Posts

Showing posts from May, 2024

அசல்புலி

Image
சினிமா என்றாலே பெரிய நட்சத்திர நடிகர்களும் அவர்கள் எப்படி பெரிய நடிகர்களாக வளர்ந்தார்கள் என்றும் தான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் துணை நடிகர்கள் மற்றும் உதிரி காதபத்திரங்கள் மற்றும் ஒரு காட்சியில் கூட்டத்தில் ஒருவராக நடிக்கும் மனிதர்களின் நிலை என்ன? ஒரு திரைப்படம் உருவாகி முடியும் வரை அவர்கள் எப்படி வேலை வாங்கப் படுகிறார்கள்? சண்டைக் காட்சி பாடல் காட்சிகளுக்கு டூப் போடுபவர்களின் வாழ்வாதாரம் என்னென்ன சிரமங்களை கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அசோக மித்ரன் எழுதிய " புலிக் கலைஞன் " சிறுகதை வாசிக்க வேண்டும். புலி வேஷம் போடும் மனிதனின் ஒரு வாய்ப்புக்காக வேலை கிடைக்காதா? அப்படியேய் கிடைத்தாலும் ஒரு நாளைக்கு பசிக்கு உணவு கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்தைதான் கதையில் எழுதியிருக்கிறார். பெரிய ஹீரோ ஹீரோயின் நட்சத்திரங்கள் மட்டும் தான் சினிமா என்று நாம் பொது புத்தியில் உள்ளது அதை மாற்றி சினிமா உலகிற்குள் வாழும் நம்மைப் போன்ற சாமனிய கலை மனிதனின் அன்றாடம் வாழ்க்கை சிரமங்களை எழுதியிருக்கிறார். அசல் புலி போலவே சாகசம் செய்யும் அந்த கலைஞர் வீட்டில் பணம் சம்பாதிக்காததால் மனை...

கிரா திறந்த கதவு

Image
கதவு சிறுகதையை பற்றி நண்பர் ராஜேஷ் குமார் ஒரு இலக்கிய கூட்டத்தில் அறிமுகபடுத்தினார். காமிக்ஸ், துப்பறியும் நாவல்கள் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்த கதையின் தலைப்பு ஆர்வத்தைத் தூண்டியது. ஆனாலும் பல நாட்கள் கழித்து கழுகுமலை சரஸ்வதி நூலகத்தில் கி. ரா வின் சிறுகதைகள் புத்தகத்தில் அதை வாசிக்க நேர்ந்தது. அதன் பிறகான இத்தனை ஆண்டுகளில் மறுபடியும் வாசித்தேன். வீட்டுத் தீர்வை கட்டாததால் வீட்டின் கதவை பறிமுதல் செய்யும் அந்த ஊர் தலையாரி என்ற மனிதன் அதிகார வர்க்கத்தின் அடையாளமாக இருந்தான். எளிய மனிதர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி எப்படிவேண்டுமானாலும் தண்டிக்கலாம் என்ற உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? பஞ்சம் பட்டினி போன்ற இடர் பாடுகளின் போது வேலை வாய்ப்பு எதுவும் இல்லாமல் பணம் கிடைக்காமல் உணவு இல்லாமல் தவிக்கும் போது எப்படி கடன் அடைக்க முடியும்? கடன் கொடுத்தவர்கள் பணம் பலம் படைத்தவர்கள் கொஞ்சம் அதை அனுசரித்து போக மாட்டார்களா? மேலும் அந்த வீட்டின் குழந்தைகள் துள்ளி விளையாடும் ஒரே போக்கிடம் அந்த கதவுதான். அந்த குழந்தைகளுக்கு பணம் கொடுக்காததால் வீட்டின் கதவை பறிமுதல் செய்து எடுத...

கடவுளின் பறவை

Image
கடவுளின் பறவை கடவுளின் பறவை என்கிற சிறுகதை படித்துவிட்டு வீட்டு முன்பாக அடு க்குமாடி குடியிருப்பிற்கு வந்து போகும் புறாக்களை தினமும் பார்க்கப் போய் நின்று விடுகிறேன். அன்றாடம் மதியம் சாப்பிட்டு முடித்ததும் போய் நிற்பேன். புறாக்கள் முனுங்குவதையும் சிறக்கடித்து பறந்து செல்கையில் கேட்கிற படபடக்கிற இசையும் மனதில் இலையைக் கொண்டு தடவி விடு வதையும் போல் உணர முடிந்தது. பொது ஊரடங்கு நாட்களில் மனதின் கொந்தளிப்பும் வெறுப்பும் பெருகும் நேரங்களில் புறாக்களின் சிறக்கடிப்பு இனிய தப்ளா இசைக் கேட்பதை போலவே நிசப்தமாக இருக்கிறது. திரைப்படங்களிலும் கச்சேரியிலும் பக்கவாத்தியமாக இசைக்கப்படும் தப்ளா இசையை தனித்து கேட்பது அலாதியானது. கடவுளின் பறவை என்கிற புத்தகம் வாசிப்பதும் இதை போலத்தான். குறிப்பாக கடவுளின் பறவை சிறுகதை மிக சிறப்பாக எழுதப் பட்டிருக்கிறது. மியா கொளட்டோ எழுதிய இந்தக் கதை பறவைகள் மீது நடத்தப்படும் வன்முறையைப் பற்றி பேசுகிறது. இயற்கை மற்றும் கால நிலை சூழ்நிலைகள் மற்றும் பறவையினங்கள் பற்றிய விழிப்புணர்வு கதைகளாக உள்ளன என்று சொல்லலாம். பஞ்சம் வறுமை இருக்கிற கிராமத்தில் மீன் பி...