எளியவர்களின் தீபாவளி....!
எல்லாருக்கும் தீபாவளி ஓரே மாதிரி சந்தோசத்தை தருவதில்லை. பட்டாசு வாங்க முடியாமல், புது துணி இல்லாமல் கையில் காசில்லாமல் தீபாவளியை கடந்து போகும் மனிதர்கள்தான் நெறைய பேர் உள்ளார்கள். கஷ்டபட்டு உழைத்தாலும் முதலாளிகள், நிறுவனங்கள் போனஸ் தருவதில்லை என்பது தான் நிஜம். போனஸ் கிடைக்காததால் வீட்டில் தன்னை நம்பி வாழும் குழந்தைகள், மனைவிக்கு புது துணி, ஸ்வீட்ஸ் கூட வாங்க முடியாமல் எமாற்றத் தோடு வாழ வேண்டிய சூழல் தான் இன்றைக்கும் இருக்கிறது. வேலை பார்க்கும் தனியார் நிறுவனங்கள் போனஸ் தருவதில்லை என்பது தான் உண்மை. ஆனால் தமிழ் நிலத்தின் பண்பாட்டு வாழ்க்கை இந்த துயரத்திலும் அறத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறது என்பது வியப்பாகயிருக்கிறது. எவ்வளவோ கஷ்டமும் வறுமையும் இருந்தாலும் வீடு தேடி வரும் மனிதர்களுக்கு ஒரு வேளையாவது உணவு கொடுத்து தங்குவதற்கு இடம் தந்து உபசாரித்த நல்ல மனம் படைத்தவர்கள் நம் முன்னோர்கள். இந்த விருந்தோம்பல் பண்பும் பல்லுயிர் ஓம்புதலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் தமிழர்களின் வாழ்க்கை முறை என்பது வரலாறு. கு. அழகிரி சாமி எழுதிய, " ராஜா வந்திருக்கிறார் " சிறுகதை...