மனிதநேய நேரம்...!

வழக்கமான ஒளிபரப்பாகும் மனிதநேய நேரம் நிகழ்ச்சி பற்றி வெளியான செய்தி இது. அதில் உள்ள கதை பின் வருமாறு :



அலுவலக பணியில் முழ்கியிருந்த பரமசிவத்தை அந்த போன் வந்து தொந்தரவு செய்தது. முதல் மூன்று முறை போன் அடித்தும் அவர் எடுக்கவில்லை. ஒரு கையில் அலுவலக கோப்புகளையும் மற்றொரு கையில் போனுமாக பேச ஆரம்பித்தார். 

ஹலோ என்றார் தனக்கேயுரிய வேலை அவசரத்தில்

நந்தாங்க பானு பேசுறேன் உடனே ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு வாங்க என்று அவர் மனைவி பரபரப்பாக கூறினாள்.  பயத்தில் அவள் குரல் நடுங்கியது .

யாருக்கு என்னாச்சு ஏன் இப்படி பதட்டபடுற என்று கேட்டார். அவருக்கு மனதிற்க்குள் அதிர்ச்சியாக இருந்தது.

அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க உடனே கிளம்பி வாங்க என்றும் சொன்னதும் போன் துண்டிக்கப் பட்டது. மனைவி மீது கோபமாக வந்தது. எதையுமே தெளிவாக சொல்லாமல் இப்படி பாதியில் சொன்னால் எப்படி? என்று அவசரமாக எழுந்தார் .  மறுமுறை அவரே போன் செய்து கேட்ட போதும் கூட அரைகுறையாக பனிரெண்டாம் அறைக்கு வருமாறு சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.  போனில் பேசுவது சரியில்லை என்று உடனே கிளம்பி தனது ஹெட்டிடம் பெர்மிஸன் கேட்டு ஆட்டோ ஏறி ராயப் பேட்டை போய் இறங்கினார்.  படிக்கட்டுகளில் அடித்து பிடித்து வேகமாக ஏறி மனைவி சொன்ன பனிரெண்டாம் அறைக்கு வந்து சேர்ந்தார். பச்சை நிற வாழை மரங்கள் கிடப்பதை போல நோயாளிகள் கட்டிலில் ட்ரிப் பாட்டில்களோடு கிடந்தார்கள் . ஒவ்வொரு கட்டிலாக கடந்து வரும் போது மனதில் பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பத்து கட்டில்கள் தாண்டி பதினோன்றாம் கட்டிலில் அவர் மகன் ரமேஷ் படுத்திருந்தான். தலையில் பலத்த அடிபட்டு கட்டுப் போட்டு சோர்வாக படுத்திருந்தான் . பக்கத்தில் அவள் மனைவி பானு போனில் யாரிடமோ பேசியவாறு ஒரு போர்வையை எடுத்து மூடிவிட்டுக் கொண்டிருந்தாள். கட்டிலுக்கு அடியில் கூடையில் ஒரு துண்டு எடுத்து அவன் வாயில் உள்ள கறையை துடைக்கப் போன தாத்தா பரமசிவத்தை பார்த்து முறைத்தார். தன் பேரனை அவரை விட யாரால் இவ்வளவு அக்கறையாக பார்த்துக் கொள்ள முடியும்?
என்னடா ரமேஷ் என்னாச்சு என்றும் அவர் கட்டிலில் அமர்ந்தார் . பதட்டத்தில்
அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்து மயக்கம் வந்தது .

எல்லாம் உங்களாலதான் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம நீங்க அவனை விளையாட போக சொன்னீங்க அதனால என்னாச்சு பாத்தீங்களா என்று கோபத்தோடு கேட்டாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

புரியிற மாதிரி தெளிவா சொல்லு பானு என் மகனுக்கு என்னாச்சு என்று கெஞ்சுகிற தொனியில் கேட்டார்.

காலையில் பக்கத்து கிரவுண்ட்ல விளையாட போயிருக்கான் அங்க ஒரு பையன் ஒரு பொண்ணு மூஞ்சில ஆசிட் வீசிட்டு போயிருக்கான் இவன் அவனா விரட்டி பிடிக்க ஓடிருக்கான் அவன் நல்ல அடி பின்னிட்டு ஓடிட்டான். அதுல இவன் மண்டை ஓடைஞ்சு இப்ப தையல் போட்டுருக்கு என்றாள்.

அது மட்டுமா மயக்கம் போட்டு விழுந்த கிடந்துருக்கான். இவன் செல்போன் மோதிரம் எல்லாத்தையும் எவனோ உருவிட்டு போயிட்டான் நாசமா போறவன் என்று சேலையை எடுத்து கண்ணீரை துடைத்துக் கொண்டள் பானு.

கொஞ்சம் நேரம் தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் அமைதியாக சொன்னார் :
நல்ல காரியம்தான பன்னிருக்கான் இதுக்காக நீங்க பெருமை படனும் நல்ல காரியம் செஞ்சுருக்கான் அவனுக்கு எதும் ஆகாது நீங்க அழாதீங்க என்றார்.

வாய மூடுடா இடியட், என் பேரன் என்ன போலீசா அவனுங்களே எனக்கென்னனு இருக்கானுங்க இவன் சின்ன பையன் படிக்க வேண்டிய வயசுல அவனுக்கு லட்சியம் சமூக சிந்தனை என்று கண்டதையும் சொல்லி கொடுத்து தூண்டி விடுற சின்ன பையன்டா ஏற்கனவே அவன் மனநலம் பாதிக்கப் பட்ட பையன் என்று தன் மகனை கண்டித்தார் சுரேஷின் தாத்தா.

ஏன்ப்பா நீங்களே இப்படி சொல்றீங்களே நான் ஒரு ஐடியலிஸ்ட் அவனையும் அப்படி வளக்குறேன் படிச்சவங்க நாம பொறுப்பில்லாம நடந்துகிட்ட நமக்கு பின்னாடி வர ஜெனெரேஷன் எப்படி முன்னேறுவங்க என்றும் பதிலுக்கு சொன்னார்.

பாத்திங்களா மாமா இவரு திருந்த மாட்டாரு அவருக்கு அவர் சொல்றதுதான் வேதம். இவரல்லாம் நூறு வருஷம் முன்னாடி பிறந்திருக்க வேண்டியது இப்போ இருந்து முற்போக்கு புராணம் பேசிகிட்டு இருக்காரு. என் மகன தயவு செஞ்சு என்கிட்ட இருந்து பிரிச்சிற வேணாம்.

இப்ப ஏன் பானு இப்படி பயப்படற அவனுக்கு ஒன்னும் ஆகாது என்று ஆறுதலாக சொன்னார்.

டேய் இப்ப இருக்கற பசங்க நல்ல பாஸ்டா இருக்காங்க பிராக்டிகலா திங்க் பண்றங்க உன்ன மாதிரி ஒரு பழமைவாதிங்களாலதான் பிரச்சனையே. என்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் தாத்தா.

என் மகன எப்படி வளக்கணும்னு எனக்கு தெரியும் நீங்க பேசாம இருங்க என்று பரமசிவம் ஹாஸ்பிடல் என்று கூட பார்க்காமல் ஆத்திரத்தில் கத்தினார் பரமசிவம். 

கூச்சல் கேட்டு ஓடி வந்த ஹெட் நர்ஸ் சார் உங்களுக்கு அறிவில்ல எத்தனை நோயாளிங்க இருக்காங்க இப்படி காட்டு கத்தல் கத்துறீங்க தயவு செஞ்சு ஒரு ஆள் இருங்க மத்தவங்க வெளில போங்க டாக்டர் ரௌண்ட்ஸ் வராரு என்று சொல்லி விட்டு ட்ரிப்ஸ் மாற்றிவிட்டு காலியான பாட்டிலை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

எம்மா இந்த பாருங்க உங்க சண்டையை வீட்ல போய் வச்சுக்கோங்க உங்க ஊடா இது என்று வார்டன் அம்மா சத்தம் போட்டதும் பரமசிவம் அமைதியானார்.


அரைமணிநேரம் கழித்து சுரேஷ் கண் விழித்து தண்ணீர் கேட்டான்
அவன் தலையை கோதிவிட்டவாறே சுரேஷ் அப்பா வந்துறேக்கேன்டா என்றார். அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
சுரேஷ் அப்பாவை பார்த்து 
சிரித்தான். அவ்வா அவ்வா என்றான்.
அழுது கொண்டே மகனை வெரிகுட் என்றார்.

மறுநாள் மதியம் டிஸ்சார்ஜ் செய்தார்கள். பரமசிவம் ஓலா புக் செய்திருந்தார். சுரேஷ் இப்போது தெளிவாக இருந்தான்.

சுரேஷ் பத்து வயது வரை அவன் யாருடனும் பேசவும் இல்லை. யார் சொல்வதையும் அவனால் கேட்கவும் இல்லை. அவனை பரிசோதித்து பார்த்த சித்த மருத்துவர் அவனுக்கு ஐம்புலன்களில் இரண்டு சரியாக வேலை செய்யவில்லை என்றும் அவனுக்கு சித்த விருத்தி நடைபெறாது என்றும் சொன்னதும் பானு ஒரு வாரம் சாப்பிடாமல் அறையில் அடைந்து கிடந்தாள்.  அவன் பிறந்ததில் இருந்து உடம்பு அடிக்கடி நோய்வாய் படும் போது ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு வருவதே வேலையாகிவிட்டது . பரமசிவம் வருமானம், தாத்தாவின் பென்ஷன், வாடகை பணம் முழுவதும் அவனது மருத்துவ செலவுக்கே சரியானது. அதனாலயே மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் பரமசிவம். அவனை ஒழுக்கமான நல்ல மனிதனாக வளர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் தனது குறிக்கோள் என்று சொன்னார். உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது .  அறம் செய்வது என்பது முற்றிலும் மறைந்து விடுமோ என்று கூட பல நேரங்களில் வருந்தியிருக்கிறார். உதவி செய்பவர்கள், இரக்கப் படுகிறவர்களைப் பார்த்துதான் இந்த உலகம் பிழைக்கத் தெரியாதவன், அப்பாவி என்றும் கிண்டல் செய்கிறது . நாம் செய்கிற நல்ல காரியங்களை ஏளனம் செய்யும் போது ஏற்படுகிற வலி அதிகம். இந்த வலியை சிறுவயதிலிருந்தே பரமசிவம் அனுபவத்திருந்தார். ஆனாலும் தாம் கொண்ட இலட்சியத்தை விடாமல் அறத்தோடு வாழ்ந்து வந்தார். அதனால் தன் மகனை குறள் வழி நெறிபடுத்தினார்.
அதனால் ஊர் வம்பு தான் அதிகம் வந்தது.

அன்றைக்கு டிஸ்சார்ஜ் என்பதால் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு மகனுக்கு துணையாக இருந்து பார்த்துக் கொள்ள முடிவு செய்திருந்தார்.  ஓலா வந்து கிளம்பியதும் சுரேஷ் வழக்கம் போலவே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தான். அடிக்கடி அவ்வா அவ்வா என்று பரமசிவத்தைப் பார்த்து உளற ஆரம்பித்தான். இப்போதெல்லாம் அடிக்கடி உளறுகிறான். பார்ப்பவர்கள் எல்லாம் இரக்கப்படுவார்கள் .  ஓலா கேப் ஆயிரம் விளக்கு பகுதி தாண்டி சைதாப் பேட்டை நோக்கி போக ஆரம்பித்தது.
நமக்கு இருக்குறது ஒரே மகன் அவனா சுதந்திரமா இருக்க விடுங்க நமக்கு இருக்கிறது ஒரே மகன் என்றும் புலம்ப ஆரம்பித்தாள். பரமசிவம் அதை பொருட்படுத்தவில்லை. சுரேஷ்குக்கு மொபைல் போனில் திருக்குறள் சொல்லிக் கொடுத்து வந்தார் . அவன் குழந்தையாக சிரித்துக் கொண்டே அதை திரும்பி சொன்னான். ஆட்டோக்காரன் சுரேஷ் மீது இரக்கப்பட்டான். பாவம் இந்த வயதில் இப்படி ஒரு நிலைமையா என்று தோன்றியது. கொஞ்சமாவது நான் சொல்கிறதை கேட்டால்தானே ஆம்பள திமிரு அப்படித்தான் என்று பானு முகத்தை திருப்பிக் கொண்டு வந்தாள்.
வேளச்சேரி பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று ஒ எம் ஆர் சாலையில் போனதும் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்தது.  திடீரென்று அருகில் வந்து நின்ற பேருந்து ஷுடன் பிரேக்கில் நின்றது. அந்த அதிர்ச்சியில் ஜன்னலில் இருந்து ஒரு கைக் குழந்தை தவறி நடு ரோட்டில் விழுந்தது.  விழுந்த வேகத்தில் தொலைவில் லோடு ஏற்றிக் கொண்டிருந்த லாரி வருவதை யாரும் கவனிக்காத போது சுரேஷ் பார்த்தான். அதைப் பார்த்த உடன் யாராவது ஆபத்தில் இருந்தால் உடனே ஓடிச்சென்று காப்பாற்ற வேண்டும் என்றும் அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே வண்டியை திறந்து தாவி குதித்து ஓடினான். பானு பயத்தில் கத்திக் கொண்டே கதவை திறந்து உடன் ஓடினாள். தாத்தாவும் பரமசிவமும் இறங்குவதற்குள் சுரேஷ் ஓடிப் போய் குழந்தையை தூக்கினான். நிமிட நேரத்தில் குழந்தையை காப்பாற்றி ஜன்னல் சீட்டில் இருந்த பெண்ணிடம் கொடுத்தான்.  வேகமாக வந்த லாரி அவன் மீது மோதி நின்றது . ட்ராபிக் கம்பத்தில் மோதிய சுரேஷ் தலையில் அடிபட்டு மறுபடியும் ரத்தம் கொப்பளித்தது  .  தாத்தா பயத்தில் அலறியபடி ஓடி வந்தார். அனைவரும் ஓடி வந்து அவனை தூக்கினர். பரமசிவம் சுரேஷை தூக்கி சாலைக்கு ஓரமாக வந்தார். ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. பானு மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக சொன்ன தாத்தா இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றுமாறு அழது கொண்டே சொன்னார். நிமிடத்தில் அனைத்தும் மாறியது. சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால் சுரேஷ் உயிர் பிழைத்தான்.

மறுநாள் செய்தித் தாளில் சுரேஷின் செயலை பாராட்டி செய்தி வெளியிடப் பட்டிருந்தது . மயக்கம் தெளிந்து எழுந்ததும் பானு தெளிவடைந்திருந்தாள். அந்த செய்தி பார்த்ததும் அவளுக்கு மகனை நினைத்து பெருமைப் படவா அல்லது இப்படி எதாவது மகனுக்கு ஆபத்து வருகிறதே என்று வருத்தபடவா என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள். தாத்தா பேரனுக்கு ஹார்லிக்ஸ் ஆற்றிக் கொண்டிருந்தார். பிரபல சேனல் ஒன்றில் மனித நேய நேரம் என்ற நிகழ்ச்சிக்காக சுரேஷ் மற்றும் அவனது பெற்றோர்களை அழைப்பு விடுவிக்க சேனல் காரர்கள் வந்திருந்தார்கள். பரமசிவம் மகனை நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டார். பொய்யும் பேராசையும் அடுத்தவனை ஏமாற்றும் மனிதர்களை போல இல்லாமல் புத்தி சுவாதினம் இல்லாமல் இருந்தாலும் தான் மகன் சிறந்தவன் என்ற பெருமிதமும் உண்டானது. அறம் கொஞ்சமும் இல்லாத உலகில் தன் மகன் பிழைக்கத் தெரியாதவன் தான் என்று நினைத்துக் கொண்டே மாத்திரை வாங்க மருந்து கிடங்கை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பொய் சொல்லத் தெரியாத சுயநலமாக இருக்கத் தெரியாத ஏமாற்றத் தெரியாத தன் மகனின் எதிர்காலம் குறித்து கவலை உண்டானது அவருக்கு.


அன்பும் நன்றி..!

G. கோபி.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )