கார்ல் மார்க்ஸ் காதல்....!

ரொமானிய நாட்டில் கிளாடியஸ் எனும் மன்னன் திருமண தடை சட்டத்தை அறிவிக்கிறான். அதை மீறி காதலிப்பவர்கள், திருமணம் செய்பவர்கள் தண்டிக்கப் படுகிறார்கள். அதை கண்டு பயப்படாத கவிஞர் valentine மன்னனுக்கு எதிராக போராடி ரகசியமாக நிறைய திருமணங்கள் செய்து வைக்கிறார். ஆனாலும் மன்னன் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கபடுகிறது. மேலும் சிறைகாவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுவிற்கும் அவருக்கும் காதல் ஏற்படுகிறது. உடனே அவளுக்கு முதல் காதல் கடிதம் அதாவது greetings கார்டு
அனுப்பி வைக்கிறார் . இதை அறிந்த அரசன் அவரை கல்லால் அடித்து தலையை துண்டித்து கொடுரமாக கொலை செய்து விடுகிறான் . நாம் கொண்டாடி வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தின் வரலாறு இதுதான். முதன் முதலில் காதலை காதல் வாழ்த்து அட்டை மூலம்
தெரிவித்த valentine ஒரு புனிதர் மற்றும் சமூக போராளியாகவே வாழ்ந்திருக்கிறார்.. காதலுக்காக கொலை செய்யப்பட்ட மனிதரும் அவரே. காதல் ஒரு தைரியம். சாதி, மதம், அதிகார வர்க்கம், ஏன் இயற்கை கடவுளே தடுக்க நினைத்தாலும் எதிர்த்து காதலுக்காக வாழ்ந்து தோற்று போனவர்கள் தான் உலகில் அதிகம் பேர். உண்மையாக காதலிக்கும் அனைவரும் வீரர்கள்தான்.

ஒரு வாரத்திற்கு முன்பு கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையை கேட்டேன். அதில் கார்ல் மார்க்ஸ் ஜென்னி இருவருக்கும் இடையேயான காதலை பற்றி சொன்னார். வாழ்நாள் முழுவதும் கார்ல் மார்க்ஸை உயிருக்கு உயிராக ஜென்னி காதலித்திருக்கிறார். உலகம் முழுவதும் அவர்கள் துரத்தப் பட்டாலும் வறுமையால் வாடிய போதும் ஜென்னி கார்ல் மார்க்ஸை ஆழமாக காதலித்தார். இருவரும் ஒன்றாக சிந்தித்தார்கள். கார்ல் மார்க்ஸ் எனும் மாபெரும் ஆளுமை உருவாக ஜென்னி முக்கியமான காரணம். திருமணம் முடிந்து தேனிலவு போன போதும் கூட வண்டி நிறைய புத்தகத்தை எடுத்து சென்ற ஜென்னி மார்க்ஸ் புத்தகம் வாசித்து முதலிரவை கொண்டாடுகிறார்கள் என்ற தகவலை சொன்னார். மார்க்ஸ் மற்றும் ஜென்னி அற்புதமான காதலர்கள். வறுமையால் அவர்கள் குழந்தைகள் ஒவ்வொருவராக மரணித்தார்கள். கடன் பிரச்சனையால் மார்க்ஸ் வீட்டில் உள்ள பொருட்களை யெல்லாம் கடன் காரர்கள் அபகரித்து சென்றனர். மேலும் ஜென்னிக்கும் மார்க்ஸ் இருவரும் நோயாளிகள். வீட்டில் வறுமை. பொதுவுடமை சித்தாந்தம், தொழிலாளர் வர்க்க போராட்டம், உழைப்பாளிகளை சுரண்டும் முதலாளிகளை எதிர்ப்பதால் பல தரப்பில் இருந்து மார்க்ஸை எதிர்த்தார்கள். உண்மைக்காக நியாயத்திற்காக வாழ்ந்த கார்ல் மார்க்ஸ் வாழ் முழுவதும் துரத்தப் பட்டார். போராடிதான் வாழ்ந்தார். மார்கஸ் வாழ்வின் அத்தனை போராட்டத்திலும் கஷ்டத்திலும் உடன் இருந்தது ஜென்னிதான். ஜென்னியின் காதல்தான் உண்மையானது. உண்மையான காதல் உலகத்தையே மாற்றி புரட்சி செய்யும் என்பது நிஜம் தான்.


இன்றைக்கு சமூகத்தில் பொருளாதார பிரச்சனையால் சாதி மத கோட்பாட்டினால் எத்தனை ஆண்பெண் காதலித்து இன்னலை சந்தித்திருக்கிறார்கள். ஆணாதிக்க சூழல் நிறைந்த சமூகத்தில் படித்து முன்னேறி பெண்கள் சுதந்திரமாக வேலைக்கு போகிறார்கள் காதலிக்கிறார்கள். இன்றைக்கும் குடும்ப சுமை, சாதி பிரச்சனை, பொருளாதாரம் அந்தஸ்து காரணமாக நிறைய இளைஞர்கள் காதல் உறவு வெற்றி அடைவதுமில்லை காதலிப்பவர்கள் சேர்ந்து வாழ்வதும் இல்லை.  ஆனால் இன்றும் கூட காதலித்து திருமணம் செய்து கொண்டு அன்பாகவும் ஒற்றுமையாகவும் வாழுகிறார்கள். பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு காதல் இல்லையென விவாகரத்து வரை போகிறார்கள். அல்லது வேறொரு காதல் வந்து விடுகிறது. காதல் என்கிற பெயரில் உடற்சுகத்திற்காகவும் உல்லாசத்திற்காகவும் சுய நலப் போக்கொடு நிறைய குற்றங்கள் நடக்கின்றன. இருப்பினும் அநேக மனிதர்கள் ஆழ்ந்த புரிதலோடு ஒற்றுமையாக வாழ்வதை பார்க்க முடிகிறது. காதலின் வலிமை அப்படி. ஆனால் பிரிந்து சென்றவர்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்களின் உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் மறந்துவிட்டு எளிதாக இன்னொரு வாழ்வை தொடங்குபவர்களும் உண்டு. திருமணத்திற்கு பிறகு வேறொரு நபரை காதலிக்கும் மனிதர்களும் உண்டு. எது எப்படியாக இருந்தாலும் காதல் சரியா? தவறா? என்று யோசிப்பதை விட தேவையா? தேவையில்லையா என்று யோசிக்கலாம் என்று நினைக்கிறேன். மன உறுதியும் நம்பிக்கையும்தான் நல்ல உறவிற்கு அடையாளம். அப்படியான மனிதர்கள் பிரிவதேயில்லை. குறிப்பாக காதல் மரபை மீறி புரட்சி செய்யவும் மனிதர்களை தானே உருவாக்குகிறது.

Comments

Popular posts from this blog

செகண்ட் ஷோ நினைவுகள்

சுருளி நினைவுகள் பகுதி -1

சுருளி நினைவுகள் பகுதி -2 : ( கடவுள் எனும் நண்பன் )