நெருப்பு பேனா - 2

1922 பிப்ரவரியில் இன அடிப்படையில் தனி தொகுதி வேண்டும் என்று லண்டனில் உள்ள சௌத் பரவ் குழுவிடம் கோரிக்கை வைத்தார் . இத்தனடிப்படையில் மாண்ட்போர்டு அரசியல் சட்ட சீர் திருத்தங்களுக்கு அடிப்படையாக அமைந்தது. அதன் பின்னர் 1920 ஜனவரியில் சாதியால் பாதிக்கப் பட்ட மக்களின் நீதிக்காக, " மூக்நாயக் " (ஊமைகளின் தலைவன் ) என்ற இதழ் தொடங்கினர். தொடர்ந்து நாக்பூரிலும் கோலப்பூரில் 1918களில் சாதிய விழிப்புணர்வு மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
" உரிமைகளை வற்புறுத்த ஒழுங்கு படுத்த பெற்ற கழகங்கள் வேண்டும் என்ற முக்கிய கொள்கைகளையும் சங்கங்களும் சக்திகளும் சாதியால் பாதிக்கப் பட்டவர்கள் முனைந்து செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு தாழ்த்தபட்டவர்கள் நலனை காக்கும் உரிமையில்லை என்ற கருத்தை முன்வைத்தார் .


1920களில் செப்டம்பர் மாதம் லண்டனில் பொருளாதார அரசியல் அறிவியல் பள்ளியிலும் கிரேஸ் கின்னிலும் தன்னை இணைத்துக் கொண்டார் . அதன் பிறகு அம்பேத்கர் மிக கடுமையாக உழைத்தார். உணவைகூட மறந்து தான் அன்றாட வாழ்க்கையின் கேளிக்கைகளை விடுத்து கல்வி முன்னேற்றத்தில் மட்டுமே ஈடுபட்டார் . படிப்பிற்காக அவர் பலரிடம் கடன் வாங்க நேரிட்டது. அப்போதெல்லாம் அவர் மனைவி தன் நகைகளை விற்று அவருக்கு உதவினார். அதே போலவே கோலப்பூர் சாகு மன்னர் அளித்த உதவித் தொகையும் அவருக்கு உதவின. 1921ம் ஆண்டு ஜூனில், " பிரிட்டிஷ் இந்தியாவில் அரசாங்க நிதி நிர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் என்ற ஆராய்ச்சி கட்டுரையை எம். எஸ். சி பட்டத்திற்க்காக எழுதி வெளியிட்டார் ". அடுத்த படியாக டி. எஸ். சி பொருளாதாரம் பட்டதிற்க் காக, " ரூபாயின் - சிக்கல் அதன் தொடக்கமும் தீர்வுகளும் " என்ற ஆராய்ச்சி கட்டுரையை லண்டன் பல்கலை கழகத்தில் அளித்தார். இந்த புத்தகம் பெரிய அளவில் பாராட்ட பெற்றது. 1923ல் பம்பாய் உயர் நீதி மன்றத்தில் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். ஆனால் அங்கேயும் சக வழக்கறிஞர்கள் சாதிய காரணங்களால் அவரை விலக்கினர். வாழ்நாள் முழுக்க அவரை அது தொடர்ந்து துன்புறுத்தியது. ஆனால் அவர் சோர்ந்து போகாமல் பகுதி நேரமாக பேராசிரியராக பணி புரிந்து பணம் சம்பாதித்து தனது பொது தொண்டை தொடர்ந்து செயல் படுத்தினார். இதன் அடுத்த கட்ட முன்னேற்றமாக 1924, மார்ச் 9 ல் தமோதர் கூடத்தில் ஒடுக்கப் பட்ட இன மக்களின் மீதான கவனத்தை ஈர்க்க ஒரு பொது கூடத்தை ஏற்பாடு செய்தார். ஒடுக்கப் பட்ட மக்களின் ஒட்டு மொத்த அவல நிலையை மாற்ற கல்வி மட்டுமே சிறந்த தீர்வேன வலியுறுத்திய அம்பேத்கர் 1932-1933 ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்றார். சாதியும் மதமும் கலந்த பிற்போக்கு தனமான அறியாமை சமூகத்தில் அனைத்து மனிதருக்குமானது பொது கல்விதான் முக்கியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன்படி உருவானதே சட்டம் என்பது. ஆனால் இன்றைக்கு சட்டம் எப்படி இருக்கிறது? நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுகிறதா? அனைவருக்கும் கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைகிறதா என்று யோசிக்க வேண்டும். கடவுளை பற்றியும் நம்பிக்கையை பற்றி அம்பேத்கர் எதிர்க்க வில்லை. கடவுள் எனும் கோட்பாட்டை தவறாக புரிந்து கொண்டு சுயநலத்திற்காக அதிகாரத்தை கைப் பற்றி மனிதர்களை அடிமைபடுத்தும் மத அமைப்புகளின் கொள்கைகளை சித்தாந்தங்களை வேரோடு ஒழிக்க வேண்டும் என்கிறார்.

(தொடரும்....)

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )