வெறுப்பு ஒரு தீர்வல்ல
காசி - பாதசாரி - சிறுகதை இலக்கியம் வாசித்த புதிதில் யாரை பார்த்தஉடன் சட்டையில் பேனா வைத்திருந்தால் எழுத்தாளர் என்றோ வாசகர் என்றோ நினைத்துக் கொள்ளுமளவு இலக்கியம் பிடித்து போயிருந்தது. புத்தகம் வாசித்தால் வாழ்வில் நாம் சாதித்து விடுவோம் நல்ல வாழ்க்கை வாழப் போகிறோம். என்று தோன்றும். சில இலக்கிய விழாக்களில் பேசும் போது நாமும் பேசும் போது மூத்த வாசகர்கள், எழுத்தாளர்கள் பாராட்டும் போது சுய கவுரவம் வந்து போகும். ஆனால் தீவிர இலக்கியம் வாசித்த போது அந்த பிம்பம் உடைந்து போகும். உலகின் மேன்மையான இலக்கியங்கள் புத்தகங்கள் வாசிக்க வாசிக்க வாழ்வின் இருண்ட பக்கங்களையும் துயரத்தையும் சுய தேடலையும் சிந்தனைவாதத்தையும் லட்சியவாதத்தையும் உருவாக்கி நம்மை திசை திருப்பிவிடும். ஆனால் நிஜ வாழ்க்கை அப்படியெல்லாம் இல்லை. புத்தகம் வாசித்தாலும் வாசிக்க வில்லை என்றாலும் வாழ்க்கை யாருக்கு என்ன தரும் எப்படியெல்லாம் மாறும் என்று யாருக்கும் தெரியாது போல? காசி என்ற கதையில் வருகிற மனிதனும் பல முறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போயிருக்கிறான். வீரத்திற்காக வீர மரணம் அடைந்தவர்களும் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள...