அயோத்தியின் மனிதர்கள்

 அயோத்தி திரைப்படம் பார்த்தேன். எஸ். ராவின் இணையதளத்தில் அயோத்தி திரைப்படதிற்கு அவர் கதை எழுதிஇருப்பதாகவும் அந்த படம் பலரால் பாராட்டப்பெற்று திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறப்பதாகவும் ஒரு குறிப்பை வாசித்தேன்.  பெரிய திரையில் படம் பார்ப்பது ஒரு சிலாகிப்பான அனுபவம்.  நெடு நாட்கள் கழித்து திரையரங்கிற்கு போய் படம் பார்த்தேன். அயோத்தி படத்தில் ராமேஸ்வரம் போவதற்காக காசியிலிருந்து ஒரு குடும்பம் கிளம்புகிறது. தந்தையின் கெடுபிடி மிக்க ஆணாதிக்கத்தால் குடும்பமே பயந்து நடுங்குகிறது. தீவிர மதப் பற்று மிக்கவராகவும் அவர் தந்தை காட்சி படுத்தப் பட்டிருந்தார்.

படம் ஆரம்பித்து முதற் பாதியில் ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார்கள். பேருந்தில் சென்றால் சூரிய உதயத்தை பார்க்க முடியாது என்று கருதி டாக்ஸி புக் செய்கிறார். Ola கேபில் ஏறும் முன்னர் அம்மா மகளுக்கு ரெஸ்ட் ரூம் போக வேண்டியதன் தேவை இருப்பதாக தந்தையிடம் அனுமதி கேட்கிறார். சூரிய உதயத்தை பார்த்தே ஆக வேண்டிய முனைப்பில் இருந்த அவர் மனைவியையும் மகளையும் திட்டுகிறார். ஒரு மணி நேரம் சிறுநீர் கழிப்பதை எப்படியாவது அடக்கி வைக்குமாறு கூறுகிறார். என்னவொரு மோசமான வன்முறையான மனம். சிறுநீர் கழிப்பது இயற்கையான தேவைகளில் ஒன்று. அதை கழிக்கவிடாமல் தந்தை சூரிய உதயம்மும் பக்தியும் தான் முக்கியம் என்று இறுகிய மனநிலை கொண்டவராக இருக்கிறார். முதல் கட்சியில் சோப்பு நுரை குமிழ்கள் வைத்து விளையாடும் போது தந்தை வந்துவிடுகிறார். அது வரை குதூகலமாக இருந்த மொத்த குடும்பமும் அப்படியே மாறி சிறை அதிகாரி வந்தால் அமைதியாகிவிடும் சிறையைபோல் ஆகிவிடும். இன்னொரு காட்சியில் கல்லூரி கட்டணம் கட்ட பணம் கேட்கும் மகளை தந்தை திட்டியத்தோடு பெண்கள் படிப்பதை விரும்பாதவறாக இருக்கையில் எதற்கு பணம் தர வேண்டும் என சொல்லுகிறார்.
தந்தையின் மோசமான குணம் எவரிடமும் அவர் மரியாதையாக நடந்து கொள்ளாமல் அதிகார தோனியில் பேசுவது மகளுக்கும் அம்மாவிற்கும் அச்சத்தையும் வெறுப்பையும் உண்டாக் குகிறது.

வட மாநிலத்தவர் மற்றும் தமிழர்களுக்கும் இடையியான உறவையும் அவர்கள் தமிழ் நாட்டில் எப்படி நடந்து கொள்கிறார்கள்? இன்னோன்று மொழி தெரியாமல் வேறு மாநிலத்தில் பிரச்சனையில் மாட்டிக் கொண்டால் எப்படி இந்த உலகம் நம்மை நடத்துகிறது என்று மிக விரிவாக காட்சிபடுத்திஇருந்தனர்.  மிக எளிய கதையானாலும் ஒட்டு மொத்த இந்தியாவின் ஆணாதிக்கம், தீவிரமான மத நம்பிக்கை, மொழி பிரச்சனை மற்றும் மத ஒற்றுமை போன்ற பல முக்கியமான அம்சங்களை
திரைப்படம் பொறுப்புணர்வோடு பதிவு செய்துள்ளது.

இன்னொரு புறம் மதம் மனிதனுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? தந்தை யின் மதப் பற்றும் நம்பிக்கையும் பக்தி உணர்வும் ஆழமான சில உண்மைகளை சொல்லுகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த வட மாநில குடும்பத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் மாலிக் எனும் இஸ்லாமியா இளைஞர் செய்யும் உதவியும் அதற்காக அவர் அடையும் இடரும் மத பிரிவினையை தாண்டிய ஒரு ஒற்றுமை மனித உணர்வை நமக்கு வெளிப்படுத்துகிறது.

முதற் பகுதியில் காசியையும் அங்கு புனித யாத்திரை செய்யும் பயணிகளும் யாத்ரீகர்கள், சாலையோர மனிதர்களையும் பற்றி காட்சிகள் அற்புதமாக படமாக்காப் படிருக்கிறது. அதே சமயம் ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன் பிடித்து பதப்படுத்த கொட்டப்படும் ஐசும் மிக துல்லியமாக பார்க்க முடிந்தது. சண்டைக் காட்சி தேவை இல்லை என்றாலும் அது உள்ளூர் மீனவர்களுக்கு இடையேயான பிரச்னையையும் புரிய வைத்து விடுகிறது.  உணர்ச்சிபுர்வமான இசை வெகுவாக மனதில் பதிந்து கதையின் சம்பவங்களுக்கு ஏற்றாற் போல் உருவாக்க பட்டிருக்கிறது.

படத்தின் காட்சிகள் இந்தியாவின் பல குடும்பங்களின் முக்கிய பிரச்சனையை புரிய வைத்து விடுகிறது. பண்டிகை நாட்களில் அனைவரும் கொண்டாட்டத்தை அனுபவிப்பதில்லை
அது மருத்துவ மனைக்குப் போனால் தெரிந்து விடும். ஒன்பது வயது சிறுவன் பட்டாசு வாங்க பணமின்றி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மனதை உலுக்கி விட்டது.
மேலும் மருத்துவ மனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், நோயாளிகள், சிறையில் கைதிகளாக இருப்பர்வகள், போலீஸ்காரர்கள் என்று இவர்களுக்கென்று ஒரு பண்டிகையின் கொண்டாட்டமும் இல்லை. மனித சந்தோசங்களும், கொண்டாட்டங்களும் அனைவர்க்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. காலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பட்டாசு வாங்கி தருவதாக போனில் பேசும் மருத்துவமனை பணியாள் வேறு வழியின்றி விபத்து ஏற்பட்ட உயிரை காப்பாற்ற ஆம்புலன்சில் போகிறான்.  நாம் அனுப்பவிக்கிற சந்தோசங்களுக்காக யாரோ சிலர் சந்தோசத்தை இழந்து உழைக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டமும் அப்படியான ஒன்றுதானே. நாம் அடையும் சுதந்திரம் கூட யார் யாரோ ரத்தம் சிந்தி வாங்கிக் கொடுத்தது தானே?


Ola கேபில் ஏற்பட்ட தகராறில் தந்தையும் டிரைவரும் ஒருவாரசியோருவர் தாக்கி கொள்ளும் காட்சி அதனால் நடந்த விபத்தில் அம்மாவின் தலையில் அடிபட்டு மரணமடைகிறாள். விபத்தில் மரணமடைந்தால் போஸ்ட்மாட்டம் செய்வது தங்களது சாஸ்திர சாம்பிராதயங்களுக்கு எதிரானது என்று தந்தை வாதிடுகிறார். இதனால் அல்லல் படும் சிறுவனுக்கும் இளம் பெண்ணுக்குமாக மனம் இரங்கி அப்துல் மாலிக் உதவி செய்கிறான்.

நெருக்கடியான தருணங்களில் மத கொள்கைகளும், பழக்கவழக்கங்களும் ஏன் மனிதனை இடர் படுத்துகின்றன.
உண்மையில் இந்தளவு மனிதன் மதப் பற்று கொண்டவனாக ஏன் வாழ்கிறான்?
நெருக்கடியின் போது மனிதர்கள் தங்களை ஏன் பலவீணமாக உணர்கிறார்கள்? இத்தனை ஆணாதிக்க சூழலிலும் பெண்கள் கணவர் மீதும் குடும்பத்தின் மீது கொண்ட பற்று எதனால்? பெண்களை இப்படி நடத்தும் ஆணின் மன நிலைக்கு என்னதான் காரணம்?  குறிப்பாக இந்த காலகட்டத்தில் இந்த படம் ஏன் முக்கியமானது? என்று படம் பல விஸ்தாரமாக பல காட்சிகளின் ஊடே சில கேள்விகளையும் எழுப்புகிறது.

இறுதியாக எம்ப்பால்மிங் செய்ய தந்தை அனுமதிக்காத போது வெடித்து எழும் மகளை பார்த்து தந்தை ஒருகணம் அதிர்ச்சி அடைந்திருக்கக் கூடும்.  எத்தனை அடக்குமுறைக்கு அப்பாலும் ஒரு மனம் புரட்சி செய்யத் தான் போகிறது. உடற்கூறு செய்யப் பட்ட மனைவியின் உடல் முன்னால் ரமேஷ்வரம் தீர்த்தம் தெளிக்கப் படும் போது தந்தை உடைந்து அழும் காட்சி மறக்க முடியாத வேதனை ஏற்படுத்தக் கூடியது.  எந்த தடங்களும் இன்றி ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் கதையும் குறியீடுகள் நிறைந்த காட்சிகளும் முக்கியமான திரை அனுபவத்தைத் தருகின்றன. 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )