பிரியாத காதலின் ஒரு பகுதி...!

லவ்வர் திரைப்படம் பார்த்து மூன்று வாரங்கள் ஆகியும் இன்னும் அந்த படம் மனதை விட்டு அகல மறுக்கிறது. இது வரை வந்த படங்களில் ஹீரோ ஹீரோயின் போன்ற எதுவும் இல்லாமல் மிக யதார்த்தமாக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையில் சில புத்தகங்களை திரும்ப படிக்கவே முடியாது . பிடிக்காது என்ற அர்த்தமில்லை. நம்மால் முடியாது என்ற காரணம்தான். உண்மையான காரணம் என்ன வென்றால் காலம் நம்மை மாற்றிவிட்டது. இல்லையேல் நாம் கடந்து வந்து விட்டோம். 

ஒரு காலத்தில் யாரை அதிகம் விரும்பினோமோ யாரை பிரியவே கூடாதென்று நினைத்தோமோ அவர்களைத்தான் இன்றைக்கு யாரோ ஒருவரைப் போல் பார்த்துவிட்டு எளிதாக கடந்து போய்விடுகிறோம். அந்த நாட்கள் திரும்ப வரப் போவதில்லை. அப்படியே வந்தாலும் நம்மில் எத்தனை பேர் திரும்ப அந்த வாழ்க்கைக்கு போக தயாராக இருக்கிறோம்? போக முடியாது. ஆனால் அதை மறந்து விடவும் முடியாது என்பதுதான் வாழ்வின் புரியாத புதிர். 
பெரும் பிரிவிற்கு பின்பு நாம் கனத்த மௌனத்திற்குள் போய்விடுகிறோம். வார்த்தைகள் அற்று அமைதியாகி விடுகிறோம். 

இதுதான் 'லவ்' என்னைப் பொறுத்தவரை இதுதான் ' லவ் ' என்று நமக்குள் தெரிந்து வைத்துக்கொண்டு அந்த ஈகோவை நாம் வளர்க்கிறோம். சின்ன சண்டையோ கருத்து வேறுபாடோ சந்தேகேமோ வந்து விட்டால் சீட்டு கட்டு சரிவதை போல உடைந்து நம் ' லவ் ' பொய்யாகி விட்டதே அல்லது இத்தனை நாள் லவ் பண்ணியும் என்னை புரிஞ்சுக்கிவே இல்லையே என்று ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சுமத்துகிறோம். 
நாம் செய்கிற தவறெல்லாம் ஒரே வட்டத்திற்குள் சுற்றும் எறும்பு போல ஒரே அதீத காதலை சுற்றிக் கொண்டே வருவது தான். இன்னோன்று உண்மையான காதலை புரிந்து கொள்ள யோசிப்பதில்லை. நமக்குள் ஒரு அர்த்தத்தை கற்பனை செய்து கொண்டு அதுக்கு உருவம் கொடுத்து அதேயே நம்புவது பின்பு ஏமாந்து போய்விடுவது. 

எழுத்தாளர் எஸ். ரா ஒரு உரையின் போது நம் காலத்தில் பிரிவின் வலியை இன்னும் நம் உணரவேயில்லை. அதான் செல்போன் இருக்கிறதே வாட்ஸாப்ப் இருக்கிறது எப்போது வேண்டுமானாலும் பேசுகிலாம் என்று சாதாரணமாக இருக்கிறோம். பிரிவு தான் உறவை வளர்கிறது. இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளி ஒருவரையோருவர் பற்றி யோசிக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. அதற்காக பிரிவை வேண்டுமென்றே சண்டை போட்டு உருவாக்க வேண்டாம். இயல்பாக அதுவே நடக்கும் போது நம் இடைவெளி எடுத்து நமது லவ்வரை குறித்து புரிந்து கொள்ள முயல வேண்டும் என்று கூறியிருப்பார். 

ஆறு வருஷ லவ் ப்ரோ எப்படி ப்ரோ விட முடியும் என்று படத்தில் அருண் ஆதங்கத்தோடு கேட்கும் போது நமக்கே மனதில் வலி எடுக்க ஆரம்பிக்கிறது. உண்மையில் நிஜ வாழ்வை விட 
படத்தில் யாரும் பிரியவே கூடாது என்று நினைக்கிறோம். வருந்துகிறோம். 

போதைக்கு அடிமையாவது, இடைவிடாமல் மெஷின் மாதிரி எந்த நேரமும் போன் பேசுவது மெசேஜ் செய்வது வீடியோ கால் செய்து பேசுவதுதான் அளவுக்கு அதிகமான பாசம் ஏமாற்றமாக போய்விடுகிறது. காதலை கட்டுப்படுத்த நம் கைக்குள் அடக்கிக் கொள்ள முயல்கிறோம் ஆனால் உண்மையில் யாரையும் கைக்குள் வைக்க முடியாது ஆளுகை செய்வது வெறுப்பில் போய் முடியும். 

மேலும் தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் வாழ்வில் எப்படியெல்லாம் உளவியல் சிக்கலுக்கு உள்ளாகிறான் என்று படம் முக்கியமாக சொல்கிறது. 
உனக்கு control இல்ல அருண் நீ extreeme அ போய்டுற என்று திவ்யா அருணைப் பார்த்து பேசும் போது தான் அவன் அப்பா மாதிரியே அவனையும் தொடர்பு படுத்தி சொல்வது தான் அவனுக்கு புரிய ஆரம்பிக்கிறது. 

ஆனால் இன்னும் நடுத்தர அல்லது அதற்கு மேல் உள்ள வாழ்க்கை சூழலில் உள்ள மனிதர்களின் ஆண் -பெண் உறவுகள் காதல் பற்றி பேசும் திரைப்படங்கள் பொருளாதார வசதி இல்லாத வறுமையில் சமூகத்தால் புறக்கணிக்கப் பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் காதலை ஏன் பற்றி அதிகம் பேச வில்லை என்ற கேள்வி எழுகிறது? 

வசதி இல்லாத பைக் இல்லாத உயரமில்லாத பேர் அழகாக இல்லாத, திறமை இல்லாத தோற்றுப் போன மனிதர்கள் காதலிக்கவே கூடாதா? அவர்களை யெல்லாம் பெண்கள் காதலிக்க மாட்டார்களா? ஏன் இன்னும் எத்தனையோ 90ஸ் கிட்ஸ் சிங்கிளாக கல்யாணம் ஆகாமல் கஸ்டபடுகிறார்கள்? அதே போல மிடில் கிளாஸ் வாழ்க்கையில் உள்ள ஆண் - பெண் உறவுகள் கூட அதிகம் ஏன் விவாகரத்தில் போய் முடிகிறது என்று பல கேள்விகளை பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்னொரு புறம் ஆணவ படுகொலைககள் சாதிய காரணங்களால் காதலர்கள் கொல்லப் படுவதும் நடந்தேருகிறது. 

சமூகத்தில் காதல் என்றுமே புரட்சி செய்கிறது. ஆனால் அந்த காதலின் அர்த்தத்தை புரிதலை நம் புரிந்து கொள்ள ஏன் முயற்சி செய்ய வில்லை. காதலில் தியாக உணர்வு பரிவுணர்வு எல்லாம் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற பயம் வருகிறது. 

சினிமா பார்த்துவிட்டு இப்படியெல்லாம் லவ் பண்ண வேண்டும்? ஒன்றாக சுற்ற வேண்டும் வாழ வேண்டும் என்ற ஆசை
எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதில் உள்ள உல்லாசத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். அந்த வலி தந்த உண்மையை புரிந்து கொள்வதில்லை. லவ் பண்ணனும் சினிமால வருகிற மாறி வாழனும் அப்படினு ரகசியமாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் ஆசை படுவது தவறில்லை ஆனால் உண்மையான லவ் என்றால் என்ன என்ற தேடல் ஆர்வம் இருக்க வேண்டும். 

லவ்வர் படம் உண்மையான ஒரு அடல்ட் adult லவ்வைப் பற்றி அழகாக எடுத்து சொல்கிறது. இன்றைக்கு பெரம்பாலான லவ்வர்ஸின் நிலைமை இதுதான். இந்த படம் லவ் நாம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம்? நம் லவ்வர்ஸ் பற்றி எப்படி புரிந்தது வைத்துள்ளோம்? அளவுக்கதிகமாக போதைக்கு அடிமையாகி லவ் பண்ணுவதால் என்ன ஆகும்?. நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எப்படி காதல் காரணமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறோம். காதல் வலி வாழ்க்கையை புரிந்து கொள்ள வைக்கும். இது உண்மை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு ஒரு தடவையாவது இந்த படம் பாருங்கள். மிக முக்கியமான படம். அருண் அம்மா - அப்பா வாழ்வில் கூட இதே பிரச்சனை இருப்பதை இயக்குனர் படத்தில் சொல்லியிருப்பார். ஆனால் படத்தின் இறுதியில் இருவரும் அருண் புதிதாக தொடங்கி உள்ள ரெஸ்ட்டாரண்டில் சந்தித்துக் கொள்கிறார்கள். அருண் அவளுக்கு பிடித்த ஸ்வீட்ஸ் செய்து கொடுக்கிறான். அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நம் ஈகோவை விட்டுவிட்டால் கண்டிப்பாக யாராலும் நம்மை பிரிக்கவே முடியாது. கண்டிப்பாக அவர்கள் ஒன்று சேர்வார்கள். நல்ல புரிதல் ஒற்றுமையோடு நம் வாழ்வை வளப்படுத்தும். 

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )