மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
பள்ளி வயதில் நாம் கடந்து வந்த பெண்களை இந்த சிறுகதை வழியாக திரும்பி பார்க்கிறோம். வகுப்பில் எல்லாரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலர் புரிந்து கொள்ள முடியாமல் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நடத்தயை புரிந்து கொள்வதை விட்டு விமர்சனம் செய்வதும் பரிகசிக்க படுவதும் தான் அதிகம் நடக்கிறது. அதுவும் கூட அனைத்திற்கும் முன் மாதிரியாக விளங்கும் பள்ளி ஆசிரியர்களே மாணவர்களை புரிந்து கொள்ளாமல் நல் வழி படுத்தாமல் அசிங்கமாக நடத்துவதும் வாயிக்கு வந்த படி திட்டுவதும் பொறுப்பற்ற செயல். நல்ல ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, ஒழுக்கத்தை போதிப்பதை விடவும் அடிப்படையில் அக்கறையோடு நடந்து கொள்வதை தான் இந்த கதை வலியுறுத்துகிறது. தலைமை ஆசிரியர் தமிழாசிரியர் ஒருவரிடம் அவர் வகுப்பில் மரி என்கிற பெண் ஒழுங்காக வகுப்பு வராமல் இருப்பதாக புகார் தெரிவிக்கிறார். மேலும் அவள் வகுப்பில் இல்லாமல் வெளியே மைதானத்தில் சுற்றவதும் அதை கண்டித்த ஆசிரியர்களிடம் திமிர் தனமாக பேசுவதாகவும் சொல்கிறாள். விரும்பிய படி ஆடை அணிந்து கொள்வதும், சுதந்திரமாக செயல் படுவதும் ஏன் ஒழுங்கீனமாக சித்தர...