கடை பணம் - குறுங்கதை
கடை பணம்.....!
கடன் திருப்பிக் கொடுக்க வந்த கிஷோர் நின்று கொண்டே இருந்தான். கடை பையன் முதலியிடம் போய் கடன் திருப்பிக் கொடுக்க கிஷோர் வந்திருப்பதாக சொன்னான். முதலாளி உள்ளே இருந்து கொண்டே இல்லை என்று சொல்லச் சொன்னார். கிஷோர் திரும்பிப் போய்விட்டான். இப்படியே இரண்டு மாதங்கள் கிஷோர் அலைந்து கொண்டிருந்தான்.
கடைப் பையன் ஏன் இப்படி செய்து இத்தனை வருஷமா அவனை அலைய விடுகிறீர்கள் பாவம் என்று பரிதாபத்தோடு கேட்டான்.
அதற்கு முதலாளி அவன் என் மகன்தான் பெற்ற கடனை அடைக்க முடியும் என்று என்னோடு சண்டை யிட்டு போய் விட்டான். அதை செய்ய விடக் கூடாது என்று இப்படி செய்கிறேன். என்றார்.
ஏன் இதனால் என்ன கிடைத்து விடப் போகிறது.
பெற்ற கடனை திருப்பி அடைத்து விட்டால் பிள்ளைகள் பெற்றவர்களை மதிக்க மாட்டார்கள். பின்னர் பெற்றோர்கள் யாருமேற்று சாலையில் அலைய வேண்டி இருக்கும். அதை உலகிற்கு காட்டவே இப்படி செய்தேன் என்றார்.
அவன் ஒரு வேளை உள்ளே வந்து பார்த்து விட்டால் என்ன செய்ய என்றான் கடை பையன்.
அவன் வர மாட்டான் என்றார் தந்தையான முதலாளி.
எப்படி உறுதியாக சொல்கிறீர்கள்
அவனுக்கு தெரியும் நான் உள்ளே இருந்து கொண்டுதான் அவனை அலைய விடுகிறேன் என்று.
அப்புறம் ஏன் அவர் இப்படி வருவதும் போவதுமாக இருக்கிறார் என்றான் கடை பையன்.
என் மகன் கிஷோர்க்கு குழந்தை பிறந்து இருபது வருடங்கள் ஆகி விட்டன. அதனால் தான். என்னை புரிந்து கொண்டிருப்பான். நானாக மன்னிக்கும் வரை காத்திருக்கிறான்.
என்று சொல்லி விட்டு அப்பா கடைப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார்.
கடையில் வேலை பார்த்த பையன் இத்தனையும் கேட்டுவிட்டு தலையை சொரிந்து கொண்டான் அவனுக்கு அப்பா இல்லை என்பதால் இதை புரிந்து கொள்ள வாய்ப்பில்லை தான்.
G. கோபி
20-02-23, 9.23pm.
Comments
Post a Comment