எளியவர்களின் தீபாவளி....!
எல்லாருக்கும் தீபாவளி ஓரே மாதிரி சந்தோசத்தை தருவதில்லை. பட்டாசு வாங்க முடியாமல், புது துணி இல்லாமல் கையில் காசில்லாமல் தீபாவளியை கடந்து போகும் மனிதர்கள்தான் நெறைய பேர் உள்ளார்கள். கஷ்டபட்டு உழைத்தாலும் முதலாளிகள், நிறுவனங்கள் போனஸ் தருவதில்லை என்பது தான் நிஜம். போனஸ் கிடைக்காததால் வீட்டில் தன்னை நம்பி வாழும் குழந்தைகள், மனைவிக்கு புது துணி, ஸ்வீட்ஸ் கூட வாங்க முடியாமல் எமாற்றத் தோடு வாழ வேண்டிய சூழல் தான் இன்றைக்கும் இருக்கிறது. வேலை பார்க்கும் தனியார் நிறுவனங்கள் போனஸ் தருவதில்லை என்பது தான் உண்மை.
ஆனால் தமிழ் நிலத்தின் பண்பாட்டு வாழ்க்கை இந்த துயரத்திலும் அறத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறது என்பது வியப்பாகயிருக்கிறது.
எவ்வளவோ கஷ்டமும் வறுமையும் இருந்தாலும் வீடு தேடி வரும் மனிதர்களுக்கு ஒரு வேளையாவது உணவு கொடுத்து தங்குவதற்கு இடம் தந்து உபசாரித்த நல்ல மனம் படைத்தவர்கள் நம் முன்னோர்கள். இந்த விருந்தோம்பல் பண்பும் பல்லுயிர் ஓம்புதலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதும் தமிழர்களின் வாழ்க்கை முறை என்பது வரலாறு. கு. அழகிரி சாமி எழுதிய, " ராஜா வந்திருக்கிறார் " சிறுகதை வறுமையிலும் அறத்தோடு வாழ்ந்த எளிய குடும்பத்தின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது.
தீபாவளி அன்றைக்கு பசியோடு வீட்டில்லாத சிறுவன் தாயம்மாள் வீட்டிற்கு வருகிறான். தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மட்டுமே புது துணி வாங்கிக் கொடுத்து பழைய துணியை உடுத்திக் கொள்ள இருக்கிறாள் தாயம்மாள். கணவருக்கு ஒரு புது துண்டு மட்டுமே உடுத்திக் கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் வறுமையில் வீடு தேடி வெளியே எச்சில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த சிறுவனை வீட்டிலுள்ள குழந்தைகள் கிண்டல் செய்கிறார்கள்.
தாயம்மாள் அவனை தன் பிள்ளையாக நினைத்து வீட்டிற்கு வரவேற்று உபசரிக்கிறாள். அந்த பையன் ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊருக்கு போகும் அம்மா அப்பா இல்லாத ஆதரவற்ற சிறுவன். அவன் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அழுக்கடைந்து போயிருக்கிறான். அவனை பிடிக்காமல் கிண்டல் செய்யும் குழந்தைகளை தடுத்து அவன் நிலையை எடுத்து சொல்லும் தாயம்மாள் அவனுக்கும் சாப்பாடு ஊட்டுகிறாள். தீபாவளிக்கு காலையில் குளித்து அனைவருக்கும் புது துணி கொடுத்து உடுத்த சொல்கிறாள். ஒரு தர்ம சங்கடமான இக்கட்டான நிலையில் தன் பிள்ளைகளுக்கு மட்டுமே உடுத்த துணி இருக்கிறது. அந்த பையனுக்கு துணியில்லையே என்று தாயம்மாளுக்கு வருத்தம். அந்த நிலையிலும் கூட அவனுக்கு உதவி செய்ய முடியவில்லையே என வருத்த படுகிறாள். என்ன செய்வதென்று தெரியவில்லை. அவள் குழந்தை மங்கம்மாள்தான் அந்த புதுத் துண்டினை அந்த பையனுக்கு கொடுக்காலாம் என்று பெருந்தன்மையாக சொல்கிறாள். அவளை கட்டியணைத்துக் கொள்கிறாள் அந்த தாயாம்மாள். எளிய குடும்ப மென்றாலும் அந்த சின்ன குழந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற மனதிருப்பதுதான் வாழ்க்கை அவர்களுக்கு கொடுத்த அறிவும் நம்பிக்கையும். குழந்தைகள் எவ்வளவு கருணை மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நல்ல செயல்களை உருவாக்க வேண்டும் என புத்தர் சொல்கிறார். நல்ல விருப்பம், நல்ல சிந்தனை, நல்ல செயல் என்று பௌத்ததில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. தீபாவளி அன்றைக்கு பக்கத்து வீட்டு நண்பர்களை பார்க்கச் செல்லும் தாயம்மாளின் குழந்தைகளை அந்த வீட்டு நண்பர்களே கிண்டல் செய்கிறார்கள். கிண்டலும் கேலியுமாக குழந்தைகளின் உலகை வெகு நுட்பமாக எழுதியுள்ளார் கு. அழகிரிசாமி. தங்கள் வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார் என்று பெருமையாக சொல்லும் தனது நண்பர்களிடம் தாயம்மாளின் குழந்தைகள் எங்கள் வீட்டுக்கும் ஒரு ராஜா வந்திருக்கிறார் என்று அந்த ஆதரவற்ற பையனை பற்றி சொல்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது. விருந்தாளி என்பது பெரிய பெரிய பணக்கார குடும்பங்களில் மட்டுமே வருவதில்லை. வறுமையில் எளிய மனிதர்கள் என்றாலும் தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுக்கும் மனது மனிதர்களுக்கு இருக்கிறது என்று கு. அழகிரி எடுத்துச் சொல்கிறார். உலகத்திலேயே மிகப் பெரிய விஷயம் கொடுக்கிற மனதுதான். தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதுதானே அன்பும் மனிதாபிமானமும். வறுமையிலும் கூட தாயம்மாளின் குழந்தைகள் எவ்வளவு பெரிய மனதோடு இருக்கிறார்கள்.
கையில் காசில்லையே வறுமையில் கஷ்டபடுகிறோமே என்பது அவமானம் இல்லை. உதவி செய்கிற மனதிருக்கிறதே என்று பெருமை படலாம். வறுமை பல கஷ்டத்தை கொடுத்தாலும் ஒழுக்கமான அறத்தோடு கூடிய வாழ்க்கையை மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மனிதர்களின் மீதும் வாழ்க்கை மீதும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது உண்மையான விஷயம். நாமும் வாழ்க்கையில் கஷ்டபட்டாலும் அறத்தோடு வாழ்கிறோம் என்பதுதான் நமக்குள்ள பெருமையும் சிறப்பும். நல்ல படைப்பை உருவாக்கி நல்ல சிந்தனையை அளித்த எழுத்தாளர் கு. அழகிரிசாமிக்கு அன்பும் வாழ்த்துக்களும்.

Comments
Post a Comment