ஒரு மனிதன் ஒரு கப் காபி...!
காபி எத்தனை பேருக்கு பிடித்த பானம்? ஒரு நாளைக்கு நாம் எத்தனை காபி குடிக்கிறோம்? காபி குடித்தால் நல்லதா கெட்டதா? காபி எப்படி உருவாகியது? காபி கொட்டைகள் எங்கு இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது? என்றெல்லாம் நாம் சிந்திக்கலாம். ஆனால் உலகில் அனைவருக்கும் காபி குடிக்க வசதி உள்ளதா என்று நாம் யாரவது சிந்தித்திருக்கிறோமா? காசு கொடுத்து காபி குடிக்க முடியாமல் கஷ்ட்டப்படுகிற மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம் .
காலையில் காசு இல்லாமல் காபி கடை முன்பாக அவமானம் படும் மனிதர்களை பார்த்திருக்கிறேன். சிங்கிள் டீ குடிக்க முடியாமல் ஒடுங்கி போய் டீக் கடை முன்பு அமர்ந்திருக்கும் முதியவர்கள் நிறையபேர் உள்ளனர். கடன் கொடுத்து தேநீர் குடித்து விட்டு பணம் இல்லாமல் கடை முதலாளியிடம் திட்டு வாங்கும் மனிதர்கள் அநேகம்.
உண்மையில் உணவு கிடைக்காத பலரும் காபி குடித்துதான் பசியை போக்கிக் கொள்கிறார்கள். தமிழர்கள் விவசாய பெருங்குடிகளாக வாழ்ந்த காலத்தில் நீராகாரம் குடித்து விட்டு வேலைக்கு போன வரலாறு உண்டு. ஆனால் கால மாற்றாத்தால் ஆரோக்கியமான உணவு முறை மாறி இன்று காபி, தேநீர் என்று வாழ்க்கை மாறிவிட்டது . ஆண்களை போலவே வீட்டில் பெண்களுக்கும் காலையில் காபி குடித்தால் தான் வேலை ஓடும். ஒரு நாளை புத்துணர்ச்சியாக ஆரம்பிக்க உதவியாக இருக்கும். கட்டிட வேலைக்கு போகிற பெண்கள், வயல் அறுப்பு வேலைக்கு போகிறவர்கள், கூலித் தொழிலாளி அனைவருக்கும் காலையில் காபியோ தேநீரோ எவ்வளவு முக்கியம் என்பது நாம் அன்றாடம் பார்க்கும் முக்கிய நிகழ்வுதான்.
இந்த கதையில் கூட ஒரு கப் காபி கிடைக்காமல் அல்லல் படும் மனிதனின் கதையைத் தான் எழுத்தாளர் குறிப்பிடுகிறார். பணமில்லாததால் சொந்த தம்பிக்கும் அண்ணனனுக்கும் இடையில் பிளவு ஏற்படுகிறது. வீட்டில் குடிக்க காபி தூள் இல்லை. ஆனால் அவருக்கு காபி குடிக்காமல் இருக்க முடியவில்லை நண்பர்களை பார்க்க போனால் ஒரு கப் காபி கிடைக்கும் என்று அப்பாவு நினைக்கிறான். வேலையில்லா திண்டாட்டம் எப்படியெல்லாம் மனிதர்களின் வாழ்வை வதைக்கிறது என்று புரிந்து கொள்கிறோம். ஊருலிருந்து அப்பாவுவின் நண்பர் வருகிறார். அவர் அப்பாவுவின் பால்ய கால நட்பினை நினைவு கூறகிறார். அப்பாவு பண மில்லாமல் கஷ்ட்டப்படுகிறார் ஏன் ஒரு கப் காபி குடிக்க கூட முடியாத நிலை . ஆனால் நண்பர் பேசிக் கொண்டே யிருக்கிறார். அப்பாவு வசதியாக இருப்பதை போலவே இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு அப்பாவுவின் நிலைமை தெரியவில்லை . மேலும் சாப்பிட்டிற்கே வழி இல்லாத நேரத்தில் ஒருவர் வந்து நம்மை பற்றி சுய பெருமை பேசினால் மனம் எப்படியெல்லாம் குமுறும் என்று அழகான உளவியல் பார்வை நமக்கு கிடைக்கிறது. அப்பாவுக்கு வேண்டியதெல்லாம் ஒரு கப் காபி தான் சுய பெருமை வேண்டாம். நமக்கு நெருக்கடியான நேரத்தில் நமது பிரச்சனையை புரிந்து கொண்டு உதவி செய்பவர்களைக் காட்டிலும் வீணாக நம்மை புகழ்ந்து பேசுவது நம்மை மன அவஸ்தைக்கு உள்ளாக்குகிறது. கதை வாசிக்கையில் பகடியாக இருந்தாலும் ஆழமாக நமக்கு வறுமையின் வலி தெரிகிறது. ஒரு கப் காபியின் வழியே ஒரு மனிதனின் வறுமையையும் வாழ்க்கையையும் பதிவு செய்தது பெரிய பணி. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு அன்பும் நன்றியும்.

Comments
Post a Comment