பச்சை மனிதன்....!
நிறங்களுக்கும் மனித மனதிற்கும் எதோ தொடர்பு இருக்கிறது. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு உணர்வை பிரதிபலிக்கிறது. கண்ணை முடி யோசித்து பார்த்தால் எதோ ஒரு நிறத்தோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் பார்வை இல்லாத ஒருவனுக்கு எப்படி நிறங்களை கண்டு கொள்ள முடியும். இந்த சிறுகதையில் வருகிற பார்வை இல்லாத ஒருவன் பார்வை போன போது மனதில் பதிவாகியுள்ள பச்சை நிறத்தை தவிர அவனுக்கு நினைவில் எதுவுமில்லை. தனது வாழ்வின் ஓரே அர்த்தமாக பச்சை நிறமே இருப்பதாக நினைக்கிறான். நிறங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் இருக்கிறதா என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. ஆனால் உண்மையில் நிறங்கள் நம் அந்தரங்க உணர்வோடு தொடர்பு உள்ளவை. வெண்மை நிறத்தை பார்த்தாலே மனம் பரிசுத்தமான அனைத்தையும் கடந்த அமைதியான நிலைக்கு போய்விடுகிறது. கருப்பு நிறம் மறுப்பின் அடையாளமாக இருக்கிறது. காவி நிறம் துறவின் அர்த்தத்தை கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு நிறத்தோடும் மனிதன் தன் வாழ்வை பிணைத்து வைத்திருக்கிறான். மழை தூரலின் போது வானவில் தோன்றும் நாட்களில் மனதிற்கு குதூகலமாகயிருக்கிறது. இந்த கதையில் வெயிலில் பாறையின் ...