மின்மினியின் காடு.....!
லண்டலில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் சர்வதேச விருது பெற்ற ஸ்ரீராம் முரளி எடுத்த காட்டில் மின்னும் மின்மினி பூச்சிகளின் படம் பார்த்தேன். காடே வைரத்தை போல மின்னும் என்னவொரு அழகான காட்சி . வாழ்வில் ஓரே முறை ஒருநாள் மின்மினி பூச்சி ஒன்றை கையில் வைத்து பார்த்த நினைவு வந்தது. அந்த இளம் மஞ்சள் ஒளி கைகளுக்குள் ஒளிந்து கொண்டிருப்பதை பார்க்க மனதெல்லாம் சந்தோசமடையும். மின் மினி பூச்சிகள் வாழ்வை அழகாக்க கூடியது., எல்லா நேரங்களிலும் வாழ்வில் வெளிச்சம் தேவைப் படுகிறது. அதுவும் சிறிய வெளிச்சம் மனிதனுக்கு போதும்தான். இரவில் மின்மினி பூச்சிகள் வரும் வரை காத்திருந்து அதை படம் எடுத்து இன்றைக்கு புதிய கலை நுட்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்ரீ ராம். கடலுக்கு அடியில் எத்தனை உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் பார்த்திருக்கக் கூட மாட்டோம். கடலைப் போலவே காடும் நாம் அறிந்திறாத எண்ணற்ற ரகசியங்களை கொண்டுள்ளது. காட்டில் வாழும் விலங்குகள், பறவைகள், பூச்சிகளைப் பற்றி மனிதர்கள் அதிகம் அறிந்திடாத விஷங்கள் உள்ளது. அதை காமிராவில் எடுத்து படங்கள் வழியாக காண்பிப்பதே தமது கனவாக இருப்பதாக சொல்...