செகண்ட் ஷோ நினைவுகள்

சினிமா பற்றி எழுத்தாளர் எஸ். ரா ஆற்றி வரும் உரை தனி சிறப்பானது. Bycycle theif, Psycho, cinema paradiso போன்ற திரைப்படங்கள் பற்றி அவர் பேசிய விதம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. அதுவும் cinema paradiso மனதின் பல நினைவுகளை கிளறி விடுகிறது. என்றோ பிரிந்து போன நண்பனை பார்த்த சந்தோஷமும் துக்கமும் ஏற்படுகிறது. எனக்கு சொந்த ஊர் கழுகுமலை. அங்கே ஒரு டூரிங் டாக்கிஸ் இன்றும் அப்படியே இடிந்து போன தியேட்டராக அதே நினைவுகளை சுமந்தபடி உள்ளது. நண்பர்களோடு திரைப்படம் பார்த்த நாட்களை அப்பாவோடு செகண்ட் ஷோ பார்த்த நினைவுகளை மறக்க முடியாது. நல்ல அனுபவத்தை தந்த உங்களுக்கு மறக்க முடியாத அன்பும் நன்றிகளும்!


சினிமா என்றாலே படத்தை விட தியேட்டர்தான் எல்லோருக்கும் முதலில் நினைவு வரும். அதில் நடித்த நடிகர்கள், பாடல், சண்டை க் காட்சி என்று ஒரு படத்தை பார்த்துவிட்டு ஆண்டுகணக்கில் பேசிக் கொண்டே இருப்பவர்கள் தான் அதிகம். அதைவிட நம் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் எந்த தியேட்டரில் படம் பார்த்தோம் என்பது தான். 
பழைய 90's கால தியேட்டர்கள் மிக அழகானவையாக யிருந்தன. மர பெஞ்ச், தரை டிக்கெட், மண்ணை அள்ளி கூட்டி அதில் உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பது. தரை டிக்கெட் டில் படுத்துக்கொண்டே படம் பார்த்திருக்கிறேன். நண்பர்களோடு கடைசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு யாருக்கு தெரியாமல் திருட்டு த் தனமாக சிகரெட் பிடித்த வாறே படம் பார்ப்பது, இடைவேளையின் போது அங்கு விற்கும் தின் பண்டங்கள் இன்னும் மறக்கவே முடியாது. 3ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கும் முட்டை பப்ஸ், முறுக்கு, சின்ன சின்ன பாக்க்கெட் டில் பச்சை பட்டாணி, சுண்டல், போண்டா, டீ, மாஸா, sprite, seven up, லெமன் சோடா, என வித வித மான கூல் ட்ரிங்க்ஸ் மறக்கவே முடியாத கோன் ஐஸ் மற்றும் குல்பி ஐஸ். ஆனால் தியேட்டர் உள்ளே உள்ள கடையில் மட்டும் சிகரெட் அதிகம் விலைக்கு விற்பார்கள். அதை பற்ற வைக்க மணல் கயிறு ஒன்று தொங்க விட பட்டிருக்கும். 
சினிமா தியேட்டரின் பெரிய ஸ்கிரீன் ப பின்னாடி என்ன இருக்கும் என்று எட்டி பார்க்க போய் தியேட்டரில் வேலை பார்ப்பவர்கள் திட்டி விரட்டிய வேடிக்கை கதைகளும் உண்டு. 

எல்லாத்தையும் விட ஆபரேட்டர் ரும் தான். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை ஆபரேட்டர் ரூம் போய் பார்த்திருக்கிறேன். 
அதிகம் சூடு பரப்பும் ஒரு மிஷின். அதில் பழைய பிலிம் ரோல்கள். பார்க்க வியப்பாகயிருக்கும். 
அங்கு வேலை செய்யும் ஆபரேட்டார்கள். அவர்கள் வாஞ்சை யோடு பழகும் விதம். மறக்கவே முடியாத பல நினைவுகளை தியேட்டர் சுமந்தபடி யுள்ளது. 
எம்டன் மகன் படத்தில் போது உள்ளே நிற்பதற்கு இடம் இல்லாமல் தியேட்டர் வெளியே நின்று கொண்டு படம் பார்த்தவர்கள் அதிகம். இப்படி ஆசை ஆசையாய் படம் பார்த்த தியேட்டரை யாராலும் மறக்கவே முடியாது. 

தியேட்டர் போய் படம் எல்லோருக்கும் எப்படியாவது ஆபரேட்டர் ரூம் போய் பார்த்து விட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அந்த பழைய பிலிம் தொடுவதற்கும் பார்ப்பதற்குமே ரம்மியமாக இருக்கும். அதை வாயில் போட்டு மென்று தின்று சேட்டை செய்து வீட்டில் அடி வாங்கியிருக்கிறேன். 
திரைப்படத்தில் அலஃபிரோடோ என்ற சினிமா ஆபரேட்டர் மற்றும் டூடடோ என்ற சிறுவனுக்குமான அழகான நட்பை பற்றிய கதை. 
எப்படி அந்த காலத்தில் சினிமா என்றாலே எப்படி நேசித்திருக்கிறார்கள் என்று வியப்பாகஉள்ளது. 

அதில் வேறெந்த வசதியும் இல்லாமல் இருக்கும் உழைக்கும் மக்களுக்கான ஒரே பொழுது போக்காக சினிமா மட்டுமே உள்ளது. வேலைக்கு போய் விட்டு செகண்ட் ஷோ படம் பார்த்து விட்டு வந்தால்தான் சிலருக்கு நிம்மதியாக தூக்கம் வரும். ஏன் மனிதர்களுக்கு சினிமா மீது இப்படி ஒரு தீராத காதல். உண்மையில் சினிமா வில் நடிக்க வேண்டும், இயக்குனராக வர வேண்டும் என்று ஆசை பட்டு அது நடக்காமல் ஏமாந்து போனவர்கள் அதிகம். அவர்கள் தியேட்டரை சுற்றி சுற்றி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. 
தியேட்டர் என்பது இன்னொரு உலகம். உள்ளே போய் அமர்ந்ததும். அனைத்தையும் வலிகளையும் பிரச்சனைகளும் மறந்து போய் விடுகிறது. நாம் சொந்த வாழ்க்கை மறந்து போய் சினிமா கதைக்குள் நுழைந்து விடுகிறோம். கடலில் பயணம் செய்வது போல இது நம்மை தொலைக்கும் பயணம். 

இந்த cinema paradiso திரைப்படம் கூட சினிமா தியேட்டர் மற்றும் அங்கு வாழ்ந்த மனிதர்களின் கதையைத்தான் சொல்கிறது. 
தியேட்ட ரை அந்த பகுதி மக்கள் எப்படியெல்லாம் நேசித்தார்கள் என்று அழகாக உருவாக்கப் பட்டுள்ளது. ஏன் சினிமா வாழ்க்கையில் தேவை? அப்படி பெரிய திரையில் படம் பார்ப்பதால் என்ன கிடைத்து விடும்? என்று அதை வெறுப்பவர்களும் உண்டு. ஒரு கதையை புத்தகமாக படிப்பதற்கும் அதை காட்சிகளாக பெரிய திரையில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. சாதி, மதம் அனைத்து பாகுபாடுகளையும் கடந்து அனைவரையும் ஒன்று சேர்த்து விடுகிறது சினிமா. எல்லாத்தையும் தாண்டி சமூகத்தால் புறக்கணிக்கப் பட்ட மனிதர்கள் கதை கண்ணீரோடு இப்போது உலகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. நாம் மறந்து கடந்து போன எத்தனையோ கதைகளை சினிமா நினைவுபடுத்துகிறது. மேலும் குறிப்பாக அரசியல் ரீதியாக மக்களின் விடுதலை அரசியல், தத்துவம், சமூக பிரச்சனை களை பேசி அதை விவாத பொருளாக்கி தீர்வு காண்பது வரை மனித வாழ்வில் சினிமாவிற்கு பெரிய இடம் உண்டு. 

அறிவியல் தொழில் நுட்பத்தில் சினிமா அடைந்த சாதனை அளப்பறியது. 3D, IMAX, AI மற்றும் face re creation அதாவது வயதான வர்களை இளமையாக அப்படியே திரையில் காட்டுவது என்று சினிமா பல சாதனைகளை செய்து விட்டது. 

ஆனால் அதே சமயம் சினிமா நடிகர்களை வழிபடும் அவல போக்கும், சமூக பிரச்சனைகளை பேசாமல் நடிகர்கள் தற்பெருமை என்று மட்டுமே பேசும் அறியாமையும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளது. அதே சமயம் சினிமாவை விளம்பரமாக அரசியல் ஆதாயம் தேடும் பிரச்சாரkக் கூடமாக மாற்றுவதும் அதை கட்டுப்படுத்தும் பாசிச போக்கும் பிற்போக்குத்தனமான ஒன்று. கருத்து சுதந்திரத்தை முடக்கும் செயல். 
இந்த படம் சினிமாவின் அவசியத்தையும் அந்த கலையின் மீதான மனிதர்களின் காதலையும் எடுத்து காட்டுகிறது. Alfredo மட்டும் dudu வின் இடையே உள்ள உறவு அப்பா மகன் உறவு போலவே உள்ளது. இந்த படத்தில் வரும் alfredo மறக்க முடியாத மனிதர். ஒரு காட்சி சொல்லலாம். படம் ஆரம்பித்த உடன் சீட் கிடைக்காமல் வெளியே பார்வையாளர்கள் சண்டை போட்டு கூச்சல் போடுகிறார்கள். படம் பார்க்க முடியாத ஏமாற்றத்தில் கதவை தட்டுகிறார்கள். உடனே ஆபரேட்டர் alfredo படம் காட்டும் லென்சை திருப்பி வெளியே உள்ள கட்டிட சுவர்களில் அந்த காட்சி தெரியும்படி செய்கிறார். அந்த மனிதர்கள் அதை பார்த்து கொண்டாடுகிறார்கள். கிராமங்களில் வெள்ளை திரைப் போட்டு திருவிழாக்களில் படம் பார்த்த நினைவு வருகிறது. 
நல்ல திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. இந்த படம் youtube இல் பார்க்க கிடைக்கிறது. திரைப்படம் குறித்த எழுத்தாளர் எஸ். ரா வின் உரை மிக அற்புதமாகயிருந்தது. என்றென்றும் எஸ். ராவிற்கு அன்பும் நன்றியும்.

S. Ra  speech : https://youtu.be/aUi_DbxBX84?si=Hx7bK8IHriRacB3A

Movie watch : 
https://youtu.be/MnFGpJfSQFA?si=yFCyL07DoHT4FUcp

Comments

Popular posts from this blog

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )