கிரா திறந்த கதவு
கதவு சிறுகதையை பற்றி நண்பர் ராஜேஷ் குமார் ஒரு இலக்கிய கூட்டத்தில் அறிமுகபடுத்தினார். காமிக்ஸ், துப்பறியும் நாவல்கள் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்த கதையின் தலைப்பு ஆர்வத்தைத் தூண்டியது. ஆனாலும் பல நாட்கள் கழித்து கழுகுமலை சரஸ்வதி நூலகத்தில் கி. ரா வின் சிறுகதைகள் புத்தகத்தில் அதை வாசிக்க நேர்ந்தது. அதன் பிறகான இத்தனை ஆண்டுகளில் மறுபடியும் வாசித்தேன். வீட்டுத் தீர்வை கட்டாததால் வீட்டின் கதவை பறிமுதல் செய்யும் அந்த ஊர் தலையாரி என்ற மனிதன் அதிகார வர்க்கத்தின் அடையாளமாக இருந்தான். எளிய மனிதர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி எப்படிவேண்டுமானாலும் தண்டிக்கலாம் என்ற உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? பஞ்சம் பட்டினி போன்ற இடர் பாடுகளின் போது வேலை வாய்ப்பு எதுவும் இல்லாமல் பணம் கிடைக்காமல் உணவு இல்லாமல் தவிக்கும் போது எப்படி கடன் அடைக்க முடியும்? கடன் கொடுத்தவர்கள் பணம் பலம் படைத்தவர்கள் கொஞ்சம் அதை அனுசரித்து போக மாட்டார்களா? மேலும் அந்த வீட்டின் குழந்தைகள் துள்ளி விளையாடும் ஒரே போக்கிடம் அந்த கதவுதான். அந்த குழந்தைகளுக்கு பணம் கொடுக்காததால் வீட்டின் கதவை பறிமுதல் செய்து எடுத்துப் போகிறார்கள் என்ற புரிதல் இல்லாத சிறு பிள்ளைகள். அந்த வீட்டின் கதவு இல்லாததால் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கான உணவை கதவில்லாமல் வீடு திறந்திருந்த காரணத்தினால் நாய் சாப்பிட்டுவிட்டு போய்விடுகிறது. பள்ளிக்கு போய்விட்டு திரும்புகிற பையன் பசிக்கிறது கஞ்சி வேண்டும் என்று கேட்க்கும் போது நாய் தின்று விட்டு போய்விட்டது என்பது எவ்வளவு வேதனையான விஷயம். மேலும் வீட்டில் கதவு என்ற ஒன்று எவ்வளவு முக்கியமான விஷயம். மனிதனுக்கு உடை எத்தனை முக்கியம் அதைப் போல வீட்டிற்கு கதவு தேவைப்படுகிறது. நமது ரகசியங்களை, பொருட்களை பாதுகாக்கும் ஒன்றாக இருக்கிறது. கதவில்லாமல் நாம் வாழ முடியுமா? வறுமை பசியும் எத்தனை வீடுகளில் இன்றும் தீர முடியாத பிரச்சனையாக உள்ளது என்பது சிந்திக்க வேண்டிய விஷயம்.
கதவில் ஏறி இறங்கி விளையாடும் குழந்தைகளுக்கு கடன் பிரச்சனையால் அதை கடன்காரன் எடுத்துவிட்டு போய்விட்டான் என்று எப்படி அம்மா அந்த பிள்ளைகளுக்கு சொல்வாள்? பஞ்சம் பட்டினியால் கூலி வேலைக்கு சென்றிருக்கும் அப்பா பல மாதங்களாக வேலை கிடைக்காமல் பணம் அனுப்பவில்லை. கடன் அடைக்க முடியவில்லை என்ற உண்மை குழந்தைகளுக்கு தெரிந்தால் அவர்கள் மனம் எப்படி உடைந்து விடும் என்ற வலியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த அம்மா அப்பாவும் தான் படுகிற கஷ்ட்டத்தை குழந்தைகளிடம் தெரியக் கூடாது ஒரு வேளை தெரிந்து விட்டால் பாவம் அந்த பிள்ளை ஏங்கி போய்விடும் என்றுதான் நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் இருப்பதால் தான் எவ்வளவு வறுமை வந்தாலும் அந்த வீட்டின் குழந்தைகள் படித்து முன்னேறி வருகிறார்கள்.
சின்ன வயதிலேயே வீட்டின் வறுமையை புரிந்து கொண்ட சிறுவர்கள் சீக்கிரம் வயதாகிவிடுகிறார்கள். தனக்கென்று எதுவும் இல்லாமல் குடும்ப சந்தோசமே போதும் என்று வாழத் தொடங்கி விடுகிறார்கள்.

Comments
Post a Comment