Posts

Showing posts from June, 2023

அம்மா, அப்பா, நண்பர்கள் மற்றும் புத்தகங்களுக்கு நன்றி..... ✍️

Image
883,612,800 வினாடிகள் வாழ்ந்திருக்கிறேன். கால்குலெட்டரில் போட்டு பார்த்தேன். ஆச்சர்யமாக இருக்கிறது. சந்தோசத்தை விட வாழ்க்கை அதிகம் வேதனையை மட்டுமே தந்திருக்கிறது. புத்தகமும் குடும்பமும் நல்ல நண்பர்களும் தான் ஒரே  எனது நம்பிக்கை . காலையில் செல்மா லாகர் லெவ்வின் மதகுரு நாவல் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இன்றைக்கு எப்போதும் போலவே நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். முதல் வாழ்த்து அக்கா அம்மா உடையதுதான். ஊரில் இருந்து அத்தை வாழ்த்துக்கள் கூறினார்கள். பிறந்தநாள் அன்றைக்கு விடுமுறை வருவது கூடுதல் சந்தோசம் . பிறந்தநாள் கொண்டாடுவதில் எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால் நண்பர்கள் வாழ்த்துக்கள் சொல்வது மட்டுமே ஒரே சந்தோசம். HCL லில்  வேலை பார்த்த போது நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். என் வாழ்க்கையில் முதல் கேக் அதுதான். அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.  காலையில் எழுந்து அறையை சுத்தம் செய்தேன். துணி துவைத்தேன் . மதியம் வரை உறங்கினேன். மாலையில் பீச்சுக்கு தனியாக போயிருந்தேன். தனிமையை விட சுகம் எதுவுமில்லை. ஆனால் வலியும் அதிகம். அவ்வளவு...

நமது தமிழ் பண்பாட்டின் வரலாறு...!

Image
பண்பாட்டின் பயணம் என்ற  மறைக்கப் பட்ட தமிழக வரலாறு என்ற புத்தகம் வெளியாகியுள்ளது. Youtube இல் இது குறித்த எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையை பார்த்தேன். இன்றைக்கு உள்ள தமிழ் நாட்டில் உள்ள நகரங்கள் எவ்வாறு உருவாகின.?  சிந்து சமவெளி நாகரீகம் எப்படி தொடங்கியது? அதற்கும் திராவிட மொழிக் குடும்பமான தமிழுக்கும் என்ன தொடர்பு அதற்கான சான்றுகள் என்று மிக முக்கியமான தகவல்களை கொண்ட உரையாகும்.  நம் அறிய தவறிய தமிழ் நாட்டி உண்மையான வரலாறு. முப்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு ஆய்வாளராக பாலகிருஷ்ணன் அவர்கள் இதை எழுதியுள்ளார்கள் . தமிழ்நாடு பற்றி தெரிந்து கொள்ள முக்கியமான புத்தகம்.  குறிப்பாக உலகின் பழமையான மொழிகளை ஆராய்ச்சி செய்து பார்த்தால் அதற்க்கும் தமிழ் குடும்பத்திற்கும் என்ன தொடர்பு? உலகின் மூத்த குடி என்ற பெருமை தமிழ் மக்களுக்கு உரியதா? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னரே சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய வரலாறு மத சார்பற்ற, civilization என்று சொல்லபடுகிறது பண்பாட்டின் வளர்ச்சி எப்படி பட்டது என்பது குறித்த மிக முக்கியமான தகவல்களை சொல்கிறது. இணையத்தில் இந்த புத்தகம் விற்பனைக்கு உள...

ஒரு கண் மூடிய மஞ்சள் பூனை

Image
மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கு இடையே உள்ள அன்பும் பிணைப்பும் அவருடைய ஓவியத்தில் அழகாக வெளிப்படுகிறது. கலையின் வழியாக இயற்கை மற்றும் பிராணிகளிடையேயான நேசத்தை விளக்கபவையே அவருடைய ஓவியங்கள். இன்ஸ்டாகிராமில் இன்னா ரூடாவின் ஓவியங்கள் வியப்பூட்டக் கூடியவை . மஞ்சள் உடையோடு ஒரு பெண் பூனையை தூக்கி வைத்திருப்பது போன்ற ஓவியத்தை பார்த்தேன். மறக்க முடியாத ஓவியம்.  The Kiss எனப்படும் அந்த ஓவியம் இணையத்தில் கிடைக்கிறது. அந்த பெண் கொடுத்த முத்தத்தின் அழுத்தம் காரணமாக அந்த பூனை ஒரு கண்ணை இறுக்கமாக மூடியபடி இருக்கிறது. பெரும்பாலும் பூனைகள் விசித்திரமானது. குறும்புகள் நிறைந்தது. உறக்கம் வராத பின்னிரவில் எதாவது வீட்டின் மேற்கூரை மீது பூனைகள் ஊர்ந்து செல்வதை பார்த்திருக்கிறேன் . உண்மையில் பூனைகள் பசிக்காக எந்நேரமும் அலைந்த படி இருக்கின்றன. இந்த ஓவியத்தில் கூட ஒரு கண் மூடிய பூனை, மஞ்சள் உடை சுருள் முடி முத்தம் கொடுக்கும் பெண்ணின் ஒற்றை புருவம். மஞ்சள் உடையில் இருக்கும் வித வித மான கோடுகள் கட்டங்கள் பூக்கள் போன்ற நெளிவுகள் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது. இன்னாரூடாவின் ஓவியத்த...

பறந்திடு தமிழா...!

Image
காட்டாற்று வெள்ளம் சரசரவென பாய்ந்து பின்னர் ஓய்ந்து போவது போல் வீட்டுக்குள் வந்து அமர்ந்தான் தியாகு. உடலில் ஒருவகையான சோர்வும் பசியும் களைப்புமாக இருந்தான். இரண்டு நாட்கள் ஓயாமல் தொடர்ந்து தூக்கமில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது கண்களுக்குள் சிவந்து போய் ஒரே நமைச்சலாக இருந்தது. மெல்ல டிவியை ஆன் செய்தான். " என்ன தியாகு ஏன் ஒரு மாதிரியா இருக்குற உடம்பு ஏதும் சரியில்லையா என்று செய்தி தாள் படித்துக் கொண்டிருந்த தியாகுவின் அப்பா கேட்டார். அவன் பதில் ஏதும் சொல்லாமல் தொலைக் காட்சியின் சேனல்களை மாற்றுவதுமாக இருந்தான். வி. ஆர் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவடைய வேண்டும் அவர்களுடைய கோரிக்கைகள் மறு பரிசீலனை செய்யப்படும் என்று செய்தியைப்பார்த்தான். வழக்கம் போலவேதான் இதையும் சொன்னார்கள். போனதடவை போராட்டம் நடைபெற்ற போது பொய் காரணங்களை கூறி தடை செய்தார்கள் . உண்மையான போராட்டத்திற்கு மதிப்பே இல்லையா என்று ஆதங்கம்மாக இருந்தது. டிவியில் பேசிக் கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளரின் பேச்சு அவனுக்கு எரிச்சலை ஏற்படத்தியிருக்க வேண்டும். இந்த முறையும் மாணவர்கள் போராட்டம் தோல்வியில் மு...

விவசாயியின் ரத்தம்

Image
  அந்த ஆசிரியர் வந்து நின்றதும் அந்த வகுப்பே அமைதியானது. அந்த நிமிட சமயத்தில் ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அவ்வளவு அமைதி. அனைவரது கண்களும் ஆசிரியரின் கோபத்தை எதிர்பார்த்தன.. அறை முழுவதும் ஆழ்நிலை மௌனத்தில் திளைத்தது. வழக்கத்திற்கு மாறாக ஆசிரியர் ஒன்றும் செய்யாமல் அமர்ந்து விட்டார் என்று நகைத்தனர். ஆசிரியர் வருகை பதிவேட்டினை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். ஒவ்வொருவரது வருகையையும் குறித்துக் கொண்டே வந்தார். "சுந்தரம், சுந்தரம் " என்று இருமுறை அழைத்தும் ஒன்றும் பதில் இல்லை. " என்ன சுந்தரம் இன்னைக்கு வரலியா " என்று எரிச்சல் அடைந்தார். " அவன் வரல சார் என்று வினோத் சொன்னான். சுந்தரம் வராத சோகமும் யாரையோ பிரிந்த விட்ட வலியோடு இருந்தான் வினோத். என்ன ஆச்சுடா அவனுக்கு இன்னைக்கும் வரல ஒரு வாரமா தொடர்ந்து ஆப்சென்ட் ஆகிருக்கான் " என்று கேட்டார். வினோத்தை அவன் அருகில் அழைத்துக் கேட்டார். வினோத் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான். மனதில் வேதனை பொங்க ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் கண்ணீர் விட்டான். ஆசிரியர் அதை கவனித்திருக்க கூ...

நயாகரா ஐஸ்கீரீம்...!

 நயாகரா நீர்வீழ்ச்சியின் பயணமாக The maid of mid என்று சொல்லப்படுகிற சாகசபயணமாக way2go youtube சேனலில் வெளியான வீடியோ ஒன்றைப் பார்த்தேன். உண்மையாக நேரில் சென்றுபார்த்தது போல அத்தனைசுவாரஸ்யமாக இருக்கிறது. அமெரிக்கன்பால்ஸ், நயாகராபால்ஸ், ரெயின்போபாலம் என பார்ப்பதற்கு பிரமாண்டமான இடமாக இருக்கிறது. அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிற ரெயின்போப்ரிட்ஜ் 1000 அடிக்கும்மேலானநீளம். தொலைவிலிருந்து பார்க்க பெரியகிளிப் கொண்டு இரண்டுபெட்டிகளை தாங்கிப்பிடித்ததைப் போலிருக்கிறது. இந்தியா பாக்கிஸ்தான் எல்லையை தவிர வேறு எதுவும் நான் டிவியில் பார்த்ததுகூட இல்லை. பள்ளிவிடுமுறை நாட்களில் ஊருக்கு போகும்போது ஒருமாவட்டம் முடிந்து இன்னொரு மாவட்ட உட்கோட்டஎல்லை ஆரம்பம் என்பதையும் ராமேஸ்வரம் பாம்பன்பாலத்தைத் தவிர எனக்கு வேறெதுவும் தெரியாது. ஆனால்இந்தவீடியோவில் " observation டெக் " என்கிற பெரியடவர் போன்ற உயரமான இடத்திலிருந்து நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்கையில் உடைந்து நொறுங்கிய ஐஸ்கிரீம்போல அருவிகிடக்கிறது. மேலும் அமெரிக்கன்பால்ஸ்லிருந்து கனடாவைபார்க்கமுடியும். குறிப்பாக ஒருநாட்டிலிருந்து இன்னொரு ந...

மென்னடை தொடும் நேரம்

  இன்ஸ்டாகிராமில் Lukepk எனும் page உள்ளது அதில் கை இசைக் கருவிகள் கொண்டு ( Instrumental music ) இசைக்கப்படும் இசை எனை வெகுவாக கவர்ந்தது. Adagietto என்ற மென்னடை இசை கேட்பதற்கு இதமாக உள்ளது. உறக்கம் வராத பின்னிரவில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் காற்று உடலை தொடுவது போல மென்மையாக இருந்தது.  இசை மனதை தொடுவதை போல வேறெந்த தொடுதலும் மனதை ஆறுதல் படுத்தாது. இந்த இசை ஜென் எனப்படும் பௌத்த அமைதி நிலைக்கு ஒப்பானது. மெல்ல மெல்ல கவலைகள் மறந்து மனம் அந்த இசையின் சப்தத்தோடு ஒன்றாக ஆரம்பிக்கும் போது ஒரு அனைத்தையும் கடந்த சாட்சி நிலை உருவாகும். அது மனமற்ற நிலை. மனமின்றி நினை சிறகுகள் இன்றி பற என்று ஓஷோ சொல்வது மிக மிக பொருத்தமாக இருக்கும். The shawshank redemption திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஆண்டி சிறைச் சாலைக்குள் திடீரென்று இசையை மீட்டு விடுகிறான். ஒட்டு மொத்த சிறைக் கைதிகளும் ஒரு நிமிடம் பிரமித்து போய் நின்று அந்த இசையை ரசிப்பார்கள் அந்த குற்றத்திற்காக அவனை இருட்டறையில் அடைத்து விடுவார்கள். மற்றொரு காட்சியில் ஆண்டி நண்பர்களிடம் அந்த சில நிமிட இசை இருட்டறையில் தான் அடைப்பட்டு கிடக்கும் போது ...

சிறுவர்களின் பசி

 சில மாதங்களுக்கு முன்பு youtube இல் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பசியின் கதை என்ற உரையை கேட்டேன். மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் அவர்களை துரத்துவது பசிதான். உலகின் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தீர்க்கவே முடியாத பிரச்சனை பசிதான். பசித்த வேளையில் உணவு இல்லாமல் போவதை போல துயரமான விஷயம் எதுவுமில்லை. இன்றைக்கும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மனிதர்கள் குடும்பத்தை பிரிந்து அறைகளிலும் மேன்ஷன்களிலும் தங்கியிருந்து வேலைக்கு போகிறார்கள். அவர்களுக்கு இருக்கிற ஒரே பிரச்சனை உணவுதான். காலையில் இட்லிக்காக வரிசையில் நிற்க வேண்டும், மதியம் சாம்பார் சாதமோ, வரைட்டி ரைஸ் அல்லது தக்காளி சாதம் இல்லையென்றால் 50ரூபாய் மீல்ஸ் இவற்றுக்காக வரிசையில் நிற்க வேண்டும். சில நேரங்களில் மதியம் 2 மணிக்கு மேல் எந்த ஹோட்டலிலுமே சாப்பாடு இருக்காது. வேறு வழிஇல்லாமல் ஜூஸ் குடித்து அல்லது டீ குடித்து விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட வேண்டிய துயரம் தான். கையில் பணமிருந்தும் உணவு கிடைக்காத அவலம்தான். எல்லோருக்கும் உலகத்தில் மூன்று வேளை உணவு கிடைப்பதில்லை. அதுவும் இளம் வயதில் அதுவும் பத்து, ஏழு வயது சிறு...

செல்போன் மந்திரவாதி....!

  செல்போன் உலகத்தை உள்ளங் கைக்குள் கொண்டு வந்து விட்டது. விரும்பிய உணவு, உடை, வீட்டிற்கு தேவையான அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து வாங்கமளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. எஸ். ராமகிருஷ்ணனின் உணவு குறித்த youtube உரை ஒன்றில் எந்த தொலைகாட்சியிலாவது சோறு சாப்பிடுங்கள் என்று விளம்பரம் வருகிறதா? இல்லை எல்லாம் உடலுக்கு ருசியும் கெடுதலும் ஏற்படுத்தக் கூடிய துரித உணவுகள், கண் கவரும் உடைகள், பாலின்ப இச்சையை தூண்டும் போர்ன் வெப் சீரியஸ்கள் சமூக வலைதளங்கள் என்று அனைத்தும் நமது வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அதே நேரத்தில் இதன் மூல காரணமாக வெளி நாட்டு சந்தைபடுத்தலும் வணிகமும் இருப்பதை நம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில் தொழில்நுட்பம் மனிதர்களின் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் அமைந்துள்ளது. போன வருடம் ஒரு முறை youtube பார்த்துக் கொண்டிருந்த போது மதுரையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வரும் ஒருவரின் கதையை பற்றிக் கேட்டேன். இது மாதிரி குறைந்த விலையில் தரமான உணவுகள் வழங்கி வியாபாரம் செய்யும் மனிதர்களும் இந்த தொழில் நுட்ப வளர்ச்சியால் youtube இன்ஸ்டாகிர...

தங்கம் எனும் மஞ்சள் பிசாசு

 நகை தங்கம் எளிய வசதி இல்லாத மக்களின் குடும்பங்களையும் எப்படி பாதித்தது அதுவும் குறிப்பாக தங்கம் வரதட்சணை, நகை போன்ற கொடுமைகளால் இந்திய பெண்களின் வாழ்வு எப்படியெல்லாம் அல்லல் பட்டது திருமணம் மூலம் பெண்கள் கொண்டு வருகிற தங்கம் எப்படி டாஸ்மாக் கடைக்கு போய் குடும்ப வாழ்வை சீரழித்தது இதற்கு விளைவாக மாமியார் கொடுமைகள் கணவன் கொடுமைகள் மூலம் குடும்ப வாழ்க்கை சிதைவுண்டு போனது என்பதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் நடந்த கதை தான். அந்த தங்கம் எப்படி இந்தியாவில் கொள்ளையடிக்கப் பட்டது. தங்கம் எனும் மஞ்சள் பிசாசு எப்படி இந்தியா நாட்டை ஐரோப்பியர்களிடம் அடிமைப் பட வைத்தது என்று மார்க்கசிய பார்வையில் எழுதப் பட்ட இந்த புத்தகத்தில் மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகிறார். குறிப்பாக வாஸ்கோடகாமா இந்திய கரையை தொட்டவுடன் தான் கொண்டு வந்த சரக்கை நான்கு பெட்டி நிறைய உல்லன் ஆடைகள், ஜாடி நிறைய தேன், ஆறு தொப்பிகள், சர்க்கரை பவளம், இரண்டு பேரல்களில் எண்ணெய் வெண்கலப் பாத்திரம் கொடுத்து தங்கம் பெறலாம் எனக் கருதி மன்னரை சந்திக்கிறார். நெடிஇருப்பு ஸ்ருபம் என்ற மன்னாரோ, தங்கம் தவிர மற்றதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். தங்க...

நெப்போலியனை தோற்கடித்த உப்பு - 2

  உலகின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று புகழ் பெற்ற 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹிரடோட்டஸ் என்பவர் ஒரு கதையை குறிப்பிடுகிறார். பாபிலோனிலிருந்த பாரசீகர்களை பற்றிய குறிப்பு இது. நகரத்தின் முக்கியமான பகுதியில் பாபிலோனிய அரசனின் கல்லறை இருந்தது. அதன் மீது, " என்னுடைய சிம்மாசனத்தில் அமர நேரும் என் வாரிசுகளில் யாருக்காவது செல்வம் தேவைப்பட்டால் இக்கல்லறையை திறந்து விரும்புகிற அளவிற்கு செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே அவசியம் ஏற்பட்டாலொழிய இதை செய்யக் கூடாது, அப்படி செய்தால் நன்மை தராது " என்று  எழுதப்பட்டிருந்தது. பாரசீக அரசன் டைரஸ் என்பவன் பாபிலோனியாவிற்கு அரசனான். கல்லறையில் இருக்கும் செல்வத்தை கைப்பற்ற அவன் கல்லறையை உடைத்தான். அதில் செல்வம் எதுவும் இல்லை. வாசகம் பொறித்த கருங்கல்தான் இருந்தது. " உனக்கு பணத்தாசை அதிகம். அந்த பணம் எப்படிக் கிடக்கிறது என்பதை அறிய நீ அக்கறை காட்டாதவன். இல்லையென்றால், செத்துப் போனவர்களின் சமாதிகளை திறந்திருக்க மாட்டாய்.  இந்த வாசகம் இன்றும் பொருந்தும். பணத்தாசை ஒருவனை கல்லறையை தோண்டி பிணத்தைக் கூட சோதனை போட வைக்கும். இதே போன்ற...

நெப்போலியனை தோற்கடித்த உப்பு - 1

  இந்திய பொருளாதார வரலாறு என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது ஒரு தகவல் ஆர்வமாக இருந்தது. உலகின் மாபெரும் வீரனாக கொண்டாடப் பட்ட நெப்போலியனை பிரிட்டிஷ் அரசு எப்படி தோற்கடித்தது என்பதை பற்றியது. இந்தியாவில் விளையும் உப்பிலிருந்து ஒரு வகையான வெடி மருந்து தயாரித்து வணிகம் நடைபெற்றதை வே. மீனாட்சி சுந்தரம் குறிப்பிடுகிறார். இந்த வெடி உப்பு தயாரிப்பு குகைகள், பாறைகளில் படிந்து கிடக்கும் அழுக்கிலிருந்து தயாரிக்கப் பட்டிருக்கிறது.  பின்னர் சாணம், மூத்திரம், பறவைகள், ஓவ்வொல் ஆகியவற்றின் எச்சம், மனித கழிவு இன்னும் அழுகும் பொருட்கள் ஆகியவற்றை நீர்படாமல் ஒரு வருடமாவது மக்கவைத்து அதனை கொதி நீரில் கொதிக்க வைத்து வெடி உப்பை படிக்கங்களாக பிரித்து எடுப்பார்கள். இதனோடு வேறு சில நைட்ரேட்களும் கலப்படமாக இருக்கும். இதனால் வெடி மருந்தின் வீரியத்தை இது குறைத்து விடும். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெடி மருந்தில் கலப்படம் குறைவாக இருந்ததால் கிராக்கி அதிகம். 1757 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிளாசிப் போரில் வெற்றி பெற்று வங்கம், பீகாரை கைப்பற்ற இந்த வெடி உப்பின் மூலம் தயாரிக்கப் பட்ட வெடி மருந்து உதவியது. ஒ...