நகுலன் தந்த வாக்குமூலம்
வாழ்க்கை என்பது என்ன? என்ற கேள்வி அனைவருக்கும் இயல்பாக தோன்றக் கூடியதுதான். வாழ்வைப் பற்றி பல விவாதங்கள், கருத்துக்கள், சரி தவறுகள், நியாய அநியாயங்கள் என்று நாம் பேசாத நாளேயில்லை. ஆனால் நமக்கான வாழ்வில் நமக்கென்று ஒரு உலகம் இருக்கிறது என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோமோ என்று யோசிக்க வேண்டும். காலை எழுவது, சாப்பிடுவது, எதையாவது செய்து இரவு வரை வாழ்வது மீண்டும் நமது பழக்கப்பட்ட சொந்த வாழ்க்கைக்கு திரும்புவது உறங்குவது. உறக்கத்தில் நாம் மனதில் உள்ள ஆசைகள், நினைவுகள், ஏக்கங்கள், பயம் அனைத்து வெளிப்படுவது. இதுதான் மாறி மாறி நடக்கிறது. இதைத்தாண்டி உடல் மனம் அறிவு கடந்து நாம் சிந்தித்து இருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. செல்போன், வாட்ஸாப்ப், இன்ஸ்டாகிராம், முக நூல், யூடுப்பில் வீடியோஸ் பார்ப்பது இன்னும் என்றாவது ஒரு நாள் சினிமா தியேட்டர் போய் பெரிய திரையில் நண்பர்களோடு திரைப்படம் பார்ப்பது இந்த கொண்டாட்டங்கள் தாண்டி வேறென்ன சந்தோசங்கள் வாழ்வில் இருக்கிறது? எதாவது ஒரு நாளில் நம்மைப் பற்றி சிந்திக்கும் போதோ அல்லது நினைத்துப் பார்க்கும் போதோ நாம் கடந்...