கார்ல் மார்க்ஸ் காதல்....!
ரொமானிய நாட்டில் கிளாடியஸ் எனும் மன்னன் திருமண தடை சட்டத்தை அறிவிக்கிறான். அதை மீறி காதலிப்பவர்கள், திருமணம் செய்பவர்கள் தண்டிக்கப் படுகிறார்கள். அதை கண்டு பயப்படாத கவிஞர் valentine மன்னனுக்கு எதிராக போராடி ரகசியமாக நிறைய திருமணங்கள் செய்து வைக்கிறார். ஆனாலும் மன்னன் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கபடுகிறது. மேலும் சிறைகாவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுவிற்கும் அவருக்கும் காதல் ஏற்படுகிறது. உடனே அவளுக்கு முதல் காதல் கடிதம் அதாவது greetings கார்டு அனுப்பி வைக்கிறார் . இதை அறிந்த அரசன் அவரை கல்லால் அடித்து தலையை துண்டித்து கொடுரமாக கொலை செய்து விடுகிறான் . நாம் கொண்டாடி வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தின் வரலாறு இதுதான். முதன் முதலில் காதலை காதல் வாழ்த்து அட்டை மூலம் தெரிவித்த valentine ஒரு புனிதர் மற்றும் சமூக போராளியாகவே வாழ்ந்திருக்கிறார்.. காதலுக்காக கொலை செய்யப்பட்ட மனிதரும் அவரே. காதல் ஒரு தைரியம். சாதி, மதம், அதிகார வர்க்கம், ஏன் இயற்கை கடவுளே தடுக்க நினைத்தாலும் எதிர்த்து காதலுக்காக வாழ்ந்து தோற்று போனவர்கள் தான் உலகில் அதிகம் பேர...