Cock of the rock

1. Cock of the rock from South africa



Photography : Marcelo Luiz Quirino ( Brazil ).
Feb 5,2024.

இன்ஸ்டாவில் Wildlife _by_marcelo என்ற பக்கத்தில் தொடர்ந்து பறவைகளின் படம் வெளியிடப்பட்டு வருகிறது. ஆரஞ்சு நிற பறவை. கூச்ச சுபாவம் உடைய பறவை. உயரத்தில் மட்டுமே வாழக் கூடியது. எப்போதும் தனிமையாக இருக்கும். இந்த பறவை இனத்தில் ஆண் பறவை மட்டும் அழகாக இருக்குமாம். பெரு நாட்டின் தேசிய பறவையாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உடல் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் தலையில் பஞ்சு போன்ற வட்ட கொண்டை இருக்கிறது.இது வரை மைனா, குருவி, மயில், காகம், சேவல், கழுகு போன்ற பறவைகளையே அதிகம் பார்த்திருக்கிறேன். சில குறிப்பிட்ட பருவ காலங்களில் வெளியூரிலிருந்து வந்து போகும் நீண்ட அலகுடைய பறவைகளை பார்த்து ஆச்சரியபட்டிருக்கிறேன். சென்னையில் நீண்ட இடிபாடுகளுக்கிடையே புறாக்கள் வாழ்வதை பார்த்திருக்கிறேன். அது போல வழக்கம் போல இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்தேன் . 
அன்றாடம் வாழ்வியலின் கொடும் பிடியில் இருந்து விடுபட பறவைகளை நேசிப்பத்தையும் அதனோடு நெருக்கமாவதைத் தவிர வேறு வழியில்லை. பறவைகளை பார்த்தல் என்பது வியத்தலின் அற்புத தருணம். அனைத்து பறவைகளும் ஏன் பெண்மையின் சுபாவத்தையே கொண்டுள்ளன. பறவைகள் எப்படி தனிமையும் வெறுமையும் நிறைந்த வாழ்வை எதிர்கொண்டு வாழ்கின்றன? என்று ஆச்சர்யமாக இருக்கும். 
வறண்ட வாழ்வின் அடர்த்தியிலிருந்து மனதிற்குள் குளுமையை ஏற்படுத்தும் நல்ல உயிரினம் பறவை. பறவைகளை நேசியுங்கள்! அது கடவுளை அருகாமையை உணரும் தருணம்.

இன்ஸ்டாகிரம் ஐடி :

Wildlife_by_marcelo  ( Search )

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )