Posts

Showing posts from November, 2023

மட்டன் செல்பி

Image
மட்டன் குறும்படத்தில் ஒவ்வொரு காட்சியும் நிதானமாக படமாக்கப் பட்டிருக்கிறது. ஆட்டு உரிமையாளர் எந்த வசனமும் இல்லாமல் நடித்திருப்பது யதார்த்தமான நடிப்பு. இறுதிக் கட்ட காட்சிதான் மனதை வெகுவாக உருக்கிவிட்டது. அன்றாடம் ஹோட்டல்களில் சாப்பிடுகிற யூடுப் போன்ற உணவு விளம்பர படுத்துகிற காட்சிகள், உணவு ரசனை குறித்த தனிநபர் இன்ஸ்டாகிராம் பதிவுகள், உணவு குறித்து நம்முடன் இருக்கும் ரசனை சார்ந்த பேச்சுக்கள் போது கூட அதை வளர்த்தவர்களின் கதையை நாம் பேசயிருப்போமா? என்று தெரியாது . ருசிக்காக நாம் சாப்பிடும் மட்டன் அசைவ உணவின் பின்னால் அதை வளர்த்தவர்களின் அன்பும் பாசமும் கலந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  இன்னொரு காட்சியில் வளர்த்த மகள் இன்னொருவரை காதலித்து வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டதாக மனைவி அழும் காட்சியில் அவள் கணவன் சந்தோஷப்பட்டு உணர்வை வெளிப்படுத்தும் விதம் அற்புதமான சிந்தனை. இங்கே அவருக்கு தன் மகள் காதலித்து இன்னொருவரை திருமணம் செய்து கொண்டதை எளிதாக ஏற்றுக்கொள்ளும் தந்தை ஒருபுறமும், கறிக்கடையில் தன் வளர்த்த ஆட்டை திரும்ப காப்பாற்ற ஓடி போகும் பாசமான தந்தை ஒரு விதமாக எடுக்கப் பட...

மருதுவின் காதல்...!

Image
மறுபடியும் சொல்கிறேன் இந்த வாழ்க்கையை சந்தோசமாக வாழ கொஞ்சம் முட்டாளாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. .அதிக அறிவு தேவையில்லை. பிரிய போகிறோம் என்று தெரிந்தும் சேர்ந்து வாழ முயற்சி செய்வது முட்டாள்தனம் இல்லை. அது ஆழமான அன்பு.மருதுவின் காதல் ஆழமானது. துளி கூட சுயநலமில்லாத யாரை விரும்புகிறானோ அவர்களின் விருப்பதையும் மனதையும் புரிந்துகொண்டவனாக இருக்கிறான். நான்சி கடவுள் எடுக்கிற முடிவை நம்புகிறாள். ஆனால் மருது நான்சிவின் முடிவுதான் தனக்கு முக்கியம் என்று சொல்கிறான் . அதே சமயம் என்றோ காதலித்து திரும்பி வருவதாக சொன்ன கேப்டன் அவளுக்காக திரும்ப வருகிறான். இத்தனை ஆண்டுகள் காத்திருந்தும் காதல் அவனை வரவைக்கிறது. கேப்டன் வர மாட்டான் என்று நம்பி மருதுவோடு வாழ விரும்பிய அடுத்த நிமிடம் நான்சி முன்பு கேப்டன் வந்து நிற்கிறான். இருவரும் மறுபடியும் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் மருது பிரிந்து போகிறான். நான்சியின் காதல் அவனுக்கு கிடைக்கவில்லை. பிரிவின் வலியோடு பழைய நினைவுளோடு கப்பலில் புறப்பட்டு போகிறான். கேப்டன் காதலும் உண்மையானது . நான்சியும் எந்த தவறும் செய்யவில்லை. நான்சியின் கதை தெரிந்தும் அவளை க...

மனிதநேய நேரம்...!

Image
வழக்கமான ஒளிபரப்பாகும் மனிதநேய நேரம் நிகழ்ச்சி பற்றி வெளியான செய்தி இது. அதில் உள்ள கதை பின் வருமாறு : அலுவலக பணியில் முழ்கியிருந்த பரமசிவத்தை அந்த போன் வந்து தொந்தரவு செய்தது. முதல் மூன்று முறை போன் அடித்தும் அவர் எடுக்கவில்லை. ஒரு கையில் அலுவலக கோப்புகளையும் மற்றொரு கையில் போனுமாக பேச ஆரம்பித்தார்.   ஹலோ என்றார் தனக்கேயுரிய வேலை அவசரத்தில் நந்தாங்க பானு பேசுறேன் உடனே ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு வாங்க என்று அவர் மனைவி பரபரப்பாக கூறினாள்.  பயத்தில் அவள் குரல் நடுங்கியது . யாருக்கு என்னாச்சு ஏன் இப்படி பதட்டபடுற என்று கேட்டார். அவருக்கு மனதிற்க்குள் அதிர்ச்சியாக இருந்தது. அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க உடனே கிளம்பி வாங்க என்றும் சொன்னதும் போன் துண்டிக்கப் பட்டது. மனைவி மீது கோபமாக வந்தது. எதையுமே தெளிவாக சொல்லாமல் இப்படி பாதியில் சொன்னால் எப்படி? என்று அவசரமாக எழுந்தார் .  மறுமுறை அவரே போன் செய்து கேட்ட போதும் கூட அரைகுறையாக பனிரெண்டாம் அறைக்கு வருமாறு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.  போனில் பேசுவது சரியில்லை என்று உடனே கிளம்பி தனது ஹெட்டிடம் பெர்மிஸன்...