அயோத்தியின் மனிதர்கள்
அயோத்தி திரைப்படம் பார்த்தேன். எஸ். ராவின் இணையதளத்தில் அயோத்தி திரைப்படதிற்கு அவர் கதை எழுதிஇருப்பதாகவும் அந்த படம் பலரால் பாராட்டப்பெற்று திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறப்பதாகவும் ஒரு குறிப்பை வாசித்தேன். பெரிய திரையில் படம் பார்ப்பது ஒரு சிலாகிப்பான அனுபவம். நெடு நாட்கள் கழித்து திரையரங்கிற்கு போய் படம் பார்த்தேன். அயோத்தி படத்தில் ராமேஸ்வரம் போவதற்காக காசியிலிருந்து ஒரு குடும்பம் கிளம்புகிறது. தந்தையின் கெடுபிடி மிக்க ஆணாதிக்கத்தால் குடும்பமே பயந்து நடுங்குகிறது. தீவிர மதப் பற்று மிக்கவராகவும் அவர் தந்தை காட்சி படுத்தப் பட்டிருந்தார். படம் ஆரம்பித்து முதற் பாதியில் ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார்கள். பேருந்தில் சென்றால் சூரிய உதயத்தை பார்க்க முடியாது என்று கருதி டாக்ஸி புக் செய்கிறார். Ola கேபில் ஏறும் முன்னர் அம்மா மகளுக்கு ரெஸ்ட் ரூம் போக வேண்டியதன் தேவை இருப்பதாக தந்தையிடம் அனுமதி கேட்கிறார். சூரிய உதயத்தை பார்த்தே ஆக வேண்டிய முனைப்பில் இருந்த அவர் மனைவியையும் மகளையும் திட்டுகிறார். ஒரு மணி நேரம் சிறுநீர் கழிப்பதை எப்படியாவது அடக்கி வைக்குமாறு க...