புல்லட் பாபு ரசிகர் மன்றம்
புல்லட் பாபு காட்சிவரும் போது விவின் ரிச்சர்ட்ஸ் மைதானத்திற்குள் வரும் போது ஏற்படும் காட்சியைப் போல பிரமிப்பாக இருந்தது. புல்லட் பாபு வித்தியாசமான மனிதராக இருந்தார். இந்திய அணியில் நிறைய அரசியல் உள்ளதாகவும் ஆதலால் தான் வெஸ்ட் இண்டிஸ் அணிக்காக விளையாட போவதாகவும் ஒரு காட்சியில் சொல்வார். இன்னோன்று நடுவர் அவுட் கொடுக்காத போதும் தானாக அவுட் என்று ஏற்றுக் கொண்டு நேர்மையாக வெளியே செல்லும் அவரின் குணம் சச்சினை நினைவு படுத்தியது. திறமைஇருந்தும் சாதி, மதம் மற்றும் மொழி பொருளாதார நிலை காரணமாக வாய்ப்பு மறுக்கப் படும் இளைஞர்களின் குரலாக அவர் இருக்கிறார்.
ஒட்டு மொத்த ப்ளூ ஸ்டார் திரைப்படமும் நமக்கு சொல்வது வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒடுக்கப்படும் திறமையான இளைஞர்களின் கதை.
அதே சமயம் ஒரே அணிக்குள்ளும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளது, ஒவ்வொரு துறைக்குள்ளும் அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்கும் அநியாயமான போக்கு உள்ளது சக மனிதன் இன்னொரு மனிதனை சமமாக நடத்துவது முக்கியமானது என்று ப்ளூ ஸ்டார் படம் விளக்குகிறது.
திரைக்கதை வசனம் நடிப்பு எல்லாமே சிறப்பாக இருந்தது.
அரசியல், உரிமைக்கான போராட்டம், சமத்துவம், சாதி ஒழிப்பு போன்ற அம்பேத்கரின் சிந்தனையை படம் முழுவதும் ஒளிர செய்துள்ளார் எஸ். ஜெயக்குமார். ரஞ்சித் திரைக்கதை போலவேஇருந்தது. மேலும் இதில் ரஞ்சித், புல்லட் பாபு, சாம், பூவையார் மூர்த்தி, இம்மானுவேல் அண்ணன் போன்ற கதாபாத்திரங்கள் வலுவாக பங்காற்றியுள்ளார்கள்.
வானத்திற்க்கடியில் பூமியில் பறவைகள், பூச்சிகள், மரங்கள் ஏன் மனிதர்கள் அனைவரும் சமம்தான். அனைத்தும் உயிர்தான் என்ற இறுதி காட்சியின் வசனம் போலவே வாழ்க்கை அனைவருக்கும் சொல்வது திறமைதான் மனிதனை மேம்படுத்தகிறது. ஆனால் அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் சமம் தான்.
விளையாட்டு எனும் ஒரு ஆயுதம் ஏற்றத்தாழ்வுகளை களைந்து அனைத்து மனிதர்களையும் ஒன்று சேர்க்கிறது. சாதி, தீண்டாமை ஆணவப் போக்குகள் அந்த ஆயுதம் வெட்டி வீழ்த்திவிடுகிறது என்பது நிஜம்.
ஒளியமைப்பு, திரைக்கதை, நடிப்பு கலை நுட்பம் கிரிக்கெட் பற்றிய நுணுக்கங்கள், அம்பேத்கரிய சிந்தனைகள் போன்றவையே ப்ளூ ஸ்டார் திரைப்படம் மிக அழகாக உருவாவதற்கு காரணம். மிக சிறந்த தயாரித்த பா. ரஞ்சித், ஜெயக்குமார் திரைப்படக்குழு, நடிகர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் பாராட்டுக்களும்.
Comments
Post a Comment