பச்சை மனிதன்....!
கருப்பு நிறம் மறுப்பின் அடையாளமாக இருக்கிறது. காவி நிறம் துறவின் அர்த்தத்தை கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு நிறத்தோடும் மனிதன் தன் வாழ்வை பிணைத்து வைத்திருக்கிறான். மழை தூரலின் போது வானவில் தோன்றும் நாட்களில் மனதிற்கு குதூகலமாகயிருக்கிறது.
இந்த கதையில் வெயிலில் பாறையின் மீது அமர்ந்த படி சூரியனை பார்த்து விட்டு ஒருவனுக்கு பார்வை பறி போகிறது. அந்த தாக்கத்தில் எந்த பொருளை பார்த்தாலும் பச்சையாக தெரிகிறது. இதனால் அவன் வாழ்வில் சந்தோசம் பறி போகிறது. பார்வை போனதால் பள்ளிக்கு போக முடியவில்லை. கடைசியில் அவன் அப்பா அவனை வெறுக்கிறார். காது கேளாத ஓரு பெண்ணை அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். ஆனால் அந்த பொண்ணும் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகிறது. அந்த பச்சை அவன் துயர வாழ்வின் அடையாளமாகவே மாறி போய்விடுகிறது. எளிய கதையில் உடற் குறை கொண்ட மனிதர்களின் மனதையும் நிறங்களுக்கும் மனித மனதிற்கும் உள்ள தொடர்பையும் விளக்கி காண்பிக்கிறார் எழுத்தாளர் லா. சா. ரா.
மனித மனம் விசித்திரங்களால் எப்படி நிறைந்துள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது . குறிப்பாக உடற் குறைபாடு கொண்டவர்களின் வலியை நாம் கேலி செய்யாமல் அதன்
பின்னால் உள்ள அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டால் அனைவர் மீதும் நாம் சகோதரத்துடனும் பரிவோடும் நடந்து கொள்ள முடியும்.
Comments
Post a Comment