பாலிதீன் மனிதர்கள்...
போனா போகட்டும் பிச்சை உசுருதானே திருந்த முடியாத தருதலதான் நாமே போனா போகட்டும் பிச்சை உசுருதானே திருந்த ஆசை உள்ள தருதலதான் நாமே மாஸ்டர் திரைப்படம் பார்த்ததிலிருந்து இந்த பாட்டு மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒரு மனிதன் திருந்துவதற்காக முயன்று முடியாமல் போவதுதான் எவ்வளவு பெரிய வலி. சில பேரை இந்த சமூகம் புறக்கணித்து பாலிதீன் பைகளை போல வெறுத்து ஒதுக்கி விடுகிறது. தவறே செய்யாமல் தண்டனை அனுபவித்து வரும் வலியை விட தெரியாமல் தவறு செய்து விட்டு ஒரு நாள் புரிந்து கொண்டு திருந்த முடியாமல் அல்லாடும் மனது அலைந்து கொண்டே இருக்கிறது. யாரோ ஒருவரை அன்பின் பொருட்டு எதிர்பார்த்து காத்திருக்கிறது. குற்றத்திற்கு மிக சிறந்த தண்டனை மனிதனை அவன் செய்த தவறை புரிந்து கொள்ளச் செய்வதுதான். தண்டனைக்கு மிகச் சிறந்த மருந்து திருந்திய மனிதனை நம்புவதில்தான் உள்ளது . சைக்கோ திரைப்படத்தில் தாகினி அங்குலிமாலிக் என்கிற கொலை காரனை மன்னிக்கிறாள். அவன் எத்தனையோ பேரை கொலை செய்த போதும் அவனை ஒரு தாயைப் போல, சகோதரியைப் போல மன்னித்து அன்பு காட்டுவதாக சொல்கிறாள். அங்குலிமாலிக்கை திருந்தவிடாமல் அவன் பள்ளி நிராகரி...