமை
7. நடனம், இசை, நாடகம் போன்ற பொது மன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளை காணாமல் தவிர்த்தல்
8. மாலைகள், ஆபரணங்கள், வாசனை திராவியங்களை தவிர்த்தல்
9. உயர்வகை படுக்கை மெத்தைகளை பயன்படுத்த கூடாது
10..எந்த தருணத்திலும் பணத்தை பெறக் கூடாது
அம்பேத்கரின் மீது அதிகம் ஈடுபாடு ஏற்பட காரணம் அவருக்கு புத்தரின் மீதும் புத்தகத்தின் மீது இருந்த ஆர்வமும் காதலுமே. திராவிட இயக்க தலைவர் கீ. வீரமணி எழுதிய அம்பேத்கர் பற்றிய, " புத்த காதலும் புத்தக காதலும்" என்ற புத்தகம் வாசித்தேன். முன்னரே குறிப்பிட்ட படி அம்பேத்கரிய சிந்தனையாளர் மதிவதினி யூடுப் உரை ஒன்றில் இந்த புத்தகத்தை பற்றிய பேசிய உரை இந்த புத்தகத்தின் ஆர்வத்தை தூண்டியது. வாசிப்பை புத்தகத்தை நேசிக்க கூடிய அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
அம்பேத்கரின் வீடே பெரிய நூலகம் தான். அம்பேத்கரின் அறை நான்கு கதவுகள் அடங்கிய ஹால். அதில் ஒரு கதவு மட்டுமே திறந்திருக்கும். மற்ற மூன்று கதவுகள் மூடப்பட்டு அதன் பின்னர் மேஜைகளில் புத்தகங்கள் அடுக்குப் பட்டிருக்கும். அறை முழுவதும் உள்ள புத்தகம் நிறைந்து கிடக்கும். அம்பேத்கரை சந்திக்க செல்லுபவர்கள் அவர் அறையில் இல்லை என்றும் திரும்பி வரக் கூடாதென்றும் அங்கு புத்தகம் வாசித்துக் கொண்டு இருக்கும் அம்பேத்கரை புத்தகக் குவியல் மறைத்திருக்கும் என்று அவருடைய உதவியாளர் தேவி தயாள் குறிப்பிடுகிறார்.
அம்பேத்கர் இந்திய பொருளாதாரம் முதல் கோழி வளர்ப்பது எப்படி வரை அனைத்து துறை வாரியான புத்தகங்களையும் அவர் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார். அம்பேத்கர் பழைய புத்தக கடைகளுக்குள் போய் இரண்டு பை நிறைய புத்தகங்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு கிடைக்கிற வருமானத்தில் 100 ரூபாயில் பாதி 50 ரூபாய்க்கு புத்தகம் வாங்கிவிடுவார். அவர் வருமானத்தில் பாதி புத்தகம் வாங்குவதற்க்கு மட்டுமே செலவானது . சம்பாதிப்பது இஷ்டத்தத்திற்கு செலவு செய்வது என்று சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் அம்பேத்கர் போன்றோர் விதிவிலக்காக இருக்கிறார்.
அம்பேத்கர் பகல் முழுவதும் படித்துக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் இரவு நேரத்திலும் தன்னை சந்திக்க வருபவர்களை சந்தித்து உரையாடுவார். ஒரு முறை அமெரிக்க பத்திரிக்கை நிருபணர்கள் அம்பேத்கரை சந்திக்க வந்தனர். அவர்களை அம்பேத்கர் இரவில் வர சொன்னார். அவர்கள் அம்பேத்கரிடம்
சில தலைவர்கள் பகலில் தான் நேர்காணல் பத்திரிக்கை சந்திப்பு நிகழ்த்துகிறார்கள். ஆனால் நீங்கள் இரவில் சந்திக்கிறீர்களே என்றும் ஆச்சர்யத்துடன் கேட்டனர். அதற்கு அம்பேத்கர் சொன்ன பதில் : அவர்கள் lucky leaders அதாவது மற்ற தலைவர் நல் வாய்ப்பு பெற்றவர்கள் ஆனால் நானோ நான் குரல் கொடுக்கிற மக்களோ அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டவர்கள் அதனால் நான் இடை விடாமல் போராட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சொன்னாராம். அது உண்மை இந்திய தலைவர்களிலேயே தீண்டாதாகதவர் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப் பட்ட கொடுமை அம்பேத்கருக்குத் தான் நடந்தது. ஆனால் இன்றைக்கு அவர் உருவாக்கிய அரசிலமைப்பு சட்டம் தான் நம் நாட்டின் ஆதாரமாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் உறங்காமல் இரவிலும் கூட விழித்திருந்து படித்தார். சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டுமே என்பதே அவர் லட்சியம்.
அம்பேத்கரை தனது ஆசானாக கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். அம்பேத்கரை கொண்டாடுவதை விட அம்பேத்கரை புரிந்து கொள்வதுதான் முக்கியம். அதிலும் குறிப்பாக நாம் செய்யவே கூடாத ஒன்று அவரை சாதிய அடையாளப் படுத்துவது. அம்பேத்கர் எங்கள் கட்சிக்கு மட்டுமே உரித்தானவர் என்றோ எங்கள் கொள்கைக்கு உரித்தானவர் என்றோ அடையாளப் படுத்துவது தவறு என்று திருமா குறிப்பிடுகிறார். 30 வருடங்களுக்கு மேலாக அம்பேத்கரிய அரசியலை முன்னேடுத்த திருமா திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து சாதி ஒழிப்பு புரட்சி செய்து வருகிறார். சாதி ஒழிப்பது மத வாத பாசிச அரசியலை ஓடுக்குவது மட்டுமே அவர் லட்சியம். யூடுபில் அவர் ஆனந்த விகடன் பத்திரிகை சார்பாக அளித்த நேர்காணல் பார்த்தேன். மேலும் தொடர்ந்து அவர் அரசியல் உரைகளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் அம்பேத்கரை புத்தரின் வழி தோன்றல் என குறிப்பிடுகிறார். அதிலும் குறிப்பாக ஒடுக்கப் பட்டவர்கள் பிறப்பிலிருந்தோ அல்லது மரப்பார்ந்த முறையிலோ ஒடுக்கப்பட்டவர்கள் இல்லை. சமத்துவத்திற்காக பாசிச அரசியலை எதிர்த்து போராடிய காரணத்தினால் அவர்களை ஒடுக்குவதற்காக அப்படி அழைக்கப் பட்டார்கள். அண்மையில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் அம்பேத்கர் உருவாக்கிய அரசிலமைப்பு சட்டத்தின் முகப்புரையை the preample of consititution அனைவருக்கும் வழங்கினார். மதவாத பாசிச அரசியலால் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து என்றும் அதை பாதுகாப்போம் என்றும் அவர் முழங்கினார். அம்பேத்கரை பற்றி தெரிந்து கொள்ள தொல். திருமாவளவன் அவர்களை தெரிந்து கொள்வது மிக முக்கியம் ஏனெனில் அவர் தனது வாழ்நாள் அரசியலாக பேசுவது அம்பேத்கரியம் மட்டும் தான்.
கீ. வீரமணி எழுதிய புத்த காதலும் புத்தக காதலும் எனும் இந்த நூலில் முக்கியமான சம்பவத்தை பற்றி குறிப்பிடுகிறார். அதில் ஒரு முறை அம்பேத்கர் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்படும் அபாயத்திலிருந்து தப்பித்தாராம். உடனே துரிதமாக கார் ஓட்டி காப்பாற்றிய ஓட்டுநரை பாராட்டி அன்பளிப்பு கூட கொடுத்தாராம். மேலும் மரணமடைந்து விடுவோமோ என்று பயந்துவிட்டதாக சொன்னார். ஆனால் உண்மையில் அவர் பயந்ததற்கு காரணம், இந்த சமூகத்தை தீண்டாமையிலிருந்து மீட்க முடியாமல் போய்விடுமோ என்றுதான். அந்தளவுக்கு கொண்ட கொள்கை மீது பிடிப்பு சமூக அக்கறையும் இருந்தது என்று நாம்தேவ் நிம்காடே குறிப்பிடுகிறார்.
ஆங்கிலத்தில் Burning the Midnight என்ற சொற்றோடர் உள்ளது. அதாவது நடு இரவிலும் விளக்கெரித்தல் என்பது. அது தீவிரமாக புத்தகம் வாசிப்பவர்களை குறிக்கும் சொல். அப்படியெனில் நிச்சயம் அது அம்பேத்கருக்கு பொருந்த கூடியது. தேவி தயாள் அம்பேத்கரின் உதவியாளர். வீட்டு வேலைகள் அம்பேத்கருக்கு புத்தகங்கள் எடுத்து தருவது, கோப்புகள் சேகரிப்பதில் உதவி செய்வது. அந்த தேவி தயாள் அம்பேத்கரை பற்றி கூறும் போது நடு இரவு 1.30 மணிக்கு அவரை விட்டு இந்த தேவி தயாள் வெளியேறுவார்! சில புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு நீங்கள் படுக்கைக்குச் செல்லுங்கள் என்று அவரிடம் கூறுவாராம் அம்பேத்கர் . அப்படி அவர் கேட்ட சில புத்தகங்கள் புருஷார்த்தா, ரிக்வேத சம்ஹிதை, தாமஸ்மூர் ஆகிய புத்தகங்கள். அவைகளை எடுத்து அவர் அருகில் வைத்து விட்டு அவரைக் கும்பிட்டு விட்டு நான் விடை பெறுவேன்; அவர் பக்கத்தில் எப்போதும் எட்டு, பத்து புத்தகங்கள் இருக்க வேண்டும்; காரணம் கண் விழித்துக் கொண்டால் அவற்றில் ஒன்றை எடுத்துப் படித்துக் கொண்டே யிருப்பார். அந்த வசதிக்காகத்தான் அந்த எட்டு, பத்து புத்தகக் குவியல். அவர் எப்போது உறங்குவார் படித்து முடித்து என்பது தேவி தயாளுக்கே கூடத் தெரியாது.
அது மட்டுமில்லாமல் ஆண்டு வாரியாக சில முக்கியமான செய்திகளை தகவல்களை சேகரித்து கோப்புகளாக வைத்துக் கொள்வார் அம்பேத்கர் என்றும் சொல்லும் தேவி தயாள். அவரிடம் எதை பற்றி கேட்டாலும் ஆதாரம் இருக்கும் என சொல்கிறார். அந்தளவுக்கு அம்பேத்கர் ஆதாரப் பூர்வமாக எதையும் தெரிந்து கொள்பவர்.
அம்பேத்கர் சினிமா, பயணம் கலைகள் என்று எந்த கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு சென்றதில்லை. அப்படியே நண்பர்கள் கட்டாயத்தின் பேரில் சில முறை சென்ற துண்டு. அப்படியே சென்றாலும் அவர் மனதில் எழுத வேண்டும் புத்தகம் பற்றியும் மனதில் யோசனை இருந்து கொண்டே இருக்கும். அவர் தனது தனது வீட்டையே புத்தகங்கள் வைத்திருக்கும் இடமாக மட்டும்தான் வைத்திருந்தார். என்று தேவி தயாள் குறிப்பிடுகிறார். ஒரு முறை அவரிடம் உள்ள புத்தகங்களை விற்றால் 5 லட்சம் ரூபாய் தருவதாக ஒரு ஆஃபர் வந்தது. ஆனால் அதை தராமல் சித்தார்த்தா எனும் கல்லூரிக்கு மாணவர்கள் நலனுக்காக இலவசமாக தந்து விட்டார்.அனைத்து மக்களும் கல்வி பெற வேண்டும் என்பதே அவர் ஆசையாக இருந்தது. அதற்காக அனைத்து கஷ்டத்தையும் தான் ஏற்றுக் கொண்டார்.

Comments
Post a Comment