அன்னா கரினீனா ஏன் தற்கொலை செய்துகொண்டாள்?
அன்னாவெனும் பெரும் நினைவு அன்னா கரினீனா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? இந்த கேள்வி டால்ஸ்டாய் எழுதிய இந்த நாவலை வாசிக்கும் போது கண்டிப்பாக எழும்? இதனால் டால்ஸ்டாய் மீது கோபம் கூட வருகிறது. அன்னா ஏன் தற்கொலை செய்து கொண்டாள்? திருமண ஆன பெண் தனது கணவரிடம் இருந்து காதல் அன்பு கிடைக்கவில்லை என்று திருமணத்திற்கு பிறகு தன்னை காதலிக்கும் இன்னொருவருவரை ஏற்றுக் கொண்டு வாழ்வது அவள் செய்ததது தவறா? உண்மையில் அன்னாவை கொன்றது கரீனினா அல்லது விரான்சிகியா? இல்லை அன்னாவே முட்டாள்தனமாக முடிவெடுத்துக் கொண்டுவிட்டாளா? இல்லை டால்ஸ்டாயின் தனிப்பட்ட நிலைப்பாடா அனைத்திற்கும் மேலாக இந்த சமூகமா யார் அவளை கொன்றார்கள்? சரி தவறு போன்ற நிர்ணயங்களை ஏற்படுத்தி மனித வாழ்க்கையை வரையறை செய்யும் அதிகாரம் மதத்திற்கு எவ்வாறு வழங்கப்பட்டது. யார் அந்த மதிப்பீடுகளை உருவாக்கியது. மனிதர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், சுய தேர்வுகளை கட்டுப்படுத்தும் மதம், அரசியல் சட்டங்கள் ஏன் உருவாக்கப் பட்டிருக்கின்றன. சமூகத்தில் ஒரு பெண் செய்தது சரியா? தவறா என்று நீங்கள் தீர்மானிக்காதீர்கள் அதை அவளிடமே விட்டு வி...