காந்தியும் காமராசரும்..!

மகாத்மா காந்தி பிறந்தநாள் காமராஜர் நினைவு நாள். தான் வாழ்நாள் முழுவதும் தான் வாழ்வை பரிசோதனை யாக மாற்றி சத்தியம் என்ற அகிம்சை மற்றும் உண்மையாக வாழ வேண்டும் என்று காந்தி போராடினார். பள்ளி நாளில் சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் காந்தி பற்றிய உரை கேட்டு கண்ணீர் வடித்தேன். மனம் முழுவதும் காந்தியின் வாழ்வும் சித்திரமும் தோன்றியபடி இருந்தது. அட்டன் பரோ இயக்கிய காந்தி திரைப்படம் பார்க்க பள்ளியிலிருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் பள்ளி மாணவர்கள் செய்த அலப்பறையால் அந்த படத்தை சரியாக பார்க்க முடியவில்லை. ஆனால் பின்னாளில் அதாவது கல்லூரி படிக்கும் போது மூன்றாம் ஆண்டு வகுப்பு இல்லாத நாளில் காந்தியின் சத்திய சோதனை முழுவதும் வாசித்தேன்.
 உண்மையில் மனதிற்குள் எதோ மாற்றம் வருவதை போலவும் நான் மென்மையாக மாறுவதையும் உணர முடிந்தது. காந்தியை பற்றிய எழுத்தாளர் எஸ் . ரா ஆற்றிய உரை சிறப்பானது. ஐம்பாதயிரம் பக்கங்கள் காந்தி எழுதியுள்ளார். எழுத்தாளராக கனவு கொண்டாவர்கள் அதை மறக்காமல் எழுதி வைத்துக்கொள்ளவேண்டும். என்று எஸ். ரா குறிப்பிட்டிருப்பார். 
காந்தி முழுவதும் சுற்றுபயணம் செய்தார். எளியமையை விரும்பினார். தமிழ்நாட்டில் விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் இருந்ததால் தானும் அதே தோற்றத்தில் வாழ்நாள் முழுவதும் இருந்தார். 
காந்தியை வெறும் மத வாதி என்று ஒதுக்கி தள்ளுவதும் அம்பேத்கருக்கு எதிராக அவரை நிலை நிறுத்துவதும் தவறான ஒன்று. இருவரும் வெவ்வேறு தளங்களில் சேவை செய்துள்ளனர். அகிம்சையும் சத்தியமும் காந்தியின் தத்துவங்கள். சத்திய நெறியில் இந்தியாவை அவர் அழைத்துச் சென்றார்.
காந்தியின் ஹிந்துஸ்வராஜ் முக்கியமான புத்தகம். சத்திய சோதனை நிச்சயம் நம்மை மாற்றக் கூடிய புத்தகம்.
 
காமராஜர் பற்றிய பேச்சாளர் நெல்லை சிவா அவர்களின் உரை அருமையான அனுபவமாக இருந்தது. காமராஜர் தான் பிச்சை எடுத்தாவது மக்களை கல்வி கற்க வைப்பேன் என்று சொன்னது இன்று வரை மறக்க முடியாத வொன்று. 
சாதி ரீதியாக தீண்டாமை யால் கல்வி சிலருக்கு கிடைக்காத சூழலில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடம் கட்டி கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

காமராஜர் படிக்காத மேதை என்று தவறாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் அவர் வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருந்தார். மார்ட்டின் லூதர் கிங் வரை அவர் படித்து குறிப்பு எடுத்து வைத்துள்ளார் என்று எஸ். ரா குறிப்பிட்டுள்ளார் . பள்ளிக்கூடம் போய் தான் அவர் படிக்க வில்லை. மற்றபடி அதற்கு வெளியே நிறைய புத்தகங்கள் வாசித்திருக்கிறார். ஆகையால் படிக்காமல் வாழ்வில் முன்னேற முடியாது காந்தியும் காமராசரும் நிறைய படித்துள்ளர்கள் படிப்பு மட்டுமே நம்மை தலை நிமிர்த்தும். என் வாழ்நாளில் காந்தியும் காமராசரும் மறக்க முடியாத தலைவர்கள். காந்தி மற்றும் காமராசர் பற்றி youtube இல் திரைப்படங்கள் இலவசமாக காண கிடைக்கின்றன. 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )