நெப்போலியனை தோற்கடித்த உப்பு - 2

 உலகின் முதல் வரலாற்று ஆசிரியன் என்று புகழ் பெற்ற 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹிரடோட்டஸ் என்பவர் ஒரு கதையை குறிப்பிடுகிறார்.


பாபிலோனிலிருந்த பாரசீகர்களை பற்றிய குறிப்பு இது. நகரத்தின் முக்கியமான பகுதியில் பாபிலோனிய அரசனின் கல்லறை இருந்தது. அதன் மீது, " என்னுடைய சிம்மாசனத்தில் அமர நேரும் என் வாரிசுகளில் யாருக்காவது செல்வம் தேவைப்பட்டால் இக்கல்லறையை திறந்து விரும்புகிற அளவிற்கு செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையிலேயே அவசியம் ஏற்பட்டாலொழிய இதை செய்யக் கூடாது, அப்படி செய்தால் நன்மை தராது " என்று  எழுதப்பட்டிருந்தது. பாரசீக அரசன் டைரஸ் என்பவன் பாபிலோனியாவிற்கு அரசனான். கல்லறையில் இருக்கும் செல்வத்தை கைப்பற்ற அவன் கல்லறையை உடைத்தான். அதில் செல்வம் எதுவும் இல்லை. வாசகம் பொறித்த கருங்கல்தான் இருந்தது. " உனக்கு பணத்தாசை அதிகம். அந்த பணம் எப்படிக் கிடக்கிறது என்பதை அறிய நீ அக்கறை காட்டாதவன். இல்லையென்றால், செத்துப் போனவர்களின் சமாதிகளை திறந்திருக்க மாட்டாய்.  இந்த வாசகம் இன்றும் பொருந்தும். பணத்தாசை ஒருவனை கல்லறையை தோண்டி பிணத்தைக் கூட சோதனை போட வைக்கும். இதே போன்ற பணத்தாசைதான் அநியாய வட்டி மற்றும் எளிய மக்களிடம் போடப்பட்ட நிலவரி வசூல் முறைக்கும் காரணமாக இருந்தது.

துக்காசா என்ற கூலிகள் கொண்ட அமைப்பு கடன் வசூல் செய்வதற்காக உருவாக்கப்பட்டது. வட்டிக்கு கடன் வாங்கிய பெரும் முதலாளிகள் அதனை திரும்ப செலுத்த முடியாத போது இந்த துக்காசா கூலிப் பட்டாளம் அவர்கள் வீட்டுக்கு போய் அவர்கள் காலில் விழுந்து கடனை வசூல் செய்வர். கடன் வாங்கிய முதலாளிகள் கடனை திரும்ப செலுத்தாமல் இருந்தாலோ அல்லது கடன் கொடுத்தவர்களின் சொத்தை அபகரிக்க முயன்றாலோ இந்த துக்காசா என்ற கூலிப் பட்டாளத்தால் எதுவும் செய்ய முடியாது. அவர்கள் வெறும் காலில் விழும் வேலையை மட்டும் செய்துள்ளனர் .
வரலாற்றில் இது போன்ற லட்சக்கணக்கான கொடுமைகள் நடத்துள்ளன. குறிப்பாக அநியாய வட்டி மற்றும் நிலவரி செய்யும் முறை இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உணவு உற்பத்தி செய்ய முடியாமல் தவித்தனர்.

தென்னிந்தியா முழுவதும் பருத்தி உற்பத்தி திருநெல்வேலி வரை நல்ல முறையில் நடைபெற்றது. இதனை தெரிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசு அந்த உற்பத்தியை கையகப்படுத்தி பிறநாடுகளோடு வணிகம் செய்ய தொடங்கினர். கரையான் அரிப்பதை போல இந்தியாவை ஆங்கிலேய அரசு கொள்ளையடிக்க தொடங்கியது. பஞ்சு உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் இந்தியர்கள் உடுத்தும் உடை சாரசரியாக 7 கிலோதான். ஆனால் அமெரிக்கர்கள் 32 கிலோ. சீன மக்கள் 17 கிலோ அளவுக்கு பயன்படுத்து கின்றனர். ஆனால் நமது கிராம மக்கள் இடுப்பு வெட்டியை தவிர எதுவும் அறியாதவர்கள் என்று வே. மீனாட்சி சுந்தரம் சொல்கிறார்.

திறமையாக உழைத்தும் எந்த வசதியும் இன்றி எளிய வாழ்க்கை நடத்தி நம் நாட்டு மக்களை பிரிட்டிஷ் அரசு வரிவசூல் செய்வதோடு அடிமைப் படுத்தி அவமானப் படுத்தியது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை நாவல் இந்தியா மக்களின் அவலநிலையை பதிவு செய்துள்ளது. அதில் நீதிக்காக மக்கள் என்னென்ன துயரங்களை அடைத்துள்ளனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. இந்த வரலாற்றினை மீட்டெடுப்பு செய்வதோடு அதன் வளர்ச்சிக்கு தேவையான பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். இந்த புத்தகம் இந்தியாவை பிரிட்டிஷ் அரசும் இந்தியா மேல் சாதியினர் மற்றும் பெரும் முதலாளிகள் அரசர்கள் எப்படி கொள்ளையடித்தார்கள் என்பதை விவரிக்கிறது. 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )