Posts

Showing posts from July, 2023

நாவலிசை.. ✍️

Image
எழுத்தாளர் ஜானகி ராமன் எழுதிய மோகமுள் நாவல் வாசித்தேன். சங்கீதம், இசை மனித வாழ்வில் எத்தனை ஆழமாக பின்னி பிணைந்துள்ளது என்று அவரை வாசிக்கும் போது தோன்றும். கும்பகோணம் பகுதி மக்களின் வாழ்க்கையும் ரங்கண்ணா போன்ற இசை கலைஞரின் வாழ்வும் இசை மீது அவர் கொண்டுள்ள ஆழமான அன்பும் மறக்கவே முடியாத கதை. நாவல் வாசித்து முடித்தும் ரங்கண்ணா மனதில் நிலையாக நின்று கொண்டிருக்கிறார். ஆண் - பெண் உறவுகளை பற்றியும் அவர்களின் உணர்ச்சிகளை அழகாக ஜானகி ராமனை போலவே யாராவது எழுதிஇருப்பார்களா என்று வியக்கும் அளவிற்கு இந்த நாவல் முக்கியமானது. இசை என்பது வெறும் சப்தம் இல்லை. அதுவொரு வாழ்வியல் முறை. நெறியான அன்பை மட்டுமே வெளிபடுத்திகிற நாதவெளி. காகம் கரைவது, சமையலுக்கு தாழிசம் செய்வது, சேவல் கூவுவது போன்ற அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இசை கலந்திருக்கிறது. அதை ரங்கண்ணா போன்றோர்களே எடுத்து சொல்கிறார்கள். இந்த மொத்தம் நாவலிலும் பாபுவும் ரங்கண்ணாவும் இசையை பற்றியும் அதன் மகத்துவத்தை பற்றியும் சங்கீத வகுப்பில் போது உரையாடும் அத்தியாயம் மறக்க முடியாத ஒன்று. மௌனத்தில் சங்கீதத்தை வாசிப்பதாகவும் அதை கேட்டு இன்...

சலூன் நூலகம்

Image
தூத்துக்குடியில் மாரியப்பன் என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். அவரது கடையிலேயே சொந்தமாக நூலகம் வைத்து நடந்துகிறார். அந்த நூலகத்தில் வரும் வாடிக்கையாளர்கள் புத்தக வாசித்தால் முடிவெட்ட கொடுக்கும் பணத்தில் 30% தள்ளுபடி. அதாவது முடிவெட்ட 120 ரூபாய் என்றால் நீங்கள் கடையில் போய் புத்தகம் வாசித்தால் 80 ரூபாய் கொடுத்தால் போதும். தமிழ் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் எழுதிய அனைத்து புத்தகங்களும் வைத்திருக்கிறார். விலைவாசி உயர்ந்து வியாபாரிகள் தங்கள் பொருளின் விலையே உயர்த்தி லாபம் சம்பாதிக்கும் இதே உலகத்தில் மாரியப்பன் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க இப்படி புதிய முறையை கையால்வது பெரும் பணி. இந்தியாவிலேயே இது போன்று எங்கும் சலூன் கடையில் நூலகம் வைத்து யாரும் நடத்தியதில்லை என்று எழுத்தாளர் எஸ். ரா அவருடைய வலைதளத்தில் எழுதியிருந்தார். பணம் தான் முக்கியம் என்று வாழும் இந்த சமூகத்தில் பொன் மாரியப்பன் போன்ற மனிதர்கள் அறத்தொடு வாழுகிறார்கள். அவர் நூலகத்தில் பள்ளி மாணவர்கள் சிறுவர்களை புத்தகம் வாசிக்க ஊக்குவிக்கும் விதமாக என்று நிறைய சலுகைகள் பரிசுகள் தருகிறார். யூடுபே மூலம் நிறைய இலக்கியம் சார்ந்...

நெருப்பு பேனா - 3

Image
தொடர்ந்து அரசியல் சட்டமன்றத்தில் பணியாற்றினார். அரசியல் சட்ட வரைவு மற்றும் மசோதா நகல் எடுக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப் பட்டது. அரசியல் தலைவர்களோடு அவருக்கு கருத்து வேற்றுமை ஏற்பட்டது. சாதிக்கு எதிரான போராட்டத்தில் முற்றிலுமாக சாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவர் அனைவரிடமும் முரண்பட காரணமாக அமைந்தது.  வாழ்நாள் முழுவதும் அம்பேத்கரின் போராட்டமும் அதுதான். அம்பேத்கரின் சிந்தனை  பௌத்தம் மற்றும் மார்க்கசியம் இரண்டும் கொண்டது  . இரண்டுமே மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தியவை.  ஆனால் இந்தியாவில் ஆழமாக வேருன்றிஇருந்த மதவெறியும் சாதிவெறியும் அவரை அதிகம் கோபத்தை உண்டாக்கின. அதுவே சாதிதான் வாழ்க்கை என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று முழங்க வைத்தது. சமூக சீர்திருத்தவாதியாக தொடர்ந்து போராடிய அவர் இறுதி காலங்களில் புத்த மதத்தை தழுவுபவராக மாறினார். உலக பௌத்த மாநாடுகளில் கலந்து கொண்டு இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினார். 1955 பாரதீய புத்த பேரவையை அமைத்தார். புத்த மத கொள்கைகள், மார்க்கசியம் பொதுவுடைமை சிந்தனைகளை கொண்டதால் ...

நாலாயிரம் முறை வாழ்ந்த மனிதர்.....!

Image
பள்ளி வயதில் வறுமை காரணமாக பாட புத்தகங்கள் வாங்க கூட காசில்லாத ஆசிஸ் அந்த வறுமையை ஜெயிக்கவே புத்தக கடை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார். அவரது புத்தக கடையில் 4000 புத்தகங்கள் உள்ளது. அதை ஒன்று விடாமல் படித்து விட்டதாக கூறுகிறார் . வியப்பாக உள்ளது . சாமானிய வாசகன் நூறு புத்தகங்கங்கள் வாசிக்கவே சிரமம். ஆனால் முகமது ஆசிஸ் புத்தகம் வாசிக்கவே தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டிருக்கிறார். தனது ஆறு வயதில் பெற்றோர்களை இழந்து தனிமையில் வறுமையோடு போராடியிருக்கிறார்.  பணம் கொடுத்து புத்தகம் வாங்க முடியாத சூழல். ஆனாலும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை மட்டும் கைவிட வில்லை. 1963ல் மரத்தடி நிழலில் தன்னிடம் உள்ள ஒன்பது புத்தகங்களை கொண்டு புத்தக கடையை ஆரம்பித்துள்ளார். அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஸ் மொழியில் குறைந்த பட்சம் ஒரு புத்தகத்தையாவது வாசித்துள்ளார்.  நாலாயிரம் புத்தகங்கள் வாசித்ததன் வழியாக நாலாயிரம் முறை வாழ்ந்து முடித்து விட்டதாக தெரிவிக்கிறார். ஒவ்வொரு புத்தகமும் தனி உலகம். தனி வாழ்வியல். தான் வாசித்ததை பிறருக்கு எடுத்து சொல்லி புத்தகம் வாசிக்க உதவி செய்கிறார். உலகில் ...

நெருப்பு பேனா - 2

Image
1922 பிப்ரவரியில் இன அடிப்படையில் தனி தொகுதி வேண்டும் என்று லண்டனில் உள்ள சௌத் பரவ் குழுவிடம் கோரிக்கை வைத்தார் . இத்தனடிப்படையில் மாண்ட்போர்டு அரசியல் சட்ட சீர் திருத்தங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. அதன் பின்னர் 1920 ஜனவரியில் சாதியால் பாதிக்கப் பட்ட மக்களின் நீதிக்காக, " மூக்நாயக் " (ஊமைகளின் தலைவன் ) என்ற இதழ் தொடங்கினர். தொடர்ந்து நாக்பூரிலும் கோலப்பூரில் 1918களில் சாதிய விழிப்புணர்வு மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றினார். " உரிமைகளை வற்புறுத்த ஒழுங்கு படுத்த பெற்ற கழகங்கள் வேண்டும் என்ற முக்கிய கொள்கைகளையும் சங்கங்களும் சக்திகளும் சாதியால் பாதிக்கப் பட்டவர்கள் முனைந்து செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு தாழ்த்தபட்டவர்கள் நலனை காக்கும் உரிமையில்லை என்ற கருத்தை முன்வைத்தார் . 1920களில் செப்டம்பர் மாதம் லண்டனில் பொருளாதார அரசியல் அறிவியல் பள்ளியிலும் கிரேஸ் கின்னிலும் தன்னை இணைத்துக் கொண்டார் . அதன் பிறகு அம்பேத்கர் மிக கடுமையாக உழைத்தார். உணவைகூட மறந்து தான் அன்றாட வாழ்க்கையின் கேளிக்கைகளை விடுத்து கல்வி முன்னேற்றத்தில் மட்டுமே ஈடுபட்டார் . படிப்பிற்காக அவர...

நெருப்பு பேனா - 1

Image
அம்பேத்கரின் பேனா நெருப்பை உண்டாக்கக் கூடியது. அந்த நெருப்பில் சாதி எனும் குப்பை எரிந்து சாம்பலாகத்தான் போகும். இந்த புத்தகம் படிக்கையில் அப்படி ஒரு நெருப்பை உணர முடிந்தது. பாபாசாகிப் அம்பேத்கர் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து விளக்கும் எளிய புத்தகம். சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்திய இலக்கிய சிற்பிகள் என்ற புத்தக வரிசையில் அம்பேத்கர் பற்றிய வாழ்க்கையின் சிறு குறிப்புகளை விவரிக்க கூடியதாகவுள்ளது. ஆங்கிலத்தில் கே. ராகவேந்திர ராவ் எழுதிய புத்தகத்தை தமிழில் அரு. மருததுரை எழுதி வெளியிடப் பட்டுள்ளது. விலை. 50ரூபாய் மட்டுமே.  அம்பேத்கரின் சமூக கொள்கைகள், அரசியல் மற்றும் சட்டக் கொள்கைகள் பொருளியல் பற்றிய சிந்தனைகள் மற்றும் அவருடைய பௌத்தம் குறித்த சமய விளக்கங்கள் என்று அனைத்தையும் பற்றிய சுருக்கமான எளிய கட்டுரைகள் கொண்ட புத்தகம்.  மத்திய பிரதேசத்தில்லுள்ள  " மோ " என்ற இடத்தில் 1819 ஏப்ரல் திங்கள் 14 ம் நாள் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் பிறந்தார். மகாராஸ்டிராவிலுள்ள கொங்கன் பகுதியில் அம்பேத்கரின் மூதாதையர்கள் தோன்றினர். அவர்களுடைய பூர்வீக கிராமத்தின் பெயர் ...