கால்களின் கதை....!
ஓடிய கால்கள் சிறுகதை ஜி. நாகராஜன் எழுதியிருக்கிறார். ஓடிய கால்கள் யாருக்காகவும் நிற்காது. கட்டுப்பாடுக்களையும் எல்லைகளையும் தாண்டிய கால்கள் யாருக்காவும் நிற்காது. சாமானிய மனிதனின் சுதந்திர போக்கை பற்றி ஜி. நாகராஜன் இந்த கதையில் பேசுகிறார்.
சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்து மாட்டிக் கொண்ட கைதியை காவல் நிலையத்தில் எப்படியெல்லாம் தண்டிக்கிறார்கள் என்ற கதை. அதில் ஒருவன் பூட்ஸ் காலில் மிதிக்கிறான். இன்னொருவன் அவன் மீது மின்சாரம் பாய்ச்சுகிறான். அனைத்தையும் விட அவனுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் சிறையில் பூட்டி வைத்து அடைக்கிறார்கள். குடிக்க தண்ணீர் கேட்டு நின்ற அவன் முகத்தில் வாளி தண்ணீரை ஊற்றி அசிங்க படுத்துகிறார்கள். அந்த கைதி தப்பிக்க முயற்சி செய்தான் என்ற ஒரு காரணம் தான்.
மனித வதையின் போது ஏன் அதை இன்னொரு மனிதன் கொண்டாடும் அவலம் இன்றும் தொடர்கிறது?. இந்த கதையில் அந்த கைதி தப்பிச் சென்றால் மூன்று போலீஸ்காரர்களுக்கும் வேலை போய்விடும். அந்த கோபத்தில் அவனை அடித்து பழிவாங்குகிறார்கள்.
ஏன் ஒருவன் கூட அவன் சட்டத்தை மீறியதற்க்காக அவனை தண்டிக்கவில்லை. அவரவர் சுயநலத் திற்காகவே அடித்து துன்புறுத்து கிறார்கள். உண்மையில் இந்த கதையில் எழுத்தாளர் யாரை நியாயபடுத்த முயற்சிக்கிறார்? என்ற கேள்வி எழும். ஒரு கதையில் யாரை நியாயப் படுத்திகிறோம் என்பதை விட எதை புரிய வைக்கிறோம் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.
தப்பிச் சென்ற கைதிதான் என்றாலும் அவனும் மனிதன்தான் அவனுக்கு தாகத்திற்கு குடிக்க தண்ணீர் வேண்டும். அடித்தால் அவனுக்கும் வலிக்கும் என்று தான் நாகராஜன் நமக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார்.
காவல் நிலையத்தில் அப்பாவி மனிதர்கள் துன்புறுத்தப்படுவதும் மனித உரிமை மீறில்களுக்கு உட்படுவதும் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் அவலம். சாத்தான் குளம் பிரச்சனை, வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் போன்றவை இதற்கு உதாரணம்.
தண்டனைக்கும் சித்ரவதைக்கும் என்ன வித்தியாசம். குற்றத்திற்கு தண்டனை ஒருவகையில் நியாயம்தான். ஆனால் குற்றவாளியாக இருந்தாலும் சித்ரவதை என்பது எந்த வகையில் நியாயம் என்றும் யோசிக்க வேண்டியதிருக்கிறது.
காவல் நிலையம் என்பதே வதைமுகாம் போல இருந்தால் அன்றாட பிரச்சனைகளுக்கு புகலிடம் தேடி வரும் சாமானிய மனிதர்கள் மனதில் எப்படி நம்பிக்கை வரும் என்ற கேள்வி எழுகிறது?
உளவியல் தளத்தில் எப்படி இந்த கதையை அணுகலாம் என்றால் அந்த போலீஸ் காரர்கள் போலவே மன அழுத்தங்கள் நம்மை சுதந்திரத்தை தேடி போக விடாமல் தடுக்கின்றன. அந்த கைதி தப்பியோட முயன்று போலீஸ் இடம் மாட்டிக் கொண்டு வதை படுவதை போல நம் மனதும் பிரச்சனைகளுக்கு தீர்வின்றி அலைவுறுகிறது. அந்த கைதிக்கு கட்டுப்பாடும் அவசியம் சுதந்திரமும் அவசியம் செய்த தவறுக்கு தண்டனையும் அவசியம். அதே போலவே தான் நாமும் நம் மனதும்.
ஒருமுறை தவறு செய்துவிட்டால் இந்த உலகம் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை மன்னித்து விடாது. ஒவ்வொரு முறையும் நம்மை சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கும். நம் நம்மை தினம் தினம் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம். திருந்தி வாழும் மனிதர்களை நம் நம்பவில்லை என்றால் நாமே அவர்களை துன்புறுத்துகிறோம் என்றுதான் பொருள். திரும்ப அதே தவறை செய்யாமல் மன உறுதியோடு வாழ்வை எதிர் கொள்வதுதான் பிரச்சனைக்கு சரியான தீர்வு.

Comments
Post a Comment