அசல்புலி


சினிமா என்றாலே பெரிய நட்சத்திர நடிகர்களும் அவர்கள் எப்படி பெரிய நடிகர்களாக வளர்ந்தார்கள் என்றும் தான் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் துணை நடிகர்கள் மற்றும் உதிரி காதபத்திரங்கள் மற்றும் ஒரு காட்சியில் கூட்டத்தில் ஒருவராக நடிக்கும் மனிதர்களின் நிலை என்ன? ஒரு திரைப்படம் உருவாகி முடியும் வரை அவர்கள் எப்படி வேலை வாங்கப் படுகிறார்கள்? சண்டைக் காட்சி பாடல் காட்சிகளுக்கு டூப் போடுபவர்களின் வாழ்வாதாரம் என்னென்ன சிரமங்களை கொண்டுள்ளது என்று தெரிந்து கொள்ள அசோக மித்ரன் எழுதிய " புலிக் கலைஞன் " சிறுகதை வாசிக்க வேண்டும். புலி வேஷம் போடும் மனிதனின் ஒரு வாய்ப்புக்காக வேலை கிடைக்காதா? அப்படியேய் கிடைத்தாலும் ஒரு நாளைக்கு பசிக்கு உணவு கிடைத்து விடாதா? என்ற ஏக்கத்தைதான் கதையில் எழுதியிருக்கிறார். பெரிய ஹீரோ ஹீரோயின் நட்சத்திரங்கள் மட்டும் தான் சினிமா என்று நாம் பொது புத்தியில் உள்ளது அதை மாற்றி சினிமா உலகிற்குள் வாழும் நம்மைப் போன்ற சாமனிய கலை மனிதனின் அன்றாடம் வாழ்க்கை சிரமங்களை எழுதியிருக்கிறார். அசல் புலி போலவே சாகசம் செய்யும் அந்த கலைஞர் வீட்டில் பணம் சம்பாதிக்காததால் மனைவியிடம் திட்டு வாங்குவதும் அவமானப்படுத்த படுவதும் கலை சார்ந்த மனிதர்களின் கையறு நிலையை எடுத்துச் சொல்கிறது. சமூகம் அவர்களை அப்படித்தான் நடத்துமா என்றால் அதற்கு என்ன பதில் என்று சொல்ல தெரியவில்லை. எல்லோராலும் பணத்தை சம்பாதிக்க முடியாது என்பதும் உண்மை. திறமையான கலைஞர்கள் பலரும் அவர்கள் வாழக்கையில் பணம் சம்பாதிக்க முடியாத காரணத்தினாலேயே அடையாளம் தெரியாமல் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகின்றனர். சினிமா, கலை சார்ந்த ரசனை உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சிறுகதை.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )