Posts

Showing posts from February, 2025

ஒரு மனிதன் ஒரு கப் காபி...!

Image
காபி எத்தனை பேருக்கு பிடித்த பானம்? ஒரு நாளைக்கு நாம் எத்தனை காபி குடிக்கிறோம்? காபி குடித்தால் நல்லதா கெட்டதா? காபி எப்படி உருவாகியது? காபி கொட்டைகள் எங்கு இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது? என்றெல்லாம் நாம் சிந்திக்கலாம். ஆனால் உலகில் அனைவருக்கும் காபி குடிக்க வசதி உள்ளதா என்று நாம் யாரவது சிந்தித்திருக்கிறோமா? காசு கொடுத்து காபி குடிக்க முடியாமல் கஷ்ட்டப்படுகிற மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம் . காலையில் காசு இல்லாமல் காபி கடை முன்பாக அவமானம் படும் மனிதர்களை பார்த்திருக்கிறேன். சிங்கிள் டீ குடிக்க முடியாமல் ஒடுங்கி போய் டீக் கடை முன்பு அமர்ந்திருக்கும் முதியவர்கள் நிறையபேர் உள்ளனர். கடன் கொடுத்து தேநீர் குடித்து விட்டு பணம் இல்லாமல் கடை முதலாளியிடம் திட்டு வாங்கும் மனிதர்கள் அநேகம். உண்மையில் உணவு கிடைக்காத பலரும் காபி குடித்துதான் பசியை போக்கிக் கொள்கிறார்கள். தமிழர்கள் விவசாய பெருங்குடிகளாக வாழ்ந்த காலத்தில் நீராகாரம் குடித்து விட்டு வேலைக்கு போன வரலாறு உண்டு. ஆனால் கால மாற்றாத்தால் ஆரோக்கியமான உணவு முறை மாறி இன்று காபி, தேநீர் என்று வாழ்க்கை ம...

கால்களின் கதை....!

Image
ஓடிய கால்கள் சிறுகதை ஜி. நாகராஜன் எழுதியிருக்கிறார். ஓடிய கால்கள் யாருக்காகவும் நிற்காது. கட்டுப்பாடுக்களையும் எல்லைகளையும் தாண்டிய கால்கள் யாருக்காவும் நிற்காது. சாமானிய மனிதனின் சுதந்திர போக்கை பற்றி ஜி. நாகராஜன் இந்த கதையில் பேசுகிறார். சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்து மாட்டிக் கொண்ட கைதியை காவல் நிலையத்தில் எப்படியெல்லாம் தண்டிக்கிறார்கள் என்ற கதை.  அதில் ஒருவன் பூட்ஸ் காலில் மிதிக்கிறான். இன்னொருவன் அவன் மீது மின்சாரம் பாய்ச்சுகிறான். அனைத்தையும் விட அவனுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் சிறையில் பூட்டி வைத்து அடைக்கிறார்கள். குடிக்க தண்ணீர் கேட்டு நின்ற அவன் முகத்தில் வாளி தண்ணீரை ஊற்றி அசிங்க படுத்துகிறார்கள். அந்த கைதி தப்பிக்க முயற்சி செய்தான் என்ற ஒரு காரணம் தான். மனித வதையின் போது ஏன் அதை இன்னொரு மனிதன் கொண்டாடும் அவலம் இன்றும் தொடர்கிறது?. இந்த கதையில் அந்த கைதி தப்பிச் சென்றால் மூன்று போலீஸ்காரர்களுக்கும் வேலை போய்விடும். அந்த கோபத்தில் அவனை அடித்து பழிவாங்குகிறார்கள். ஏன் ஒருவன் கூட அவன் சட்டத்தை மீறியதற்க்காக அவனை தண்டிக்கவில்லை. அவரவர் ச...

வெள்ளைப் பூக்கள் மலரவே...!

Image
ஈழப் போரின் ஆயுதம் தாங்கிய போராட்ட இயக்கங்களின் கதையையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நாவல். உலகம் முழுவதும் ஈழத் தமிழர்கள் அலைவுறும் வாழ்வின் அவலத்தை நம் தெரிந்து கொள்வதின் வழியாக வரலாற்றின் ஒரு கருப்பு பக்கத்தை வாசிக்கிறோம் என்று சொல்லலாம். எழுத்தாளர் ஷோபா சக்தியின் சிறந்த படைப்பு. போர், இன வெறியால் அப்பாவி மக்கள் ஏன் சாக வேண்டும் என்கிற கேள்வி உங்களை தொந்தரவு செய்யாமல் விடாது? ஈழப் போரின் யுத்தத்தின் பல அப்பாவி தமிழர்கள் கொல்லப் பட்டது முதல் இந்த புத்தகத்தை வாசிப்பது வரை நம் மனதில் உண்டாகும் வலிதான் நம்மை போரின் மீதான அவநம்பிக்கையை காட்டுகிறது. இனவெறி, நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் இன்னொரு சிறுபான்மை இனத்தை அழிப்பது என்பது எந்த வகையில் நியாயம்?  உலகம் முழுவதும் அகதிகளின் வாழ்க்கை நிச்சயமற்றதாக உள்ளது. எறும்புகளை போலவே இருப்பிடம், உணவு, வாழ்வை தேடி அலைகின்றனர். அகதிகள் என்ற காரணத்தாலேயே அவர்கள் புறக்கணிப்படுவதும், அவமதிக்க படுவதும் கொல்லப் படுவதும் மனித வர்க்கத்தின் கோர முகத்தைத்தான் காட்டுகிறது.  போராடும் இரு தரப்புகளுக்கு இடையே எதற்காக போராடுகிறோம் என்ற த...