பணம் தின்னும் ஓநாய்.. ✍️

Movie : The Wolf of Wallstreet - Martin Scorses

மனிதனின் பேராசை அவனை எப்படியெல்லாம் நடந்துகொள்ள வைக்கும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். ஆசை மனிதனை இயக்குகிறது. எதிர்பார்ப்புகளையும் தேவையையும் அதிகரிக்கிறது. அதன் விளைவாக மனிதன் வெறிபிடித்த மிருகத்தன்மை அடைகிறான். இதன் மூலம் மனிதனை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஆசை கொண்ட மனிதன், பசியால் வாடும் மனிதன் என்று. பசி மனிதனின் மனிதத் தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது? உணவு கிடைக்காத பசியால் வாடும் மனிதன் எப்படியெல்லாம் பாதிக்கப் படுகிறான் பசியின் பொருட்டு என்னென்ன குற்றங்கள் செய்கிறான் என்று தெரியும். குற்றமே தண்டனை நாவலில் ராஸ்குல்நிக்கோவ் பசியால் வாடும் மனிதன். ஆனால் அவன் குற்றவாளியோ பேராசை பிடித்தவனோ இல்லை.

மார்ட்டின் கோர்ஸ்ஸ் இயக்கிய the wolf of wall street திரைப்படம் ஆசை கொண்ட மனிதனை பற்றிய படம். இதில் ஜோர்டன் பணத்தாசை பிடித்தவன். மனிதனின் தேவைகள் வெறும் போதையும் பெண்களின் உடற்சுகமும் மட்டுமே என்று வாழும் மனிதனின் கதை. திரைப்படம் முழுக்க அன்றாடம் அவன் சந்திக்கும் பெண்களோடு எல்லாம் உடலுறவு கொள்வது போதை பொருள் உட்கொள்வது என்று திரிகிறான். ஆனால் அதெல்லாம் விட ஒரு தொழில் முனைவோர் பணம் சம்பாதிக்கும் மில்லியனர்ஸ் வாழ்க்கை எப்படிப்பட்டது என்று இந்த படம் சொல்கிறது. மக்களை ஏமாற்றி அவர்கள் செய்யும் மோசடிகளும் குற்றங்களும் நிறைந்த உலகத்தை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

பணம் பேராசை பிடித்த மனிதன் அதை தவறான வழியில் மக்களை ஏமாற்றி சம்பாதித்து அதை கிடைத்து விட்டால் என்னென்ன செய்வான் எப்படி நடந்து கொள்வான் என்பதை பற்றிய கதையை மிக நுட்பமாக காட்சி படுத்தியிருப்பார். விற்பனை பிரதிநிதி ஒரு பொருளை விற்பதற்கு எப்படியெல்லாம் மோசடி செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லியிருப்பார் மார்ட்டின்.
பணம் அதிகம் கிடைக்க போதை, பெண்கள் என்று அவன் வெறி பிடித்தவனாக மாறுவான் என்று புரிந்து கொள்ளலாம்.

பணம் ஏன் முக்கியம்? பணத்தின் தேவை என்ன? பணம் அதிகம் கிடைத்த மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? பேராசை பிடித்த மனிதர்கள் எப்படி ஏமாற்றுவதையும் மோசடியையும் தவறில்லை பணம் சம்பாதித்தால் மட்டும் போதும் என்று எப்படி கருதுகிறார்கள் அதன் பின்னணியான கருத்தியல்கள் என்ன? என்று இந்த திரைப்படம் சொல்கிறது. 
படம் முழுக்க கேலியும் சிரிப்புமாகத் தான் போகும் ஜாலியான திரைக்கதை. ஆனால் அந்த சிரிப்பின் வழியே மனசாட்சியை தொட முயற்சி செய்கிறார் மார்ட்டின். மனித அறம், ஒழுக்கம், மனிதாபிமானம், கட்டுப்பாடு, காதல், அன்பு குடும்ப வாழ்க்கை அமைதி நிம்மதியான வாழ்க்கை பொது நியாயம் எல்லாத்திற்கும் என்னதான் அர்த்தம்? என்று இந்த படம் பார்க்கும் போது கண்டிப்பாக தோன்றும்.

உலகம் எதை தேவை, வெற்றி சாதனை மகிழ்ச்சியான வாழ்க்கை என்று தீர்மானிக்கிறது? அல்லது நாம் நம் வாழ்வின் அர்த்தத்தை குறிப்பாக மனித நடத்தையின் அர்த்தத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறோம் என்று நம்மை நீண்ட சிந்தனைக்கு உட்படுத்தும்.

பணம் அளவுக்கு அதிகமாக பணம் கிடைத்துக் கொண்டே இருந்தால் நாம் என்ன செய்வோம் எப்படி நடந்து கொள்வோம். என்பதை தெளிவாக படத்தில் காட்சிபடுத்தியிருப்பார் மார்ட்டின்.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )