Posts

Showing posts from March, 2024

யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

Image
மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்கும் என முடிவு செய்யப்பட்டு விட்டது. யாருக்கு ஒட்டு போடுவது? எந்த கட்சி சிறந்த கட்சி? என்ற அனைவருக்கும் சந்தேகங்கள் கேள்விகள் எழும். சிலர் இந்த கட்சிக்குத்தான் ஒட்டு போடவேண்டும் என முடிவு செய்திருப்பார்கள். தேர்தல் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் நிச்சயம் தேர்தலை புறக்கணிப்பார்கள். மேலும் அலட்சியமாக எண்ணி வாக்கு செலுத்த மறந்து விடாதீர்கள். நாம் செலுத்தும் ஒரு ஓட்டு இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறது. யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று யாரையும் வற்புறுத்த விரும்ப வில்லை. ஏனென்றால் அது அனைவரது ஜனநாயக உரிமை. மனித வாழ்வின் அடிப்படை தேவைகள் கல்வி பொருளாதாரம், மருத்துவம், நமது கலாச்சாரம், மொழி,கலை மற்றும் பண்பாடு போன்றவற்றை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அரசியல் வரலாறு கண்டிப்பாக படிக்க வேண்டும். வலிமை மிக்க இந்தியாவை உருவாக்க இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக குறிப்பாக அறிவியல் மேதை அப்துல் காலம் அவர்கள் கனவு கண்டது போல வல்லரசு நாடாக வேண்டும் என்று நாமும் கனவு கண்டு தேர்தலில் கடமையை நிறைவேற்றுங்கள். ...

பணம் தின்னும் ஓநாய்.. ✍️

Image
Movie : The Wolf of Wallstreet - Martin Scorses மனிதனின் பேராசை அவனை எப்படியெல்லாம் நடந்துகொள்ள வைக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். ஆசை மனிதனை இயக்குகிறது. எதிர்பார்ப்புகளையும் தேவையையும் அதிகரிக்கிறது. அதன் விளைவாக மனிதன் வெறிபிடித்த மிருகத்தன்மை அடைகிறான். இதன் மூலம் மனிதனை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஆசை கொண்ட மனிதன், பசியால் வாடும் மனிதன் என்று. பசி மனிதனின் மனிதத் தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது? உணவு கிடைக்காத பசியால் வாடும் மனிதன் எப்படியெல்லாம் பாதிக்கப் படுகிறான் பசியின் பொருட்டு என்னென்ன குற்றங்கள் செய்கிறான் என்று தெரியும். குற்றமே தண்டனை நாவலில் ராஸ்குல்நிக்கோவ் பசியால் வாடும் மனிதன். ஆனால் அவன் குற்றவாளியோ பேராசை பிடித்தவனோ இல்லை. மார்ட்டின் கோர்ஸ்ஸ் இயக்கிய the wolf of wall street திரைப்படம் ஆசை கொண்ட மனிதனை பற்றிய படம். இதில் ஜோர்டன் பணத்தாசை பிடித்தவன். மனிதனின் தேவைகள் வெறும் போதையும் பெண்களின் உடற்சுகமும் மட்டுமே என்று வாழும் மனிதனின் கதை. திரைப்படம் முழுக்க அன்றாடம் அவன் சந்திக்கும் பெண்களோடு எல்லாம் உடலுறவு கொள்வது போதை பொருள் உட்கொள்வது என்று த...

புல்லட் பாபு ரசிகர் மன்றம்

Image
புல்லட் பாபு காட்சிவரும் போது  விவின் ரிச்சர்ட்ஸ் மைதானத்திற்குள் வரும் போது ஏற்படும் காட்சியைப் போல பிரமிப்பாக இருந்தது. புல்லட் பாபு வித்தியாசமான மனிதராக இருந்தார். இந்திய அணியில் நிறைய அரசியல் உள்ளதாகவும் ஆதலால் தான் வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக விளையாட போவதாகவும் ஒரு காட்சியில் சொல்வார். இன்னோன்று நடுவர் அவுட் கொடுக்காத போதும் தானாக அவுட் என்று ஏற்றுக் கொண்டு நேர்மையாக வெளியே செல்லும் அவரின் குணம் சச்சினை நினைவு படுத்தியது. திறமைஇருந்தும் சாதி, மதம் மற்றும் மொழி பொருளாதார நிலை காரணமாக வாய்ப்பு மறுக்கப் படும் இளைஞர்களின் குரலாக அவர் இருக்கிறார். ஒட்டு மொத்த ப்ளூ ஸ்டார் திரைப்படமும் நமக்கு சொல்வது வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் திறமையான இளைஞர்களின் கதை. அதே சமயம் ஒரே அணிக்குள்ளும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளது, ஒவ்வொரு துறைக்குள்ளும் அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்கும் அநியாயமான போக்கு உள்ளது சக மனிதன் இன்னொரு மனிதனை சமமாக நடத்துவது முக்கியமானது என்று ப்ளூ ஸ்டார் படம் விளக்குகிறது. திரைக்கதை வசனம் நடிப்பு எல்லாமே சிறப்பாக இருந்தது. அரசியல், உரிமைக்கான போராட்டம், சமத்துவ...